Search This Blog

Monday, February 16, 2015

Thayir-Nellikkai - Amla-in-Curd

#தயிர்நெல்லிக்காய் : #நெல்லிக்காய் வைட்டமின் C அதிகமாக நிறைந்துள்ள ஒரு அருமையான கனியாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரும்பு சத்தை உடலில் சேர்க்கவும் இந்த வைட்டமின் C மிகவும் அவசியம் ஆகும். நம் அன்றாட உணவில் நெல்லிக்கனியை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான வைட்டமின் C  கிடைக்கப் பெறலாம்.
இதுவரை நெல்லிக்காயை  உபயோகித்து பலவிதமான சட்னி செய்யும் முறைகளை அறிந்து கொண்டோம். இங்கு நெல்லிக்காயை தயிரில் கலந்து செய்யப்படும் தயிர் நெல்லிக்காய் செய்யும் முறையை காண்போம்.

தயிர் நெல்லிக்காய்

தேவையான பொருட்கள் :
3 or 4நெல்லிக்காய் [ gooseberry ]
1 கப்தயிர் 
a pinchமஞ்சத்தூள்
1/4 Tspமிளகாய் தூள் [ விரும்பினால் ]
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
1/4 Tspபெருங்காய தூள்
6 or 7கறுவேப்பிலை
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/4 Tspவெந்தயம்
2 Tspநல்லெண்ணெய் 

செய்முறை :
நெல்லிக்காயை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி வைக்கவும்.
இட்லி பானையிலோ அல்லது குக்கரிலோ ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.
குக்கரில் ஆவியில் வேக வைக்கும் போது மூடியின் மீது வெயிட் பொருத்த வேண்டாம்.
ஆவியில் வேக வைத்த நெல்லிக்காயை வெளியில் எடுத்து கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு சுத்தமான கண்ணாடி கிண்ணத்தில் தயிருடன் பெருங்கயத்தூள் சேர்த்து தேக்கரண்டியால் அடித்து கலக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை மிதமான தணலில் வைத்து சூடாக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெடிக்க விட்ட பின்னர் வெந்தயம் சேர்த்து உடனேயே பச்சை மிளகாய் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வரை வதக்கவும்.
இதனை கிண்ணத்தில் உள்ள தயிருடன் சேர்க்கவும்.
அதே வாணலியில் மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு நெல்லிக்காய் துண்டுகள், மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதக்கியதை தயிருடன் சேர்க்கவும்..
தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பிறகு உண்ண ஆரம்பிக்கலாம்.
குளிர் சாதனப்பெட்டியில் இரண்டு மூன்று நாட்களுக்கு பத்திரப்படுத்தி உண்ணலாம்.

Thayir Nellikkai [ Gooseberry in curd ]

அப்படியே சும்மாவும் சாப்பிடலாம்.
பருப்பு சாதம் மற்றும் சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் தூள் அளவை அவரவர் சுவைக்கு ஏற்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
தயிர் புளிக்காத தயிராக இருந்தால் சுவை அருமையாக இருக்கும்.



சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் சட்னி
நெல்லிக்காய்
சட்னி


சிறுதானியங்கள் சமையல் செய்முறைகள்











Tuesday, February 10, 2015

Vallarai-Chutney 1

#வல்லாரைசட்னி 1 : #வல்லாரை யை நீர் நிலைகளின் அருகே அதிக அளவில் தானாக படர்ந்திருப்பதை காணலாம். வல்லாரை தரையில் பரவும் கொடியாகும். கொத்து கொத்தாக ஒன்றோடு ஒன்று இணைந்து பரவி இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு இலையும் நீண்ட தண்டை உடையதாக இருக்கும்.
இதனை ஆங்கிலத்தில் பொதுவாக #centella அல்லது gotu kola என அழைக்கப்படுகிறது. வல்லாரையின் அறிவியல் பெயர் Centella asiatica.
வல்லாரையை  Asiatic pennywort அல்லது Indian pennywort என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது உண்டு.
வல்லாரைக்கு நினைவாற்றலை அதிகப்படுத்தும் தன்மை உள்ளதாக  இயற்கை மருத்துவத்தில் கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய கூற்று எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. இருப்பினும் நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லையே!!
சென்ற பதிவில் வல்லாரை தேங்காய் சட்னி செய்யும் முறையை பார்த்தோம். அதில் வல்லாரையின் அளவு தேங்காய் துருவலின் அளவை விட குறைவாக எடுத்துக் கொண்டோம். இங்கு வல்லாரையை அதிக அளவில் உபயோகித்து சட்னி செய்யும் முறையை காண்போம். ருசி சிறிது மாறுபட்டு இருக்கும்.
ஆனால் சுவை அருமையாக வல்லாரை கீரையின் மணத்துடன் இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.

