Search This Blog

Thursday, November 13, 2014

Neer-Dosai

#நீர்தோசை : இந்த தோசை கர்நாடக மாநிலத்தின் பிரபலமான தோசையாகும். அங்கு வசித்த காலங்களில் அடிக்கடி செய்வதுண்டு. வெகு நாட்களாக மறந்தே போய் விட்டேன். திடீரென்று சில தினங்களுக்கு முன் தொலைகாட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சியில் இந்த தோசையின் செய்முறையை பார்த்ததும் மறுபடியும் காலை சிற்றுண்டிக்காக தயாரித்தேன். மிக அருமையாக வந்திருந்தது. இங்கு இனி செய்முறையை காண்போம்.

நீர்தோசை


Ingredients :
2 cupபச்சரிசி
1/3 cupதேங்காய் துருவல்
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை

தோசை சுட்டெடுப்பதற்கு தேவையான நல்லெண்ணெய்.

செய்முறை :
அரிசியை இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி மற்றும் தேங்காயை நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவையும் கழுவி மாவுடன் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அப்போதுதான் மெல்லிய தோசையாக சுட முடியும்.


இந்த மாவை புளிக்க வைக்க தேவை இல்லை.
உடனேயே தோசை சுடலாம்.

அடுப்பில் தோசைகல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி தோசைகல்லின் வெளி ஓரத்தில் இருந்து நடு வரை மாவை வட்டமாக ஊற்றவும். 

தோசையின் மேலும் விளிம்புகளை சுற்றியும் எண்ணெய் சொட்டு சொட்டாக விடவும்.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்களும் நடுவேயும் சிவக்க ஆரம்பிக்கும்.
தோசை வெந்து விட்டது என கொள்ளலாம்.
மென்மையாக தோசை திருப்பியால் தோசையின் மேல் தெளிக்கப்பட்ட எண்ணெயை பரப்பி விடவும்.
இவ்வாறு செய்வதால் தோசை காய்ந்து போகாமல் இருக்கும்.

நீர்தோசை நீர்தோசை

தோசையை எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதேபோல தோசையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

நீர்தோசை நீர்தோசை

சுவையான மென்மையான நீர் தோசை தயார்.
காரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி சாம்பார் 

அல்லது தக்காளி சட்னி யுடன்  சுவைக்கவும்.





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலிநீர்தோசை




Tuesday, November 11, 2014

Kuthiraivaali Sundal

#குதிரைவாலிசுண்டல் : #குதிரைவாலிஅரிசி அல்லது சுருக்கமாக #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. இது ஆங்கிலத்தில் #BarnyardMillet என அழைக்கப்படுகிறது.
குதிரைவாலியை உபயோகித்து அரிசியை  போல எல்லா வகையான  பண்டங்களும் செய்யலாம். இங்கு இதனை உபயோகித்து காலை சிற்றுண்டியான சுண்டல் எவ்வாறு செய்வது என காணலாம்.

குதிரைவாலி சுண்டல்

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                          குதிரைவாலி [ barnyard millet ]
1/4 கப்                                          பச்சை பருப்பு [பாசி பருப்பு, சிறு பருப்பு ]
1 பெரிய அளவு                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
10                                                  கறுவேப்பிலை
1 சிறு துண்டு                          இஞ்சி [ விருப்பப்பட்டால் ]

தாளிக்க :
1 Tsp                                           கடுகு
3 Tsp                                           கடலை பருப்பு
3 அ 4  [ அட்ஜஸ்ட் ]            பச்சை  மிளகாய்
1/8 Tsp                                        பெருங்காயம்
2 Tsp                                           நல்லெண்ணெய்

செய்முறை :
வாணலியை  சிறிய தீயில் வைத்து முதலில் குதிரைவாலியை  வெறுமனே வறுக்கவும். கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
குதிரைவாலி அதனுடைய இயற்கையான நிறம் மாறி நல்ல வெள்ளை நிறமாக மாறும்.
குதிரைவாலி குதிரைவாலி
அந்த தருணத்தில் ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோ மாற்றி விடவும்.

இப்போது அதே வாணலியில் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.


பொன்னிறமாக வறு பட்டதும் அரிசியுடன் சேர்த்து விடவும்.
வறுத்த குதிரைவாலி மற்றும் பருப்பை தனியே வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின்  கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் பெருங்காயம், கறுவேப்பிலை, மிளகாயை இரண்டாக கீறி  போட்டு மற்றும்   இஞ்சியை சேர்த்து  சிறிது வதக்கிய உடனேயே வெங்காயத்தை சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும். வெங்காயம்  ரோஸ் நிறமாக மாறினால் போதும்.

2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கலக்கி விட்டு தீயை அதிகப் படுத்தி கொதிக்க விடவும்.

