வாழைத்தண்டு துவட்டல் :
வாழை மரத்தின் அனைத்து பொருட்களுமே உபயோகமானதாகும். தண்டு நார் சத்து மிகுந்தது. மேலும் அதிக நீர் சத்து உடையதாகவும் இருக்கிறது. சிறுநீரக கல்லை கரைக்கும் சக்தி கொண்டதாகும். அவ்வப்போது இதனை சமையலில் சேர்த்துக் கொள்வது நலமாகும்.
மிக மிக எளிதான துவட்டல் ! பச்சை பருப்பு சேர்த்து செய்யும் போது சுவையோ மிக மிக அருமை!!! இனி எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
20 cm நீளமான வாழை தண்டு
1/8 கப் பச்சை பருப்பு, பத்து நிமிடம் ஊறவைக்கவும்
1 சிறிய அளவு வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1 Tsp காரட் துருவியது
1 அ 2 சிவப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
2 சிட்டிகை மஞ்சத்தூள்
6 கருவேப்பிலை
2 Tbsp கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
1 Tsp எண்ணெய்
1 Tbsp தேங்காய் துருவல்
செய்முறை :
மேலே தண்டை மூடியிருக்கும் தோலை அகற்றவும்.
குறுக்காக வட்ட வட்டமாக நறுக்கி நாரை நீக்கவும்.
பிறகு ஒரே மாதிரி அளவுடன் கூடிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். பின்னர் மிளகாய் துண்டுகளையும் உளுத்தம் பருப்பையும் சேர்க்கவும்.
அடுத்து மஞ்சத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தண்ணீரை வடித்து விட்டு பருப்பை சேர்த்து சில மணி துளிகள் வதக்கி, பிறகு
உப்பு மற்றும் அரிந்து வைத்துள்ள காய், துருவிய காரட் சேர்த்து கிளறி மூடியிட்டு வேகவைக்கவும்.
எளிதில் வேகக் கூடியதாகையால் மிகுந்த நேரம் எடுக்காது.
வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற துவட்டலாகும்..
No comments:
Post a Comment