வல்லாரை சட்னி [ Centella Chutney ]

தேவையான பொருட்கள் :
50 - 60வல்லாரை இலைகள்
1 Tbspதேங்காய் துருவல்
2 Tspஉளுத்தம் பருப்பு தோலுடன்
1/2 Tspமிளகு
1/2 Tspகொத்தமல்லி விதை
2 or 3சிகப்பு மிளகாய்
1 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
1/2 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]
3/4 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
7 - 9கறுவேப்பிலை
1 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
 முதலில் மிளகாயை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுத்து தேவையானால் சிறிது எண்ணெய் விட்டு மிளகையும் கொத்தமல்லி விதைகளையும் வறுத்து எடுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அதே வாணலியில் கழுவிய வல்லாரை இலைகளை அரை நிமிடம் வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் ஆற விடவும்.
பின்னர் வதக்கிய பொருட்களுடன் மற்ற தேவையான பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறின் சுவையை சரி பார்க்கவும்.
ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் மறுபடியும் வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கருவேப்பிலையை தாளித்து கொட்டவும்.
சுவையான வல்லாரை சட்னி தயார்!!

தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி, பொங்கல், உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி சட்னி சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பாருடன் சாப்பிட்டால் சுவையோ சுவை!!..

வல்லாரை சட்னி





மற்ற சட்னி வகைகள் செய்து பார்க்க
வல்லாரை தேங்காய் சட்னி கரிசலாங்கண்ணி துவையல் வேப்பம்பூ துவையல்





Saturday, February 7, 2015

Kaezhvaragu-Koozh

#கேழ்வரகுகூழ் : #கேழ்வரகு கொண்டு தோசை மற்றும் பணியாரம் செய்யும் முறையை முன்பு பார்த்திருக்கிறோம். இங்கு மிக எளிமையானதும் சுவையானதும் ஆகிய கூழை எவ்வாறு காய்ச்சுவது என்று காண்போம்.

கேழ்வரகு கூழ்

தேவையான பொருட்கள் :
1 Tbsp குவித்துகேழ்வரகு மாவு
1 கப் தண்ணீர்
1/2 Tspஉப்பு
1/2 Tspகடுகு
6 - 8கறுவேப்பிலை
2 - 3சின்ன வெங்காயம்
2 pinchபெருங்காய தூள்
1 Tspஎண்ணெய்
சிறிது கொத்தமல்லி தழை மேலே தூவ
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு 1 கப்  தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.


பின்னர் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு கரண்டியால் கை விடாமல் கலக்கிகொண்டே இருக்கவும்.
 சில நிமிடங்கள் கழித்து மாவு வெந்து பளபளப்பாக மாற ஆரம்பிக்கும்.
நிறமும் ஆழ்ந்த நிறத்திற்கு மாறும்.
கஞ்சி பதத்தை அடைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
உப்பு சேர்த்து  கலக்கி ஆற விடவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்கவிட்ட பின்னர் பெருங்காய தூள் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை தயாரித்து வைத்துள்ள கூழில் கொட்டவும்.
நன்கு ஆற வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் தயிர், சில கொத்தமல்லி தழைகள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பருகவும்.
சுவையான கேழ்வரகு கூழ் தயார்!!!

கேழ்வரகு கூழ்


தினமும் முதல் நாள் இரேவே தயாரித்து வைத்து  மறுநாள் காலை காபி / டீ கு பதில் அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.





மேலும் சில சமையல் குறிப்புகள்
கம்பு கூழ் கோதுமை ரவா கஞ்சி குதிரைவாலி வெந்தய கஞ்சி






Thursday, February 5, 2015

Pachaimilagai-Chutney

#பச்சைமிளகாய்சட்னி : பச்சை மிளகாயுடன் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை கொத்தமல்லி தழை சேர்த்து அரைக்கப்படும் மிகவும் காரமான சட்னியாகும். அரைத்தவுடன் சாப்பிடும் போது ருசியாகவும் சுள்ளென்ற காரத்துடனும் இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற சட்னியாகும். சிறிது புளிப்பு சுவை இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுபவர்கள் எலுமிச்சை சாறை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
இனி தேவையான பொருட்களையும் அரைக்கும் விதத்தையும் காண்போம்.

பச்சைமிளகாய் சட்னி
Ingredients :
10 - 12பச்சை மிளகாய்
15 - 20சின்ன வெங்காயம்
1/4 cupகொத்தமல்லி தழை நறுக்கியது [ adjust ]
1/2 Tspஉப்பு [ adjust ]
செய்முறை :
வெங்காயத்தின் தோலை உறித்து தனியே வைக்கவும்.
பச்சை மிளகாயை கழுவி காம்பை நீக்கவும்.
கொத்தமல்லி தழையை கழுவி பின்னர் நறுக்கி வைக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயின் நீர் சத்து அரைக்க போதுமானதாக இருக்கும்.
தேவையெனில் 1 அல்லது 2 தேக்கரண்டி நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கார சாரமான பச்சைமிளகாய் சட்னி தயார்.

