Search This Blog

Monday, November 17, 2014

Kothavarangai-Paruppu-Usili

#கொத்தவரங்காய்பருப்புசிலி : #கொத்தவரங்காய் அல்லது #கொத்தவரைக்காய் #பருப்புசிலி செய்ய மிகவும் ஏற்றதாகும்.
இதன் செய்முறையை இரு பாகங்களாக பிரிக்கலாம். பருப்பை ஊற வைத்து மசாலாவுடன் சேர்த்து அரைத்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
பிறகு வேக வைத்த கொத்தவரங்காயுடன் அடுப்பில் பிரட்டி எடுக்க வேண்டும்.
இனி விரிவாக காண்போம்.

கொத்தவரங்காய் பருப்புசிலி [ Cluster Beans Lentil Masala Curry ]

தேவையான பொருட்கள் :
1/4 kgகொத்தவரங்காய் [ Cluster Beans ]
1 சிட்டிகைமஞ்சத்தூள்
1/2 Tspசாம்பார் பொடி
1/2 Tspஉப்பு [ adjust ]
ஊறவைக்க வேண்டியவை :
2 Tbspதுவரம் பருப்பு
2 Tbspகடலை பருப்பு
மசாலாவிற்கு :
3 Tspதேங்காய் துறுவல்
2 or 3சிகப்பு மிளகாய்
1 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1/2 Tspமல்லித்தூள்
2 பற்கள்பூண்டு 
4 or 5சின்ன வெங்காயம்
1வெங்காயம்
10கறுவேப்பிலை
20 to 25புதினா இலைகள்
1 Tbspகொத்தமல்லி தழை
1/2 Tspஉப்பு
தாளிக்க :
1 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tspஎண்ணெய்


அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி

செய்முறை :
ஊற வைத்த பருப்பு வெங்காயம் நீங்கலாக மற்றவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
சிறிது தண்ணீர் [ மிகவும் குறைவாக ] பின்னர் சேர்த்து நன்கு அரைக்கவும்.


இப்போது தண்ணீரை வடித்து விட்டு பருப்பு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
ஒன்றிரண்டாக உடைபடுமாறு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.  

இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள பருப்பு மசாலாவை பரப்பி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுள்ளே வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.


வெந்ததும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.



ஆவியில் மசாலா வெந்து கொண்டிருக்கும் போது மற்றொரு அடுப்பில் குக்கரில் அரிந்து வைத்துள்ள கொத்தவரங்காயை சாம்பார் பொடி, உப்பு, மஞ்சத்தூள் ஆகியவற்றுடன் 1/4 கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு  வேகவிடவும்.
ஒரு விசில் வந்ததும் உடனே நிறுத்தி ஆவியை வெளியேற்றி விட்டு வெந்த காயை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதற்குப் பிறகு ஆவியில் வேக வைத்துள்ள பருப்பு மசாலாவை சேர்க்கவும்.
கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
தண்ணீர் வற்றி சிறிது சிவந்து வரும் வரை அடுப்பில் சிறிய தீயில் வைத்திருக்கவும்.
கொத்தவரங்காய் பருப்புசிலி

அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மிக ருசியான பருப்புசிலி தயார். சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற கறியாகும்.
கொத்தவரங்காய் பருப்புசிலி

Sunday, November 16, 2014

Kuthiraivaali Kothamalli Rice

#குதிரைவாலிகொத்தமல்லிசாதம் : #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதற்கு ஆங்கிலத்தில் Barnyard Millet  என பெயர்.
இதனுடைய அறிவியல் பெயர் : Echinochloa frumantacea .
மற்ற சிறு தானியங்களை போல தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
இதன் நார்சத்து மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதனை கொண்டு சில உணவு வகைகள் செய்யும் முறையை முன்பே பார்த்திருக்கிறோம். அவையாதெனில், குதிரைவாலி பொங்கல், குதிரைவாலி இட்லி, குதிரைவாலி வாழைப்பூ புலாவு , குதிரைவாலி உப்புமா .
இங்கு குதிரைவாலியுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு #கலந்தசாதம் செய்வதெப்படி என காண்போம்.

