Search This Blog

Friday, March 21, 2014

Varagarisi Sundal

#வரகரிசிசுண்டல் : #வரகரிசி சிறு தானிய வகைகளுள் ஒன்றாகும். அரிசியை போலவே சமைத்து சாப்பிடலாம். இது சாமை அரிசியை போலவே வடிவத்தில் இருந்தாலும் அளவில் சற்றே பெரியது. 
வரகரிசியை உபயோகித்து அரிசியில் சுண்டல் செய்ததை போலவே செய்யலாம். இனி எவ்வாறு என பார்ப்போம். 

வரகரிசி சுண்டல்

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                          வரகரிசி [ Kodo Millet ]
1/4 கப்                                          பச்சை பருப்பு [பாசி பருப்பு, சிறு பருப்பு ]
1 பெரிய அளவு                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
10                                                  கறுவேப்பிலை
1 சிறு துண்டு                          இஞ்சி [ விருப்பப்பட்டால் ]

தாளிக்க :
1 Tsp                                           கடுகு
3 Tsp                                           கடலை பருப்பு
3 அ 4  [ அட்ஜஸ்ட் ]            பச்சை  மிளகாய்
1/8 Tsp                                        பெருங்காயம்
2 Tsp                                           நல்லெண்ணெய்

செய்முறை :
வாணலியை  சிறிய தீயில் வைத்து முதலில் வரகரிசியை வெறுமனே வறுக்கவும். கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
வரகரிசி அதனுடைய இயற்கையான நிறம் மாறி நல்ல வெள்ளை நிறமாக மாறும்.

வரகரிசி

அந்த தருணத்தில் ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோ மாற்றி விடவும்.

இப்போது அதே வாணலியில் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.


பொன்னிறமாக வறு பட்டதும் அரிசியுடன் சேர்த்து விடவும்.
வறுத்த அரிசி பருப்பை தனியே வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின்  கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் பெருங்காயம், கறுவேப்பிலை, மிளகாயை இரண்டாக கீறி  போட்டு மற்றும்   இஞ்சியை சேர்த்து  சிறிது வதக்கிய உடனேயே வெங்காயத்தை சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும். வெங்காயம்  ரோஸ் நிறமாக மாறினால் போதும்.
2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கலக்கி விட்டு தீயை அதிகப் படுத்தி கொதிக்க விடவும்.

இந்த நேரத்தில் வரகரிசியையும் பருப்பையும் இரு முறை தண்ணீர் விட்டு கழுவி வைக்கவும்.
 கொதிக்க  ஆரம்பித்ததும் கழுவி வைத்துள்ள வரகரிசி பருப்பை சேர்த்து கலக்கி தீயை சிறியதாக்கி மூடி போட்டு வேக விடவும்.


நடுவில் ஓரிரு முறை மூடியை திறந்து கரண்டியால் கலக்கி விடவும். கிண்டும் போது கவனம் தேவை. அரிசியோ பருப்போ நசுக்கிவிடாமல் கவனமாக கிளற வேண்டும்.
வேக சுமார் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

வரகரிசி சுண்டல்

வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் மூடியால் மூடி வைத்திருக்கவும்.
பின்னர் எடுத்து பரிமாறலாம்.

ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் சுண்டலை வைத்து தேங்காய் துருவலை தூவி தேங்காய் சட்னியுடன் அல்லது பிடித்தமான ஊறுகாயுடன் சுவைக்கவும்.

வரகரிசி சுண்டல்

சுண்டலின் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் சர்க்கரை தூவி சாப்பிட்டால் சுவை மிகவும் அலாதியாக இருக்கும்.
செய்து சுவைக்கவும்!!!

குறிப்பு :
பச்சை மிளகாய்க்கு பதில்  சிகப்பு மிளகாய் கொண்டும் செய்யலாம்.





மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
அரிசி உப்புமா
அரிசி உப்புமா
அரிசி சுண்டல்
அரிசி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
புளி சுண்டல்
புளி சுண்டல்
கொள்ளு சுண்டல்
கொள்ளுசுண்டல்




No comments:

Post a Comment