பரங்கிக்காய் பொரியல் : பரங்கிக்காயை மஞ்சை பூசணி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த காய் நீர் சத்து அதிகம் உள்ள காயாகும். அதனால் பொரியல் செய்து முன்பே வைத்தால் நீர் விட்டு சொத சொதவென ஆகிவிடும்.அதனால் சூடாக செய்த உடனேயே சாப்பிட்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
இனி எவ்வாறு செய்யலாம் என காணலாம்.
தேவையான பொருட்கள் :
1 1/2 கப் பரங்கிக்காய் துண்டுகள்
1 வெங்காயம், பொடியாக அரியவும்.
1 அ 2 சிகப்பு மிளகாய்
1 Tsp பச்சை பட்டாணி
1/2 tsp கடுகு
1 Tsp உளுத்தம் பருப்பு
2 Tsp தேங்காய் துருவல்
8 கறுவேப்பிலை
சிறிது கொத்தமல்லி தழை
1 Tsp எண்ணெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடேறியதும் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை உடைத்து சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இப்போது பச்சை பட்டாணி மற்றும் பரங்கிக்காய் துண்டுகளை சேர்த்து சில மணி துளிகள் வதக்கவும்.
பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு காயை வேக விடவும்.
காய் மிக எளிதில் சீக்கிரமே வெந்து விடும்.
நடுவில் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.
வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
மதிய உணவின் போது சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
||||||
|
|
இந்த சமையல் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களும் பயனடையும் விதமாக கீழே உள்ள பெட்டியின் வாயிலாக முகநூல், கூகுள் மற்றும் சில சமூக வலைதளங்களில் பகிரவும்.
இங்கு தங்கள் கருத்தையும் பதிவிடவும். நன்றி.
No comments:
Post a Comment