Search This Blog

Saturday, December 6, 2014

Murungaikai Katharikkai Koottu

#முருங்கைக்காய்கத்தரிக்காய்கூட்டு : சில காய்கறிகளை மற்றொரு குறிப்பிட்ட காயுடன் சேர்த்து கூட்டு செய்யும் போது சுவையும் மனமும் மிகவும் அலாதியாக இருக்கும். அதில் முருங்கைக்காய் கத்தரிக்காய் இணை ஒரு அருமையான ஒன்றாகும். இந்த காய்களுடன் பலாக்கொட்டையும் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.

முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு


தேவையான பொருட்கள் :
1                                                   : முருங்கைக்காய், துண்டுகளாக வெட்டவும்.
1 சிறியது                                  :  கத்தரிக்காய், சிறு துண்டுகளாக்கவும்.
1 சிறியது                                 : பெரிய வெங்காயம்
3 பற்கள்                                    : பூண்டு, பொடியாக நறுக்கவும்.
1/4 கப்                                         : கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
1 சிட்டிகை                               : மஞ்சத்தூள்
3/4 Tsp                                          : சாம்பார் பொடி
3/4 Tsp                                          : உப்பு
2 Tbsp                                           : வேக வைத்த பச்சை பருப்பு

அரைக்க :
3 Tsp                                            : தேங்காய் துருவல்
1/4 Tsp                                         : சீரகம்
1/4 Tsp                                         : அரிசி மாவு

தாளிக்க :
1/2 Tsp                                        : வெங்காய வடவம்
1/2 Tsp                                        : எண்ணெய்

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் சாம்பார் பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை சிறியதாக்கி வெட்டி வைத்துள்ள காய்கறிகளை போட்டு மூடி போட்டு வேக விடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் வேகவைத்த பருப்பு, கொத்தமல்லி தழை மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து கலக்கி விடவும்.
மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு வாணலியை சூடாக்கவும்.
வெங்காய வடவம் தாளித்து கூட்டின் மேல் கொட்டவும்.
முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு

சூடான சாதத்தில் கூட்டை ஊற்றி பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

முருங்கைக்காய் கத்தரிக்காய் கூட்டு




மற்ற கூட்டு வகைகள் :

முருங்கைக்காய் பலாகொட்டை கொத்தமல்லி கூட்டு

Friday, December 5, 2014

Vazhaipoo Kuzhambu

#வாழைப்பூகுழம்பு : #வாழைப்ப்பூ துவர்ப்பு சுவைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அறுசுவையில் ஒரு சுவையுடைய இந்த வாழைப்பூவை தவறாமல் வாரத்தில் ஒரு முறையேனும் சேர்த்துக் கொள்வது நலம்.
இங்கு இதனை கொண்டு ஒரு வித்தியாசமான குழம்பு செய்முறையை காண்போம்.

வாழைப்பூ குழம்பு


தேவையான பொருட்கள் :
அரைக்க :

1 1/2 Tsp                                சீரகம்
1 Tsp                                      மிளகு
2 or 3                                      சிகப்பு மிளகாய்
1/2 Tsp                                   கச கசா
15 to 20                                  சின்ன வெங்காயம் [ sambar onion ]
1/2                                          தக்காளி


மற்ற பொருட்கள் :
1 cup                                   வாழைப்பூ நறுக்கியது{ பூவின் நடு காம்பை நீக்கியபின் }
2                                          காளான் [ விரும்பினால் ]
கோலிகுண்டு அளவு  புளி சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்
1                                          வெங்காயம், நறுக்கி வைக்கவும்
1/2                                       தக்காளி வெட்டிவைக்கவும்
10                                        கறுவேப்பிலை
1/4 Tsp                                மஞ்சத்தூள்
1 Tsp                                    உப்பு
4 Tsp                                    நல்லெண்ணெய் [ till / sesame oil ]
1 Tsp                                     கடுகு

செய்முறை :
முதலில் அரைப்பதற்கு தயார் செய்து கொள்வோம்.
வெங்காயத்தை மைக்ரோவேவிற்குள் வைக்கக் கூடிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். ஓரிரு துளிகள் எண்ணெய் விட்டு கலக்கி விடவும்.
1 நிமிடத்திற்கு HIGH யில் வைத்து மைக்ரோவேவ் செய்யவும்.
அதே கிண்ணத்தில் வெங்காயத்துடன் தக்காளி துண்டுகளையும் சேர்த்து எண்ணெய் சில துளிகள் விட்டு கலக்கி மேலும் 1 1/2 நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும். அல்லது தக்காளி மிருதுவாகும் வரை மைக்ரோவேவ் செய்யவும்.
வெளியில் எடுத்து ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய் மற்றும் மிளகை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் சீரகத்தை வறுத்து எடுக்கவும்.
இப்போது வறுத்த பொருட்கள், மைக்ரோவேவ் செய்த பொருட்கள் மற்றும் கசகசா சேர்த்து மைய மிக்ஸியில் அரைத்து எடுத்து தயாராக வைக்கவும்.


மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு ஒட்டிக் கொண்டிருக்கும் மசாலாவையும் கழுவி அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 3 அல்லது 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு தாளித்த பின் கறுவேப்பிலை மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வெளிர் நிறமாக மாறி வாசனை வர ஆரம்பித்தவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் வாழைப்பூவை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் 1/4 கப் ஊற்றி மூடி வேக விடவும்.
வாழைப்பூ வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் கழுவிய தண்ணீரையும் சேர்க்கவும்.
மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.





பிறகு புளியை 1/3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி உப்பையும் சேர்க்கவும்.
புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

வாழைப்பூ குழம்பு வாழைப்பூ குழம்பு

அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

வாழைப்பூ குழம்பு


குறிப்பு :
மைக்ரோவேவ் இல்லாவிடின் வாணலியிலேயே வெங்காயத்தையும் தக்காளியையும் வதக்கிக் கொள்ளலாம்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வாழைப்பூ பருப்பு உசிலி வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்



Tuesday, December 2, 2014

Amaranth-Roti

#அமராந்த்ரொட்டி : #அமராந்தம் அல்லது #அமராந்த் என்றழைக்கப்படும் கீரை விதைகளை கொண்டு செய்யப்பட்ட சமையல் குறிப்புகள் சிலவற்றை இதுவரை அறிந்து கொண்டுள்ளோம்.
இந்த விதைகள் புரதம் நிறைந்த ஒன்றாகும். மேலும் இது கோதுமையை போல பசை தன்மை கொண்டதல்ல. இந்த விதைகளை இப்போது நான் வசிக்கும் ராய்ப்பூரில் விரத நாட்களில் கோதுமையை தவிர்த்து அமராந்த் விதைகள் அல்லது மாவினை பிரத்யேகமாக உணவில் உபயோகப்படுத்துகிறார்கள். இங்கு #அமராந்த்மாவு உபயோகித்து ரொட்டி எப்படி செய்யலாம் என காணலாம்.

அமராந்த்ரொட்டி

தேவையான பொருட்கள் :
1 cupஅமராந்த் மாவு
1/2 Tspஅமராந்த் விதைகள் [ optional ]
1/4 Tspசீரகம்
1/4 Tspஓமம் [ Omam ]
1/4 Tspசீரகப்பொடி
1/4 Tspசிகப்பு மிளகாய்த்தூள்
1/2 Tspஉப்பு
தோசை கல்லில் ரொட்டி சுட்டெடுக்க தேவையான எண்ணெய்.

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் 4 ரொட்டிகள் செய்ய போதுமானது.

செய்முறை :
தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். 1/4 கப் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
கோதுமையை போல பசை தன்மை இல்லாததால் மாவை திரட்டும் போது உடைந்து போகும். அதனால் சப்பாத்தி இடும் கட்டையின் மேல் தாராளமாக மாவை தூவி இடவும்.


அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
இட்ட சப்பாத்தியை கல் சூடானவுடன் சில துளிகள் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகும் வரை சுட்டெடுக்கவும்.
Amaranth Roti Amaranth Roti
உருளைகிழங்கு குருமா அல்லது பிடித்தமான கறியுடன் சூடாக பரிமாறவும்.

இதனை மெக்சிகன் உணவு வகையான Tortilla வாகவும் உபயோகிக்கலாம்.
Tortilla பொதுவாக கோதுமை மாவு கொண்டு செய்யப்படும். அதன் நடுவே கறியை வைத்து சுருட்டி ருசிப்பது அவர்கள் முறை. அதேபோல இங்கு அமராந்த் tortilla நடுவே பீட்ரூட் கறியை வைத்து பரிமாறப்பட்டுள்ளது.


Amaranth Tortilla Burrito [ Amaranth Tortilla roll ]