Search This Blog

Wednesday, March 26, 2014

Bitter Gourd Spicy Curry

#பாகற்காய்காரகறி : இந்த பதிவு #பாகற்காய் பிரியர்களுக்கு மட்டுமே! பாகற்காயை விரும்பி உண்பவர்கள் மிக மிக சொற்பமானவர்களே!! எனினும் அந்த சொற்ப நபர்களுக்காகவே இந்த சமையல் குறிப்பு.

இனி எப்படி என பார்க்கலாம்.

பாகற்காய் கார கறி

தேவையான பொருட்கள் :
3 அ 4                                           பாகற்காய் [ பாவக்காய்]
1 Tsp                                             சாம்பார் மிளகாய் தூள்
1 சிட்டிகை                               மஞ்சத்தூள்
1/2 Tsp                                          உப்பு
1 Tsp                                             சர்க்கரை

தாளிக்க :
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
2 Tsp                                             எண்ணெய்

செய்முறை :
பாகற்காயை கழுவி வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அதன் பி சாம்பார் மிளகாய் தூள், மஞ்சத்தூள் இரண்டையும் சேர்த்து உடனேயே 3 Tbsp தண்ணீர் சேர்க்கவும்.


இப்போது உப்பு சேர்த்து பாவக்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.


அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
பாகற்காய் வெந்ததும் மூடியை எடுத்து விடவும்.
சர்க்கரையை தூவி கிளறி விடவும்.


தண்ணீர் சுண்டி வரும் வரை கிளறி இறக்கவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

பாகற்காய் கார கறி

சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.







மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
சுண்டைக்காய்மசாலாகறி
சுண்டைக்காய்
மசாலாகறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

No comments:

Post a Comment