Search This Blog

Showing posts with label buckwheat. Show all posts
Showing posts with label buckwheat. Show all posts

Monday, March 30, 2015

Amaranth-Buckwheat-Paal-Payasam

#அமராந்த்பாப்பரைபால்பாயசம் : #அமராந்த் அல்லது #அமராந்தம் அல்லது #அமர்நாத்விதைகள் என்றழைக்கப்படும் விதைகள் தண்டுகீரை [ முளைக்கீரை ] யின் விதைகளாகும். இவ்விதைகளில் புரோட்டீன் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளன.
இதே போல பாப்பரை [ #buckwheat ] என்பதும் ஒரு தாவரத்தின் விதைகள் ஆகும். இதுவும் புரோட்டீன் அதிக அளவில் கொண்ட உணவாகும். இதில் அடங்கியுள்ள ஒரு வேதிப்பொருள் ரத்த நாளங்களை வலுவுள்ளதாக ஆக்குகிறது.
இங்கு இவையிரண்டையும் பயன் படுத்தி ஒரு சுவையான பாயசம் செய்யும் முறையை காண்போம்.

அமராந்த் பாப்பரை பால் பாயசம்


Ingredients :
1/8 Cupஅமராந்த் [ அ ] அமராந்தம்
1 Tbspபாப்பரை [ Buckwheat ]
1 pinchஉப்பு
2 Cupபால்
2 Tbspசர்க்கரை [ adjust ]
1/4 Tspஏலக்காய் பொடி
1 Tspபாதாம் துருவல்
5 or 6குங்குமப்பூ இழைகள்

செய்முறை :
அமராந்த் மற்றும் பாப்பரை ஆகிய இரண்டையும் ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விட்டு ஒரு முறை கழுவி வைக்கவும்.
அரை கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விடவும்.
பின்னர் இந்த கிண்ணத்தை குக்கரினுள் வைத்து மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை சிறியதாக்கி 10 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு வெளியில் எடுத்து வைக்கவும்.


அடுப்பில் மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும்.
பால் பொங்கியதும் வேக வைத்துள்ள அமராந்த் பாப்பரையை சேர்த்து கலக்கி 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு சர்க்கரையை சேர்த்து கலக்கி மீண்டும் 5 முதல் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
இறுதியாக ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி பாதாம் துருவலையும் குங்குமப்பூவையும் தூவி அலங்கரிக்கவும்.
சுவையான பாயசம் தயார்!!!
சூடாக இருக்கும் போதே அருந்தி மகிழவும்.
அமராந்த் பாப்பரை பால் பாயசம் அமராந்த் பாப்பரை பால் பாயசம்




மேலும் சில பாயசம் வகைகளின் சமையல் குறிப்புகள்  

காரட் தினை பாயசம் சாமை பாப்பரை பாயசம் அமராந்த் பாப்பரை பருப்பு பாயசம்
குதிரைவாலி பால் பாயசம் ஜவ்வரிசி சேமியா பாயசம்


Wednesday, March 19, 2014

Rawa Buckwheat Idly

#ரவாபாப்பரைஇட்லி : #பாப்பரை [ #Buckwheat ] கொண்டு உப்புமா, பொங்கல், பாயசம், கொழுக்கட்டை போன்ற பல்வேறு உணவுகளை செய்து பார்த்து விட்டோம். இன்று ரவாவுடன் சேர்த்து இட்லி செய்து பார்த்த போது அருமையாக அமைந்தது. அதை இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
கொடுத்துள்ள அளவில் சுமார் 12 இட்லிகள் செய்யலாம்.


ரவா பாப்பரை இட்லி

தேவையான பொருட்கள் :
1/4 கப்                                      தோசை மாவு புளித்தது
3/4 கப்                                      ரவா
1/4 கப்                                      பாப்பரை [ buckwheat ]
1 Tsp                                          உப்பு
1 பாக்கெட்                            Eno Fruit salt 

மாவுடன் சேர்க்க :
1                                               வெங்காயம், பொடியாக நறுக்கியது
1                                               பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
8                                               கருவேப்பிலை, பொடியாக நறுக்கியது
1 Tbsp                                      காரட் துருவியது

தாளிக்க :
1 Tsp                                        கடுகு
1 Tsp                                        உளுத்தம் பருப்பு
3 Tsp                                        கடலை பருப்பு
1/4 Tsp                                     பெருங்காய தூள்
3 Tsp                                        எண்ணெய்
செய்முறை :
முதலில் மிக்சியில் பாப்பரையை கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த பாப்பரை, தோசை மாவு, ரவா மற்றும் உப்பு அனைத்தையும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
தண்ணீர் தேவையானால் இன்னும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.


அரை மணி நேரத்திற்கு பிறகு அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு பெருங்கயத்தூள் சேர்க்கவும்.
அதன் பின் கருவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும்.
காரட்டையும் மாவுடன் சேர்த்து கலக்கி விடவும்.