பச்சைமிளகாய் சட்னி பச்சைமிளகாய் சட்னி
ஒரு தேக்கரண்டி சட்னியை தட்டில் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை சட்னியின் மேலே ஊற்றி இட்லியுடன் தொட்டு கொண்டு சாப்பிட்டால்.... உஸ்...உஸ்ஸா... காரம் நாவை சுள்ளென்று சுடும். இட்லியும் வேகமாக உள்ளே இறங்கும்!!...
தோசையுடனும் அருமையாக இருக்கும்.
ஓரிரு நாட்களுக்கு குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தலாம்.
ஆனால் செய்தவுடன் சாப்பிடும் சுவை இருக்காது. காரமும் குறைந்து விடும்.







Tuesday, February 3, 2015

Vallarai-Thaengai-Chutney

#வல்லாரைதேங்காய்சட்னி : #வல்லாரை யை நீர் நிலைகளின் அருகே அதிக அளவில் தானாக படர்ந்திருப்பதை காணலாம். வல்லாரை தரையில் பரவும் கொடியாகும். கொத்து கொத்தாக ஒன்றோடு ஒன்று இணைந்து பரவி இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு இலையும் நீண்ட தண்டை உடையதாக இருக்கும்.
இதனை ஆங்கிலத்தில் பொதுவாக #centella அல்லது gotu kola என அழைக்கப்படுகிறது. வல்லாரையின் அறிவியல் பெயர் Centella asiatica.
வல்லாரையை  Asiatic pennywort அல்லது Indian pennywort என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது உண்டு.
வல்லாரைக்கு நினைவாற்றலை அதிகப்படுத்தும் தன்மை உள்ளதாக  இயற்கை மருத்துவத்தில் கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய கூற்று எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. இருப்பினும் நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லையே!!
இங்கு வல்லாரை மற்றும் தேங்காய் சேர்த்து சட்னி எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

வல்லாரை தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள் :
20வல்லாரை இலைகள்
1/3 கப்தேங்காய் துருவல்
2 Tspஉளுத்தம் பருப்பு தோலுடன்
2 or 3சிகப்பு மிளகாய்
1 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
1/2 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]
3/4 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
1 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
 முதலில் மிளகாயை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அதே வாணலியில் கழுவிய வல்லாரை இலைகளை அரை நிமிடம் வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் ஆற விடவும்.
பின்னர் வதக்கிய பொருட்களுடன் மற்ற தேவையான பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறின் சுவையை சரி பார்க்கவும்.
ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் மறுபடியும் வாணலியை சூடாக்கி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை தாளித்து கொட்டவும்.
சுவையான வல்லாரை தேங்காய் சட்னி தயார்!!

தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி, பொங்கல், உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி சட்னி சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பாருடன் சாப்பிட்டால் சுவையோ சுவை!!..
வல்லாரை
வல்லாரை தேங்காய் சட்னி
வல்லாரை தேங்காய் சட்னி வல்லாரை தேங்காய் சட்னி






Monday, February 2, 2015

Noolkhol-Papaya-Sambar

#நூல்கோல்பப்பாளிசாம்பார் : எனது அண்டை வீட்டில் வசிக்கும் தோழி ஒருவர் அவர் இல்லத்தில் விளைந்த நூல்கோலை கொடுத்தார். பப்பாளி காய் ஒன்றும் வீட்டில் இருந்தது. இரண்டையும் சேர்த்து சாம்பார் செய்ய முடிவு செய்தேன்.
பப்பாளிகாயின் பலன்களை பற்றி சென்ற பதிவான பப்பாளி காரட் சாலட்   சமையல் குறிப்பில் பார்த்தோம். பச்சையாக சாலட் சாப்பிட விரும்பாதவர்கள் சாம்பார் மற்றும் கூட்டு போன்ற உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இனி செய்முறையை காண்போம்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 1/3 Tbsp
நூல்கோல்                                                      : 1
பப்பாளிக்காய்  துண்டுகள்                       : 1/2 கப்
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
நூல்கோலின்  தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

குக்கரில்  3/4  Cup நீர் சேர்க்கவும்.
அதில் நூல்கோலை 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
பருப்பை கரண்டியால் நன்கு மசித்து சேர்க்கவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பவுடர் , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.


மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.
வெட்டிவைத்துள்ள பப்பாளிகாயை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்


சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.