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

1/2 cup                                   குதிரைவாலி [ Barnyard millet ]
10                                           சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
or
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
6 cloves                                  பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/2 cup                                  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.
1/2 Tsp                                  மிளகு சீரகபொடி 
1/2 Tsp                                  உப்பு 

To Temper :
1/2 Tsp                                  சீரகம்
2 Tsp                                     நெய்
2 Tsp                                     நல்லெண்ணெய் [ till / sesame oil ]

செய்முறை :
குக்கரில் அரிசியை கழுவி சேர்த்து 1 கப் தண்ணீர் விடவும்.
மூடி போட்டு வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி 1 Tsp நல்லெண்ணெய் ஊற்றி காற்றாடியின் கீழே வைத்து ஆற விடவும்.

குதிரைவாலி சாதம்

அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சீரகத்தை வெடிக்க விடவும்.
பின்னர் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.
மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

.

இதனை ஆறவிட்ட குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.
நெய் விட்டு தேக்கரண்டியல் மென்மையாக கலந்து விடவும்.
உப்பு மற்றும் மிளகு காரம் சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

விருப்பமான பொரியல் அல்லது தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.


குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

இதனை மற்ற கலந்த சாதங்களை போல மதிய உணவிற்காக டிபன் டப்பாவில் அடைத்து எடுத்துச் செல்லலாம். நன்கு ஆற விட்ட பிறகு அடைத்து மூடி போட்டு மூடி எடுத்துச் செல்வது நலம்.

வேறு சில சமையல் குறிப்புகள் :
குதிரைவாலி வாழைப்பூ புலாவ் குதிரைவாலி புளியோதரை வரகரிசி புளியோதரை

Friday, November 14, 2014

Spinach Dosai

#பசலைகீரைதோசை : #கீரைகள் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை கொடுக்க கூடியது. அதிலும் #கொடிபசலை கீரையில் வைட்டமின் A மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை தவிர வைட்டமின் B, C மற்றும் K குறிப்பிடும் படியாக உள்ளது.
கீரைகளை நீண்ட நேரம் அதிக தீயில் வேக வைக்காமல் குறுகிய நேரத்தில் பச்சை நிறம் மாறாமல் வேக வைத்து சாப்பிடும் போதுதான் அதிலுள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.
அமராந்தம் [ அமராந்த் ] எனப்படும் கீரை விதையின் மாவையும் சிறிதளவு மாவில் சேர்த்திருக்கிறேன். அமராந்த் புரோட்டீன் நிறைந்துள்ள உணவு  பொருள் ஆகும். கிடைத்தால் உபயோகப்படுத்தவும். இல்லாவிடின் பரவாயில்லை.
இனி செய்முறையை காண்போம்.

பசலைகீரை தோசை

தேவையான பொருட்கள் :
2 cups                              Iஇட்லி மாவு  / தோசை மாவு
1/8 cup                             அமராந்த் மாவு  [ optional ]
10                                     கொடி பசலை கீரை, கழுவி பொடியாக நறுக்கவும்
1 small size                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1 Tsp                                மிளகு, பொடித்து வைக்கவும்
1 Tsp                                சீரகம்
1/2 Tsp                             உப்பு

தோசை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.

செய்முறை :
இட்லி மாவு அல்லது  தோசை மாவு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
நன்கு கலந்து வைக்கவும்.


அடுப்பில் மிதமான தீயில் தோசைக்கல்லை சூடாக்கவும்.
கல் சூடானதும் சில துளிகள் எண்ணெய் விட்டு தடவவும்.
பின்னர் மாவை கரண்டியில் எடுத்து தோசைகல்லின் நடுவே வைத்து, கரண்டியின் பின் பாகத்தால் சமமாக பரப்பி விடவும்.
சிறிது தடிமனான தோசையாக ஊற்ற வேண்டும்.
தோசையின் மேலும் அதனை சுற்றியும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
ஓரங்கள் சிவந்து வரும் போது திருப்பிப் போட்டு வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி சட்னி  அல்லது இட்லி மிளகாய் பொடியுடன் சுவைக்கவும்.


பசலைகீரை தோசை பசலைகீரை தோசை
பசலைகீரை தோசை பசலைகீரை தோசை





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலிநீர்தோசை
ரவா தோசை
ரவா தோசை