இந்த நேரத்தில் குதிரைவாலியையும் பருப்பையும் இரு முறை தண்ணீர் விட்டு கழுவி வைக்கவும்.
 கொதிக்க  ஆரம்பித்ததும் கழுவி வைத்துள்ள வரகரிசி பருப்பை சேர்த்து கலக்கி தீயை சிறியதாக்கி மூடி போட்டு வேக விடவும்.

நடுவில் ஓரிரு முறை மூடியை திறந்து கரண்டியால் கலக்கி விடவும். கிண்டும் போது கவனம் தேவை. அரிசியோ பருப்போ நசுக்கிவிடாமல் கவனமாக கிளற வேண்டும்.
வேக சுமார் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
குதிரைவாலி சுண்டல் குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல் குதிரைவாலி சுண்டல்



வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் மூடியால் மூடி வைத்திருக்கவும்.
பின்னர் எடுத்து பரிமாறலாம்.

ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் சுண்டலை வைத்து தேங்காய் துருவலை தூவி தேங்காய் சட்னியுடன் அல்லது பிடித்தமான ஊறுகாயுடன் சுவைக்கவும்.

குதிரைவாலி சுண்டல்

சுண்டலின் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் சர்க்கரை தூவி சாப்பிட்டால் சுவை மிகவும் அலாதியாக இருக்கும்.
செய்து சுவைக்கவும்!!!

குறிப்பு :
பச்சை மிளகாய்க்கு பதில்  சிகப்பு மிளகாய் கொண்டும் செய்யலாம்.






மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
அரிசி உப்புமா
அரிசி உப்புமா
அரிசி சுண்டல்
அரிசி சுண்டல்
வரகரிசி சுண்டல்
வரகரிசி சுண்டல்
புளி சுண்டல்
புளி சுண்டல்
கொள்ளு சுண்டல்
கொள்ளுசுண்டல்




Sunday, November 9, 2014

Mudakkattan-Keerai-Dosai

#முடக்கத்தான்கீரைதோசை : #முடக்கத்தான்கீரை வேலி ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் மழை முடிந்தபின் தழைத்து வளர்ந்திருப்பதை காணலாம். இது ஒரு கொடி ஆகும். வெகு விரைவில் அடர்ந்து வளரக்கொடியது.
இது முடக்கு வாதம் தீர்க்கும் குணம் உள்ளது.
இந்த கீரையின் சாறு சுரத்தை குறைக்கவல்லது.
இத்தகைய அருமையான கீரையை உபயோகித்து ஒரு சுவையான தோசை செய்வது எப்படி என காணலாம்.

முடக்கத்தான்கீரை தோசை


தேவையான பொருட்கள் :
மாவிற்கு :
1 Cupபச்சரிசி 
1 Cupஇட்லி அரிசி [ Boiled Rice ]
1 Tbspஉளுத்தம் பருப்பு [ Urad dhal ]
1/2 Tspவெந்தயம்
2 Tspஉப்பு
1 Cupமுடக்கத்தான் கீரை [ Balloon Vine leaf ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspசீரகம்
1 Tspஎண்ணெய்
1 or 2சிகப்பு மிளகாய்
வெட்டி வைக்க :
1 or 2வெங்காயம்
10கறுவேப்பிலை

தேவையான அளவு எண்ணெய் தோசை சுட்டெடுக்க.

முடக்கத்தான் கீரை

செய்முறை :
முடக்கத்தான் கீரை மற்றும் உப்பு தவிர மாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவிய பின் ஊறவைக்கவும், சுமார் 3 மணி நேரம் ஊற விடவும்.
மூன்று மணி நேரம் கழித்து மாவரைக்கும் இயந்திரத்தில் நன்கு மைய அரைக்கவும்.
உப்பு சேர்த்து கையினால் கலக்கி 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும்.

முடக்கத்தான் கீரையை கழுவிய பின்னர் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை புளித்த மாவில் சேர்த்து கலக்கவும்.
மாவை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பின் சீரகம் சேர்த்து மிளகாயை கிள்ளி போட்டு கருவேப்பிலையை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை மாவில் கொட்டி கலக்கவும்.


தோசைகல்லை அடுப்பின்மேல் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கல்லின் மேல் எண்ணெய் தடவி விடவும்.
கல் போதுமான சூடானதும் மாவை நடுவில் ஊற்றி கரண்டியால் வட்டமாக பரப்பி விடவும்.
தோசையின் மேலே வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை தூவி எண்ணெயை  சொட்டு சொட்டாக தோசையின் மேல் விட்டு மூடியால் மூடி ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

பின்னர் மூடியை எடுத்து விட்டு தோசையை திருப்பி போடவும்.
தோசையை திருப்பி போட்ட பின் மூடியால் மூடத் தேவையில்லை.

இரண்டு புறமும் நன்றாக வெந்த பின்னர் பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு தோசையாக சுட்டெடுக்கவும்.
காரமான சட்னி யுடன் சுவைக்கவும்.
முடக்கத்தான்கீரை தோசை முடக்கத்தான்கீரை தோசை




மேலும் சில சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலிநீர்தோசை
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு