Search This Blog

Saturday, December 19, 2015

7 Cup Burfi

#ஏழுகப்பர்பி [ #7cupBurfi ] : ஒரு கப் கடலை மாவு, ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் பால், ஒரு கப் நெய், மற்றும் மூன்று கப் சர்க்கரை ஆக மொத்தம் ஏழு கப் பொருட்களை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பாகும். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பாகும். இந்த இனிப்பில் நான் வாசனை வரும் வரை வறுத்த ஆளி விதையை சேர்த்து செய்து பார்த்தேன். இனிப்பின் சுவையும் மணமும் சிறிது தூக்கலாக அமைந்தது.
இனி செய்முறையை காண்போம். 

ஏழு கப் பர்பி - 7 cup Burfi

தேவையான பொருட்கள் :
1/2 கப்கடலை மாவு
1/2 கப்தேங்காய் துருவல்
1/2 கப்நெய்
1/2 கப்பால்
1 1/2 கப்சர்க்கரை
1/2 Tspஏலக்காய் பொடி
1 Tspஆளி விதை [ flax seeds ]
1 Tspசர்க்கரை தூவுவதற்கு

செய்முறை :
வெறும் வாணலியில் ஆளிவிதையை மிதமான தீயில் படபடவென பொறியும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

ஒரு சுத்தமான ஈரமில்லாத தட்டின் மேல் நெய் தடவி தயாராக வைக்கவும்.

அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து சூடாக்கவும்.
அதில் 2 tsp நெய் விட்டு கடலை மாவை வாசனை வரும் வரை வறுக்கவும்.
கடலை மாவின் நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ளவும்.
மாவு வறுபட்டவுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வறுக்கவும்.
பிறகு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்கவும்.
இடது கையால் பாலை சேர்த்துக்கொண்டே வலது கையால் துடுப்பினால் கலக்கிகொண்டே கலக்கவும். அப்போதுதான் மாவு கட்டி தட்டாமல் இருக்கும்.
மாவு வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
அடுத்து நெய்யை சேர்த்து மிதமான அல்லது சிறிய தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிளற கிளற சிறிது கெட்டிபட்டுக்கொண்டே வரும்.
காற்று குமிழிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
அந்த தருணத்தில் ஏலக்காய் போடி சேர்த்து கிளறவும்.
அடுத்து வறுத்து வைத்துள்ள ஆளி விதையை சேர்த்து கிளறவும்.
கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு தருணத்தில் ஒன்றாக சேர்ந்து காற்று குமிழிகளுடன் மேல பொங்கி எழும்பி வரும்.
அப்போது உடனே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
தட்டை மேடையின் மேல் டப் டப் என தட்டி கொட்டிய பர்பியை சமன் படுத்தவும்.
உடனேயே சர்க்கரையை இனிப்பின் மேல் தூவவும்.
ஒரு ஐந்து நிமிடங்கள் ஆற வைத்த பின்னர் சுத்தமான ஈரமில்லாத கத்தியில் துண்டுகள் போடவும்.
ஆளிவிதையின் வாசனையுடன் கூடிய சுவையான ஏழு கப் பர்பி தயார்.

7 cup Burfi




மேலும் சில இனிப்பு வகைகள் முயற்சி செய்து பார்க்க

தூத் பேடா மைக்ரோவேவ் முறை ரசகுல்லா ரவா உருண்டை
ஆளி விதை உருண்டை சாக்லேட்


Thursday, November 26, 2015

Appam Varieties

#ஆப்பம்வகைகள் : #ஆப்பம் என்பது தோசை வகையை சார்ந்த ஒரு பலகாரமாகும். #தோசை யை போலல்லாமல் ஆப்ப சட்டியில் அல்லது தோசை கல்லில் மூடி போட்டு ஒரு பக்கம் மட்டுமே சுட்டெடுக்கபடும். தோசையை விட மிருதுவானதாகும்.
ஆப்பமாவு தயாரிக்க அரிசி, வெந்தயம், உளுந்து மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து புளிக்க வைக்கப் படுகிறது. புளித்த மாவை கொண்டு மிருதுவான ஆப்பம் சுட்டெடுக்கப் படுகிறது. ஆப்பம் பொதுவாக தேங்காய் பாலுடனே சுவைக்கப் படுகிறது. விருப்பமானால் சட்னி அல்லது குருமாவுடனும் சுவைக்கலாம்.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. கலோரி அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்றது. மலச் சிக்கலை போக்கவல்லது.
இதன் கசப்பு தன்மையால் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை.
ஆப்பம் மாவை தயாரிக்க வெந்தயம் கணிசமான அளவில் சேர்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் வெந்தயத்தின் கசப்பு சிறிதும் உணரப்படுவதில்லை.
அதனால் இந்த பலகாரத்தை அடிக்கடி செய்வதின் மூலம் வெந்தயத்தின் பலனை அடையலாம்.
வெந்தயத்தை முளை கட்டி பிறகு ஆப்ப மாவு தயாரிக்க பயன் படுத்தினால் மேலும் பயனடையலாம்.
ஆனால் கேரளாவில் செய்யப்படும் ஆப்பம் பச்சரிசி, தேங்காய் இரண்டையும் அரைத்து,  புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து ஆப்ப கடாயில் ஊற்றி சுட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு செய்யப்பட்ட ஆப்பம் கடலை கறியுடன் சுவைக்கப்படுகிறது.
எல்லா வகையான ஆப்பம் வகைகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.



ஆப்பம் மாவு
ஆப்பம் மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
சோள ஆப்பம்
சோள ஆப்பம்
ஆப்பம் கேரளா ஸ்டைல் 1
ஆப்பம்கேரளா ஸ்டைல் 1
ஆப்பம் கேரளா ஸ்டைல் 2
ஆப்பம்கேரளா ஸ்டைல் 2
கள்ளாப்பம்
கள்ளாப்பம்


ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க

மற்ற டிபன் வகைகளை அறிந்து கொள்ள

டிபன் வகைகள்


Monday, November 23, 2015

Aval-Kesari

#அவல்கேசரி : #அவல், தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் கலந்து இனிப்பு அவல் செய்து ருசிப்பது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு அவல்  சிறிது நேரத்தில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகி விடும். சுவையும் மட்டுப்பட்டு விடும். அதனால் தேங்காய் பூரணம் செய்வது போல அவலை கொண்டு ஒரு இனிப்பு செய்யலாம் என முயற்சித்தேன். மிக மிக அருமையாக இருந்தது. கேசரி போல மிருதுவாகவும் சுவையாகவும் இருந்ததால் இந்த புதிய இனிப்பிற்கு அவல் கேசரி என பெயரிட்டுள்ளேன்

இனி செய்முறையை காண்போம்.

aval kesari [ rice flakes kesari ]


தேவையான பொருட்கள் :
1/2 கப்அவல்
1/2 கப்தேங்காய் துருவல்
1/2 கப் குவித்துவெல்லம் [ adjust ]
1 கப்பால், காய்ச்சி ஆற வைத்தது
1/2 Tspஏலக்காய் பொடி
1/4 Tspஜாதிக்காய் பொடி
1 Tbspநெய்
1 சிட்டிகைஉப்பு
1/2 Tspவறுத்த எள்

செய்முறை :
ஒரு சுத்தமான தட்டின் மேல் நெய்யை தடவி தயாராக வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் சூடாக்கி அவலை போட்டு சிறிது சூடேறும் வரை வறுக்கவும். இலேசாக சூடாக்கினால் போதுமானது.
மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த அவலை பாலில் கலந்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு 1/3 கப் தண்ணீர் விட்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் முழுமையாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் இந்த வெல்ல கரைசலை வடி கட்டி எடுத்துக்கொள்ளவும்.
அதனை மிதமான தீயின் மேல் வைத்து ஊறவைத்துள்ள அவலை கலந்து விடவும்.
நன்கு கலந்து விட்டபின் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும்.
கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது நேரத்தில் கெட்டிபட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
இந்த தருணத்தில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு தட்டில் கொட்டவும்.
தட்டை இலேசாக தட்டி தட்டி இனிப்பை சமன் படுத்தவும்.
மேலே வறுத்த எள்ளை தூவவும்.
சிறிது ஆறவைத்து பிறகு சுத்தமான ஈரமில்லாத கத்தியை கொண்டு துண்டுகள் போடவும்.

சுவையும் மணமும் நிறைந்த அவல் கேசரி தயார்.
சுவைத்து மகிழவும்.


சில இனிப்பு வகைகள் முயற்சி செய்து பார்க்க

தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை...
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை..
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்
கேழ்வரகு குழி..
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திரு..

Thursday, November 19, 2015

Varagarisi-Neer-Dosai

#வரகரிசிநீர்தோசை : #வரகரிசி சுருக்கமாக #வரகு #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதனை பற்றி அறிய கீழே கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கவும்.
வரகரிசி

இங்கு வரகரிசி கொண்டு சுவையான நீர் தோசை எவ்வாறு செய்யலாம் என காண்போம்.


வரகரிசி நீர்தோசை

தேவையான பொருட்கள் :
2 கப்வரகு அரிசி [ Kodo millet ]
1/2 கப்தேங்காய் துருவல்
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
தோசை சுட்டெடுப்பதற்கு தேவையான நல்லெண்ணெய்.


செய்முறை :
வரகரிசியை இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி மற்றும் தேங்காயை நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவையும் கழுவி மாவுடன் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அப்போதுதான் மெல்லிய தோசையாக சுட முடியும்.

இந்த மாவை புளிக்க வைக்க தேவை இல்லை.
உடனேயே தோசை சுடலாம்.

அடுப்பில் தோசைகல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி தோசைகல்லின் வெளி ஓரத்தில் இருந்து நடு வரை மாவை வட்டமாக ஊற்றவும். 

தோசையின் மேலும் விளிம்புகளை சுற்றியும் எண்ணெய் சொட்டு சொட்டாக விடவும்.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்களும் நடுவேயும் சிவக்க ஆரம்பிக்கும்.
தோசை வெந்து விட்டது என கொள்ளலாம்.
மென்மையாக தோசை திருப்பியால் தோசையின் மேல் தெளிக்கப்பட்ட எண்ணெயை பரப்பி விடவும்.
இவ்வாறு செய்வதால் தோசை காய்ந்து போகாமல் இருக்கும்.

இந்த தோசை ஒரு பக்கம் வெந்தால் போதுமானது.
திருப்பிப் போட தேவையில்லை.

தோசையை எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதேபோல தோசையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

சுவையான மென்மையான வரகரிசி நீர் தோசை தயார்.
காரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி சாம்பார் அல்லது தக்காளி சட்னி  யுடன்  சுவைக்கவும்.

Varagarisi [ Kodo millet ]
வரகரிசி நீர்தோசை வரகரிசி நீர்தோசை
வரகரிசி நீர்தோசை வரகரிசி நீர்தோசை





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க


ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி சர்க்கரை பொங்கல்
குதிரைவாலி சர்க்கரை
குதிரைவாலி பாயசம்
குதிரைவாலி பாயசம்

மற்ற வரகரிசி சமையல் குறிப்பிற்கு

வரகரிசி சமையல் குறிப்புகள்

சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

சிறுதானிய சமையல்