Search This Blog

Friday, March 14, 2014

Vendakkai Curry

வெண்டைக்காய் கறி : மிக மிக எளிதில் செய்யகூடியதும் சுவையானதும் ஆகும் இந்த கறி !! எல்லோராலும் விரும்பப்படுவதும் ஆகும்.

வெண்டைக்காய் கறி

தேவையான பொருட்கள் :
1/4 kg                                       வெண்டைக்காய், கழுவி பொடியாக நறுக்கவும்.
1 மத்திய அளவு                 வெங்காயம்
1 Tsp                                        சாம்பார் மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ]
1/2 Tsp                                     உப்பு
1/2 Tsp                                    கடுகு
1 Tsp                                       உளுத்தம் பருப்பு
2 Tsp                                       எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு பின்னேர் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
சற்றே வதங்கிய பின்னர் சாம்பார் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும்.
பிறகு வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறி மூடி போட்டு 1 நிமிடம் வரை வேக விடவும்.
ஒரு நிமிடம் ஆனதும் மூடியை அகற்றி விடவும்.
காய் வதங்கும் வரை கிளறி விடவும்.
நன்கு வதங்க 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வெண்டைக்காய் கறி

சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற கறியாகும்.






No comments:

Post a Comment