#குதிரைவாலிபுளியோதரை : #புளியோதரை என்றதுமே பலருக்கு நாவில் நீரூறும். பல பேர் பெருமாள் கோவிலுக்கு போவதே புளியோதரை பிரசாதத்தை சுவைக்கவே!! இந்த புளியோதரையை அரிசியுடன் அல்லாமல் சிறு தானிய வகை கொண்டு செய்தால் என்னவென்று முயற்சித்தேன். இந்த முறை #குதிரைவாலி கொண்டு புளியோதரை செய்துள்ளேன்.
குதிரைவாலி ஆங்கிலத்தில் Barnyard மில்லெட் என அழைக்கப்படுகிறது.
English : #BarnyardMillet Or Japanese Barnyard Millet
Common Name : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh : Bhagar Or Varai
Kannada : Oodalu
Oriya : Kira
Punjabi : Swank
Telugu : Udalu Or Kodi Sama
Scientific Name : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Bharnyard Millet
To know on Millets
பொதுவாகவே சிறு தானியங்கள் அரிசி மற்றும் கோதுமையை விட உடலுக்கு மிக நல்லது. குதிரைவாலியில் நார்சத்து அரிசி மற்றும் கோதுமையை விட அதிக அளவில் உள்ளது. சிறு தானியம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உடனே சர்க்கரை சேராமல் சிறிது சிறிதாக சேருவதால் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இவ்வகை உணவை தினமும் உண்ணுவது நல்லது.
இனி செய்முறையை பாப்போம்.
தேவையான பொருட்கள் :
புளியோதரை செய்ய புளிகாச்சல் தேவை. முன்பே தயாரித்து வைக்கவும்.
1/2 கப் குதிரைவாலி
1/2 Tsp கடுகு
2 அ 3 Tsp புளிகாச்சல்
1 Tsp கடலை பருப்பு
3 Tsp நில கடலை
1/2 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
1/4 Tsp சிகப்பு மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ]
1/4 Tsp மிளகு பொடி
10 கருவேப்பிலை
4 Tsp நல்லெண்ணெய்
செய்முறை :
குதிரைவாலியை இரண்டு முறை கழுவி குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
1 கப் தண்ணீர் விட்டு மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் விசில் வரும் வரை சூடாக்கவும்.
பின்னர் தீயை குறைத்து 7 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
நன்கு ஆவி அடங்கிய பின் திறந்து வாயகல பாத்திரத்திற்கு மாற்றி நான்கு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காற்றாடியின் கீழே ஆற விடவும்.
அவ்வப்போது நசுக்காமல் கிளறி விடவும்.
சிறிது ஆறி பொல பொலவென ஆன பின்னர் புளியோதரை தயாரிக்க உபயோகப் படுத்தலாம்.
அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கொடுக்கப்பட்டுள்ள பருப்பை சிவக்க வறுத்த பின்னர் கருவேப்பிலையை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி ஆற வைத்துள்ள குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.
தேவையான உப்பு, புளிகாச்சல் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக சிறிது மிளகு தூளை பொடித்து போட்டு கிளறி வைக்கவும்.
சுவையான குதிரைவாலி புளியோதரை தயார்.
விருப்பமான கறியுடன் சுவைக்கவும். வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
மதிய உணவிற்காக எடுத்து செல்ல அருமையான உணவு.
மற்றும் சில சமையல் குறிப்புகள் :
குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
குதிரைவாலி சமையல்
சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சிறுதானிய சமையல்
குதிரைவாலி ஆங்கிலத்தில் Barnyard மில்லெட் என அழைக்கப்படுகிறது.
English : #BarnyardMillet Or Japanese Barnyard Millet
Common Name : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh : Bhagar Or Varai
Kannada : Oodalu
Oriya : Kira
Punjabi : Swank
Telugu : Udalu Or Kodi Sama
Scientific Name : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Bharnyard Millet
To know on Millets
பொதுவாகவே சிறு தானியங்கள் அரிசி மற்றும் கோதுமையை விட உடலுக்கு மிக நல்லது. குதிரைவாலியில் நார்சத்து அரிசி மற்றும் கோதுமையை விட அதிக அளவில் உள்ளது. சிறு தானியம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உடனே சர்க்கரை சேராமல் சிறிது சிறிதாக சேருவதால் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இவ்வகை உணவை தினமும் உண்ணுவது நல்லது.
இனி செய்முறையை பாப்போம்.
குதிரைவாலி புளியோதரை, வாழைப்பூ பொரியல், வாழை தண்டு தயிர் பச்சடி |
1/2 கப் குதிரைவாலி
1/2 Tsp கடுகு
2 அ 3 Tsp புளிகாச்சல்
1 Tsp கடலை பருப்பு
3 Tsp நில கடலை
1/2 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
1/4 Tsp சிகப்பு மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ]
1/4 Tsp மிளகு பொடி
10 கருவேப்பிலை
4 Tsp நல்லெண்ணெய்
செய்முறை :
குதிரைவாலியை இரண்டு முறை கழுவி குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
1 கப் தண்ணீர் விட்டு மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் விசில் வரும் வரை சூடாக்கவும்.
பின்னர் தீயை குறைத்து 7 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
நன்கு ஆவி அடங்கிய பின் திறந்து வாயகல பாத்திரத்திற்கு மாற்றி நான்கு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காற்றாடியின் கீழே ஆற விடவும்.
அவ்வப்போது நசுக்காமல் கிளறி விடவும்.
சிறிது ஆறி பொல பொலவென ஆன பின்னர் புளியோதரை தயாரிக்க உபயோகப் படுத்தலாம்.
அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கொடுக்கப்பட்டுள்ள பருப்பை சிவக்க வறுத்த பின்னர் கருவேப்பிலையை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி ஆற வைத்துள்ள குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.
தேவையான உப்பு, புளிகாச்சல் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக சிறிது மிளகு தூளை பொடித்து போட்டு கிளறி வைக்கவும்.
சுவையான குதிரைவாலி புளியோதரை தயார்.
விருப்பமான கறியுடன் சுவைக்கவும். வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
மதிய உணவிற்காக எடுத்து செல்ல அருமையான உணவு.
மற்றும் சில சமையல் குறிப்புகள் :
குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
குதிரைவாலி சமையல்
சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சிறுதானிய சமையல்
No comments:
Post a Comment