#அமராந்த்பாப்பரைபால்பாயசம் : #அமராந்த் அல்லது #அமராந்தம் அல்லது #அமர்நாத்விதைகள் என்றழைக்கப்படும் விதைகள் தண்டுகீரை [ முளைக்கீரை ] யின் விதைகளாகும். இவ்விதைகளில் புரோட்டீன் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளன.
இதே போல பாப்பரை [ #buckwheat ] என்பதும் ஒரு தாவரத்தின் விதைகள் ஆகும். இதுவும் புரோட்டீன் அதிக அளவில் கொண்ட உணவாகும். இதில் அடங்கியுள்ள ஒரு வேதிப்பொருள் ரத்த நாளங்களை வலுவுள்ளதாக ஆக்குகிறது.
இங்கு இவையிரண்டையும் பயன் படுத்தி ஒரு சுவையான பாயசம் செய்யும் முறையை காண்போம்.

Ingredients : | |
---|---|
1/8 Cup | அமராந்த் [ அ ] அமராந்தம் |
1 Tbsp | பாப்பரை [ Buckwheat ] |
1 pinch | உப்பு |
2 Cup | பால் |
2 Tbsp | சர்க்கரை [ adjust ] |
1/4 Tsp | ஏலக்காய் பொடி |
1 Tsp | பாதாம் துருவல் |
5 or 6 | குங்குமப்பூ இழைகள் |
செய்முறை :
அமராந்த் மற்றும் பாப்பரை ஆகிய இரண்டையும் ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விட்டு ஒரு முறை கழுவி வைக்கவும்.
அரை கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விடவும்.
பின்னர் இந்த கிண்ணத்தை குக்கரினுள் வைத்து மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை சிறியதாக்கி 10 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு வெளியில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்.
பால் பொங்கியதும் வேக வைத்துள்ள அமராந்த் பாப்பரையை சேர்த்து கலக்கி 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி மீண்டும் 5 முதல் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
இறுதியாக ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பாதாம் துருவலையும் குங்குமப்பூவையும் தூவி அலங்கரிக்கவும்.
சுவையான பாயசம் தயார்!!!
சூடாக இருக்கும் போதே அருந்தி மகிழவும்.

மேலும் சில பாயசம் வகைகளின் சமையல் குறிப்புகள்