இப்போது அடுப்பில் இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் எண்ணெய் தடவி வைக்கவும்.
இப்போது மாவில் Eno Fruit Salt சேர்த்து கலக்கவும்.
மாவு நுரைத்துக் கொண்டு சிறிது எழும்பி வரும்.
இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து மூடி 7 முதல் 9 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்ததும் வெளியில் எடுத்து தேக்கரண்டியால் இட்லியை தட்டிலிருந்து எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் தட்டில் எண்ணெய் தடவி அடுத்த ஈடு ஊற்றி எடுக்கவும்.

சூடான இட்லியை  தேங்காய் சட்னி யுடனோ 

அல்லது சிகப்பு பூண்டு மிளகாய் சட்னி யுடனோ சுவைக்கவும்.
ரவா பாப்பரை இட்லி






மற்ற சில சிற்றுண்டிகள் முயற்சி செய்து பார்க்க
இட்லி
இட்லி
காஞ்சிபுரம் இட்லி
காஞ்சிபுரம் இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
மசால் தோசை
மசால் தோசை
கொடிபசலைகீரை  பூரி
கொடிபசலை கீரை பூரி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க


இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


Tuesday, January 21, 2014

Buckwheat Payasam

பாப்பரை பாயசம் : பாப்பரை ஆங்கிலத்தில் Buckwheat என்று அழைக்கப் படுகிறது. இது தானிய வகைகளை சேர்ந்தது அல்ல. சூரிய காந்தியை போல் பூவிலிருந்து கிடைக்கும் வித்தாகும்.

Buckwheat - பாப்பரை
Buckwheat - பாப்பரை 
இதனை பற்றி மேலும் அறிய
Kindly Go through the links given below to learn about Buckwheat.
To know benefits of Buckwheat .
To know more about Buckwheat.

Buckwheat contains a glucoside called rutin, a phytochemical that strengthens capillary walls. One clinical study showed mixed results in the treatment of chronic venous insufficiency. Dried buckwheat leaves were manufactured in Europe under the brand name "Fagorutin"for use as a tisane.
It also contains galloylated propelargonidins and procyanidins.
Buckwheat contains D-chiro-inositol, a component of the secondary messenger pathway for insulin signal transduction found to be deficient in Type II diabetes and polycystic ovary syndrome. It is being studied for use in treating Type II diabetes.
Research on D-chiro-inositol and PCOS has shown promising results.
High protein buckwheat flour is being studied for possible use as a functional ingredient in foods to reduce plasma cholesterol, body fat, and cholesterol gallstones.

சுமார் 1 கப் பாயசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் ;


2 Tbsp                                        பாப்பரை வேகவைத்தது
1 1/2 Tbsp                                 சர்க்கரை
1 சிட்டிகை                           உப்பு
1 1/4 கப்                                   பால்
2 Tsp                                         பாதாம் துருவியது
1/4 Tsp                                      ஏலக்காய் பொடி
1 சின்ன துண்டு                 ஜாதி பத்திரி, பொடித்துகொள்ளவும்

செய்முறை :
அடுப்பில் பாலை சூடாக்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பாப்பரை, உப்பு மற்றும் ஜாதி பத்திரி ஆகியவற்றை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
அவ்வபோது கரண்டியால் கலக்கி விடவும்.
சர்க்கரையை சேர்த்து மேலும் 7 முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.


பாயசம் பாப்பரையின் சிவந்த நிறத்தினால் சிறிது மங்கலான ரோஸ் நிறத்தில் இருக்கும்.


கடைசியாக ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து பாதாம் துகள்களை தூவி பரிமாறவும்.


பாப்பரை அப்படியே நாக்கில் கரையும். மிக்க சுவையுடன் இருக்கும்.
செய்து பாருங்கள்!!

Sunday, January 19, 2014

Buckwheat Soup

#பாப்பரைசூப் : #பாப்பரை [ #buckwheat ]யை பற்றி வலை தளத்தில் படித்த போது, இதனை சாலட் வகைகளிலும் மேலும் கஞ்சி செய்வதற்கும் பயன் படுத்தினார்கள் என அறிந்தேன்.

 #சூப் என்பது கஞ்சியின் ஒரு வடிவம்தானே ! அதனால் சில காய்கள் மற்றும் காளான் கொண்டு செய்து பார்க்கலாம் என முயற்சித்தேன். நன்றாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பாப்பரை சூப்


தேவையான பொருட்கள் :
2 Tbsp                                 பாப்பரை வேகவைத்தது
1 Tsp                                   காரட் மெல்லியதாக அரிந்தது
1 Tsp                                   முட்டைகோஸ்  மெல்லியதாக அரிந்தது
2                                          காளான் பொடியாக அரியவும்
2 பற்கள்                            பூண்டு நசுக்கியது
சின்ன துண்டு                 இஞ்சி நசுக்கியது
1 Tsp                                   மதராஸ் ரசப்பொடி
1/2 Tsp                                உப்பு

சுவை கூட்ட :
1/2 Tsp                               எலுமிச்சை சாறு
பூண்டு தாள், கொத்தமல்லி தழை, மற்றும் மிளகுத்தூள்

செய்முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சூடு பண்ணவும்.
காற்று குமிழிகள் லேசாக பாத்திரத்தின் அடியில் வந்ததும் காளான் மற்றும் உப்பு தவிர மற்ற அனைத்தையும் சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் குறைந்த தீயில் வேகவிடவும்.
முட்டைகோஸ் முக்கால் பாகம் வெந்ததும் காளானை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அல்லது காளான் வெந்தவுடன் உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
எலுமிச்சை சாரை கலந்து விடவும்.
கிண்ணத்தில் ஊற்றி மேலே பூண்டு தாள், கொத்தமல்லி இல்லை மற்றும் மிளகுத்தூள் தூவி பருகவும்.
அருமையாக இருக்கும்.
பாப்பரை [ buckwheat ]
பாப்பரை சூப்
மேலும் சில சூப் வகைகள் முயற்சி செய்ய
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்

Friday, January 3, 2014

Buckwheat Sakkarai Pongal

பாப்பரை சர்க்கரை பொங்கல் : பாப்பரையின் சத்துக்கள் பற்றி முன்பே பாப்பரை பொங்கல்   சமையல் குறிப்பில் பார்த்தோம். இங்கு சர்க்கரை பொங்கல் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :

1/2 கப்                      பாப்பரை ( Buckwheat )
ஒரு சிட்டிகை        உப்பு
1/3 கப்                      வெல்லம்
1/4 Tsp                      ஏலக்காய் பொடி
சிறிய துண்டு         ஜாதிக்காய்
5                                முந்திரி பருப்பு
6                                உலர்ந்த திராட்சை
2 Tsp                          நெய்

செய்முறை :
பாப்பரையை குக்கரினுள் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு முறை நன்றாக கழுவி 1 கப் தண்ணீர் ஊற்றவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் ஊற்றி பாப்பரை உள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து மூடவும. வெயிட் வைத்து அதிக தீயில் 3 விசில் வரும் வரையும் பின் குறைந்த தீயில் 5 நிமிடமும் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும்.


மற்றொரு அடுப்பில் வெல்லத்தை நசுக்கி போட்டு சிறிது தண்ணீர் விட்டு சூடேற்றவும்.
வெல்லம் கரையும் வரை சூடாக்கினால் போதும்.
குப்பை மற்றும் கல் நீக்க வடிகட்டிக்கொள்ளவும்.


வேகவைத்த பாப்பரையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்து கரண்டியினால் இலேசாக  மசித்து வெல்ல கரைசலை சேர்க்கவும்.
அடுப்பில் குறைந்த தீயில் வைத்து கிளறவும்.


வெல்லமும் பாப்பரையும் ஒன்றாக கலந்து கெட்டியானவுடன் நெய், ஏலக்காய், ஜாதிக்காய் பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


மைக்ரோவேவில் முந்த்ரியை 1 சொட்டு நெய் விட்டு 2 நிமிடம் வைத்து எடுக்கவும். பின் அதில் உலர்ந்த திராட்சை சேர்த்து 30 வினாடிகள் வைத்து எடுக்கவும்.


 பரிமாறும் பாத்திரத்தில் எடுத்துவைத்து வறுத்த முந்திரி கிஸ்மிஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

மசால் வடை அல்லது மெது வடை அல்லது பகோடாவுடன் சுவைக்கவும்.



Thursday, January 2, 2014

Buckwheat Rice Upma

#பாப்பரைஅரிசிஉப்புமா : #பாப்பரை புரத சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். இது Buckwheat என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. நன்கு மலர்ந்து வெந்தால் சிறிது கொழ கொழ என்று இருப்பதால் தனியாக இல்லாமல் அரிசியுடன் கலந்து உப்புமா செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. உப்புமாவின் நிறம் பாப்பரையின் நிறத்தில் மாறிவிட்டது. ஆனால் சுவையில் குறை ஏதும் சொல்லமுடியாது. இனி செய்முறையை பார்க்கலாம்.

பாப்பரை அரிசி உப்புமா [ Buckwheat Rice Upma ]


தேவையான பொருட்கள் :
3/4 கப்                               பச்சரிசி
1/4 கப்                               பாப்பரை ( Buckwheat )
1 Tsp                                துவரம் பருப்பு
1                                        வெங்காயம் பொடியாக அரிந்து கொள்ளவும்
2 அ 3                                பச்சை மிளகாய் நீள வாக்கில் அரியவும்
10 அ 15                            கருவேப்பிலை
1/4 Tsp                              பெருங்காயத்தூள்
1/2 Tsp                              இஞ்சி பொடியாக நறுக்கியது
1 Tsp                                உப்பு

தாளிக்க :
1 Tsp                                 கடுகு
3 Tsp                                கடலை பருப்பு
2 Tsp                                 எண்ணெய்

செய்முறை :
அரிசியையும் துவரம் பருப்பையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் இருமுறை கழுவி வடித்துவிட்டு ஆற வைக்கவும்.


அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.
என்னை காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வாசனையுடன் இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.


நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி ஆற வைத்துள்ள அரிசியை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி ரவா போல ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும்.
பாப்பரையையும் ஒரு முறை கழுவிட்டு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.


தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.
வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.


வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படி மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் சட்னி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

பாப்பரை அரிசி உப்புமா [ Buckwheat Rice Upma ]

வெல்லம் தொட்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.