Search This Blog

Monday, December 23, 2013

Mushroom Palak Soup

#காளான்பாலக்சூப்  #மஷ்ரூம்பாலக்கீரைசூப் : #சூப் பை தமிழில் சத்தான கஞ்சி என கூறலாம். அந்தந்த காலங்களில் கிடைக்கும் காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை சில உடைத்த தானிய வகைகளுடன் சேர்த்து கொதிக்க வைத்து மிளகுடன் சேர்த்து பருகும் போது தேவையான சத்துக்கள் நம் உடலில் சேர்கிறது. சூப்பை செய்தவுடன் சூடாக பருகுவது அவசியம். மறுபடி மறுபடி கொதிக்க வைத்தால் சூப்பில் சேர்த்துள்ள காய் மற்றும் கீரை அதிகமாக வெந்து அதன் சத்து நமக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம்.
சூப் கஞ்சி பதத்திற்கு கொண்டு வருவதற்காக பெரும்பாலும் சோள மாவு அல்லது சில சமயங்களில் மைதா மாவு சேர்க்கப் படுகிறது. அதற்கு பதிலாக உடைத்த கோதுமை, ஓட்ஸ், உடைத்த மக்காசோளம், உடைத்த கம்பு போன்ற தானிய வகைகளை சேர்ப்பதால் நார்சத்து அதிக அளவில் கிடைக்கும்.

 #பாலக்கீரை யும் காளானும் புத்தம் புதியதாக நேற்று மாலை வாங்கி வந்தேன். உடனே ஏதாவது செய்து சாப்பிடலாம்  என யோசித்த போது.... சூப் செய்யலாம் என முடிவெடுத்தேன். இனி எப்படி செய்வது  என பார்ப்போம்.

காளான் பாலக் சூப்


தேவையான பொருட்கள் :
காளான் பாலக் கீரை

1 Tbsp                                    ஓட்ஸ்
2 அ 3                                     பட்டன் காளான் ( button mushroom )
1/2 கப்                                   பொடியாக நறுக்கிய பாலக் கீரை
2 Tsp                                       பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
2 Tsp                                       பொடியாக நறுக்கிய வெங்காயம்
1 Tsp                                       பொடியாக நறுக்கிய பூண்டு
1/2 Tsp                                    உப்பு
1/4 Tsp                                    வெண்ணெய்

சுவை கூட்ட :
தேவையான அளவு மிளகுதூள்.
2 Tsp  பொடியாக நறுக்கிய வெங்காய தாள் .

செய்முறை :
மைக்ரோவேவில் வைக்கக் கூடிய ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்து கொள்ளவும்.
5 நொடி சூடாக்கவும். வெளியே எடுத்து வெங்காயத்தை சேர்த்து 15 நொடிகள் சூடாக்கவும். வெங்காயத்தின் நிறம் சற்றே மாறி வாசனை வந்தால் போதும்.

இண்டக்ஷன் அடுப்பில் 800 வெப்ப அளவில் வைத்து ஒரு பாத்திரத்தில்  1 கப் தண்ணீரை  சூடாக்கவும்.
சின்ன சின்ன காற்று குமிழ்கள் பாத்திரத்தில் அடியில் வர ஆரம்பித்தவுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் ஓட்ஸ் சேர்த்து கலக்கி விடவும்.
ஓட்ஸ் சேர்த்த பிறகு  வெப்ப அளவை 120 கு குறைத்து விடவும்.
ஓட்ஸ் முக்கால் பாகம்  வெந்தவுடன் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.
3 அல்லது 4 நிமிடங்கள் 120 வெப்ப அளவிலேயே வேக விடவும்.
கடைசியாக கழுவிய காளானை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து மேலும்


இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

வெங்காயத்தை வதக்கிய கிண்ணத்தில் பூண்டை ஒரு துளி வெண்ணை சேர்த்து பொன்னிறமாக மைக்ரோவேவ் செய்துக் கொள்ளவும்.

சூப் கிண்ணத்தில் சூப்பை ஊற்றி பூண்டு , வெங்காயத்தாள் மற்றும் மிளகுதூள்
தூவி பருகவும்.

காளான் பாலக் சூப்

மற்ற சூப் பற்றி அறிய :
மஷ்ரூம் சூப்
மஷ்ரூம் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்

No comments:

Post a Comment