Search This Blog

Showing posts with label curd. Show all posts
Showing posts with label curd. Show all posts

Saturday, April 26, 2014

Vazhai Thandu Thayir Pachadi

#வாழைத்தண்டுதயிர்பச்சடி :  #வாழைத்தண்டு உடலுக்கு மிக மிக நல்லது. சிறுநீரக கல்லையே கரைக்கக்கூடிய தன்மை உடையது. நார் சத்தும் தண்ணீர் சத்தும் அதிகமாகக் கொண்டதாகும். வாழைத்தண்டு பொரியல்தான் இதனை கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். தற்போது வாழை தண்டு ஜூஸ் மிக பிரபலமாக உள்ளது.
இந்த வாழை தண்டை உபயோகித்து தயிர் பச்சடி எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

வாழைத்தண்டு தயிர்பச்சடி

தேவையான பொருட்கள் :
4 Tsp                                     வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது
1 Tsp                                     காரட் துருவியது
2 Tsp                                     வெங்காயம் பொடியாக அரிந்தது
1 Tsp                                    கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1                                            பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
10                                          கறுவேப்பிலை
1/2 கப்                                 தயிர்
1/2 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1/2 Tsp                                 கடுகு
1 Tsp                                    உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                 எண்ணெய்

செய்முறை :
எல்லாவற்றையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலக்கவும்.


தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 1/2 Tsp எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து பச்சடியின் மேலே கொட்டவும்.

வாழைத்தண்டு தயிர்பச்சடி

புலாவ்பிரியாணிபிசிபேளே பாத் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையான பச்சடி.






மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

வாழைப்பூ வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் 
பச்சடி
பப்பாளி கேரட் சாலட்
பப்பாளி கேரட்
சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
பப்பாளி முள்ளங்கி சாலட்
மாங்காய் பச்சடி
மாங்காய்
பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி





Tuesday, December 3, 2013

Shrikhand

#ஸ்ரீகண்ட் என்பது தயிரில் உள்ள தண்ணீர் அனைத்தையும் நன்கு வடி கட்டி எடுத்து விட்டு சர்க்கரை சேர்த்து செய்வதாகும். சென்ற முறை மும்பை சென்ற போது சாப்பிட்டேன். அதனால் செய்து பார்த்து விடலாம் என இறங்கினேன். மிக மிக நன்றாக வந்தது. இதோ எப்படி என பார்ப்போம்.

ஸ்ரீ கண்ட்

 தேவையான பொருட்கள் :
புளிக்காத தயிர்                      : 1/2 கப்
ரோசே எசென்ஸ்                   : 1 துளி
சர்க்கரை பொடி                      : 1 Tbsp
குங்குமப்பூ                                : 4 ( அ ) 5 இழைகள்

அலங்கரிக்க :
அன்னாசி துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்கள்.

செய்முறை :
தயிரை ஒரு டீ வடிகட்டி வழியாகவோ அல்லது மெல்லிய துணி வழியாகவோ வடிகட்டி அப்படியே பிரிட்ஜில் வைக்கவும்.


எஞ்சியுள்ள தண்ணீர் இறங்கவும் மேலும் புளிக்காமல் இருக்கவும் பிரிட்ஜில் வைக்கவும்.
பிறகு வெளியே எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு மற்ற பொருட்களுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
வேறு கிண்ணத்தில் வைத்து பழங்களால் அலங்கரிக்கவும்.

ஸ்ரீ கண்ட்

நல்ல மதிய உணவிற்கு பிறகு சுவைக்கவும்.







மற்றும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
குலாப் ஜாமூன்
குலாப் 
ஜாமூன்
ஆளிவிதை உருண்டை
ஆளிவிதை உருண்டை
இன்ஸ்டன்ட் தூத் பேடா
இன்ஸ்டன்ட் தூத் பேடா
பயத்தம் பருப்பு உருண்டை
பயத்தம் பருப்பு உருண்டை


Friday, November 29, 2013

More Kuzhambu

#மோர்க்குழம்பு : இந்த #குழம்பு தயிர் கொண்டு செய்யப்பட்டாலும் தயிர் குழம்பு என கூறப்படுவதில்லை. மோர்க்குழம்பு என்றே அழைக்கப்படுகிறது. #வெண்டைக்காய், கத்தரிக்காய், பூசணி, சுரைக்காய் , சேனை போன்ற சில காய்கறிகளே மோர் குழம்புக்கு ஏற்றவை ஆகும். புளித்த தயிரை விட புளிக்காத தயிரில் செய்யும் போதுதான் அருமையான  சுவையுடன் இருக்கும்.
இங்கு வெண்டைக்காயை கொண்டு எவ்வாறு மோர்க்குழம்பு செய்யலாம் என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
தயிர்                                           : 1 கப்
வெண்டைக்காய்                  : 7 ( அ ) 8
இஞ்சி துண்டு                         : 1/2 அங்குலம்
பெருங்காயம்                         : சிறு துண்டு
மஞ்சத்தூள்                             : 3 சிட்டிகை

 அரைக்க தேவையான பொருட்கள் :


தேங்காய் துருவல்                : 3 Tsp
சீரகம்                                           : 1 Tsp
மல்லி                                          : 1/2 Tsp
மிளகு                                           : 6 ( அ ) 7
பச்சை மிளகாய்                       : 1
சிகப்பு மிளகாய்                        : 1
கடலை பருப்பு                          : 1 Tsp
பச்சரிசி                                         : 1/2 Tsp
பூண்டு பற்கள்                            : 2
சின்ன வெங்காயம்                 : 5 ( அ ) 6
கடலை பருப்பு, பச்சரிசி, மல்லியை அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

தாளிக்க :
கடுகு                                              : 1/2 Tsp
சீரகம்                                             : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                       : 1 Tsp
பெருங்காயம்                             : சிறு துண்டு
கருவேப்பிலை                           : 10
எண்ணெய்                                    : 1 Tsp

செய்முறை :
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியினால் அடித்துக் கலக்கி பெருங்காயம் மற்றும்  இஞ்சியை இடித்து சேர்க்கவும். தனியே வைக்கவும்.
மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைக்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு வெண்டைக்காயை துண்டுகளாக்கி சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை மஞ்சத்தூள், காய்க்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.


காய் வேகும் வரை வாணலியை ஒரு தட்டினால் மூடவும்.


வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
கரண்டியால் கலக்கி விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை சிறியதாக்கி ஒரு கொத்தி வரும் வரை கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஓரிரண்டு மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கிள்ளி போடவும்.


வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பின் சீரகம், சிகப்பு மிளகாய் துண்டுகள்,உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை தாளித்து மோர் குழம்பின் மேல் ஊற்றவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.


சூடான சாதத்தில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து பிடித்தமான கறியுடன் சாப்பிட்டால் ம்ம்ம்....... சுவையே தனிதான்!!...






மேலும் சில சுவையான குழம்பு வகைகள் :

பூசணிக்காய் மோர்க்குழம்பு
பூசணிக்காய் 
மோர்க்குழம்பு

morekuzhambu
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு
கடப்பா
கடப்பா - இட்லிக்கு தொட்டுக்க
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு