Search This Blog

Showing posts with label சிறு தானியம். Show all posts
Showing posts with label சிறு தானியம். Show all posts

Friday, June 12, 2015

Kanji - Porridge - Gruel

#கஞ்சி வகைகள் : உடைத்த தானியங்கள் அல்லது #சிறுதானியங்கள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து கஞ்சி காய்ச்சப்படுகிறது. காய்ச்சிய கஞ்சியில் உப்பு சேர்த்து பருகப்படுகிறது. பெரும்பாலும் மோர் சேர்த்து கஞ்சி பருகுவது வழக்கம். சில சமயங்களில் பாலுடன் கலந்தும் பருகலாம். 

சோள கஞ்சி
சோள கஞ்சி

#கம்பு மற்றும் #கேழ்வரகு கஞ்சி காய்ச்சி புளிக்கவைத்து புளித்த மோர் விட்டு சாப்பிட்டால் அதன் சுவையே அலாதிதான்.
முன்பெல்லாம் கஞ்சி ஏழைகளின் உணவாகவே கருதப்பட்டது. நமது சந்தையில் ஓட்ஸ் விற்க ஆரம்பித்த பிறகு கஞ்சி குடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இப்போதெல்லாம் கஞ்சி குடிப்பது நவீன பாணி என்ற நிலைக்கு ஓட்ஸ் பயன்பாடு நம்மை கொண்டு வந்து விட்டது.
பொதுவாக கஞ்சி வறுத்த மோர்மிளகாய் அல்லது வற்றல் அல்லது ஊறுகாயுடன் அருந்தப்படுகிறது. சட்னி அல்லது வத்தக்குழம்பு அல்லது கார குழம்பு ஆகியவற்றுடனும் சுவைக்கலாம்.
இங்கு சில கஞ்சி வகைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
கஞ்சி வகைகள்
கம்பு கூழ்
கம்பு கூழ்
குதிரைவாலி வெந்தய கஞ்சி
குதிரைவாலி வெந்தய கஞ்சி
கோதுமைரவா கஞ்சி
கோதுமைரவா கஞ்சி
மக்காசோளரவா கஞ்சி
மக்காசோளரவா கஞ்சி
வரகரிசி வெந்தயகஞ்சி
வரகரிசி வெந்தயகஞ்சி
கேழ்வரகு கூழ்
கேழ்வரகு கூழ்
சோள கஞ்சி
சோள கஞ்சி






Wednesday, May 27, 2015

Kambu-Pearl-Millet

#கம்பு
ஆங்கில பெயர் : Pearl Millet
ஹிந்தி பெயர் : பாஜ்ரா
அறிவியல் பெயர் : Pennisetum glaucum
கம்பு


#சிறுதானியங்கள் பற்றி மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.
Millet
http://en.wikipedia.org/wiki/Millet

இங்கு கம்பு உபயோகித்து செய்யப் பட்டுள்ள உணவு பொருட்களின் சமையல் குறிப்புகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.
சிற்றுண்டி வகைகள்
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை
கம்பு சிங்காரா நீர் கொழுக்கட்டை 
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு காலி ப்ளவர் அடை
கம்பு கூழ்
கம்பு  கூழ்
கம்பு தோசை
கம்பு தோசை
கம்பு இட்லி
கம்பு இட்லி


கார வகைகள் 
கம்பு பகோடா
கம்பு பகோடா
கம்பு முறுக்கு
கம்பு முறுக்கு




Sunday, May 18, 2014

Kuthiraivaali Puliyodharai

#குதிரைவாலிபுளியோதரை : #புளியோதரை என்றதுமே பலருக்கு நாவில் நீரூறும். பல பேர் பெருமாள் கோவிலுக்கு போவதே புளியோதரை பிரசாதத்தை சுவைக்கவே!! இந்த புளியோதரையை அரிசியுடன் அல்லாமல் சிறு தானிய வகை கொண்டு செய்தால் என்னவென்று முயற்சித்தேன். இந்த முறை #குதிரைவாலி கொண்டு புளியோதரை செய்துள்ளேன்.
குதிரைவாலி ஆங்கிலத்தில் Barnyard மில்லெட் என அழைக்கப்படுகிறது.

English                                : #BarnyardMillet Or Japanese Barnyard Millet
Common Name                  : Sawan Or sanwa Or Samo Or Morio
Marathi & Chhattisgarh       : Bhagar Or Varai
Kannada                             : Oodalu
Oriya                                  : Kira
Punjabi                               : Swank
Telugu                                : Udalu Or Kodi Sama
Scientific Name                   : Echinochloa Frumentacea
Source : Echinochloa , Bharnyard Millet 
To know on Millets

பொதுவாகவே சிறு தானியங்கள் அரிசி மற்றும் கோதுமையை விட உடலுக்கு மிக நல்லது. குதிரைவாலியில் நார்சத்து அரிசி மற்றும் கோதுமையை விட அதிக அளவில் உள்ளது.  சிறு தானியம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உடனே சர்க்கரை சேராமல் சிறிது சிறிதாக சேருவதால் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இவ்வகை உணவை தினமும் உண்ணுவது நல்லது.
இனி செய்முறையை பாப்போம்.

குதிரைவாலி புளியோதரை
குதிரைவாலி புளியோதரை, வாழைப்பூ பொரியல்,
வாழை தண்டு  தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :

புளியோதரை செய்ய புளிகாச்சல் தேவை. முன்பே தயாரித்து வைக்கவும்.

1/2 கப்                                   குதிரைவாலி
1/2 Tsp                                    கடுகு
2 அ 3 Tsp                               புளிகாச்சல்
1 Tsp                                       கடலை பருப்பு
3 Tsp                                       நில கடலை
1/2 Tsp                                    உப்பு [ அட்ஜஸ்ட் ]
1/4 Tsp                                    சிகப்பு மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ]
1/4 Tsp                                    மிளகு பொடி
10                                           கருவேப்பிலை
4 Tsp                                       நல்லெண்ணெய்

செய்முறை :
குதிரைவாலியை இரண்டு முறை கழுவி குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
1 கப் தண்ணீர் விட்டு மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் விசில் வரும் வரை சூடாக்கவும்.
பின்னர் தீயை குறைத்து 7 நிமிடங்கள் வைத்திருக்கவும்.


நன்கு ஆவி அடங்கிய பின் திறந்து வாயகல பாத்திரத்திற்கு மாற்றி நான்கு தேக்கரண்டி எண்ணெய்  விட்டு காற்றாடியின் கீழே ஆற விடவும்.
அவ்வப்போது நசுக்காமல் கிளறி விடவும்.

சிறிது ஆறி பொல பொலவென ஆன பின்னர் புளியோதரை தயாரிக்க உபயோகப்  படுத்தலாம்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கொடுக்கப்பட்டுள்ள பருப்பை சிவக்க வறுத்த பின்னர் கருவேப்பிலையை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி ஆற வைத்துள்ள குதிரைவாலி சாதத்தின் மேல் கொட்டவும்.


தேவையான உப்பு, புளிகாச்சல் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக சிறிது மிளகு தூளை பொடித்து போட்டு கிளறி வைக்கவும்.

குதிரைவாலி புளியோதரை

சுவையான குதிரைவாலி புளியோதரை தயார்.
விருப்பமான கறியுடன் சுவைக்கவும். வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

மதிய உணவிற்காக எடுத்து செல்ல அருமையான உணவு.



மற்றும் சில சமையல் குறிப்புகள் :
குதிரைவாலி கொத்தமல்லி சாதம் குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வரகரிசி புளியோதரை


குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

குதிரைவாலி சமையல்



சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

சிறுதானிய சமையல்




Friday, March 21, 2014

Varagarisi Sundal

#வரகரிசிசுண்டல் : #வரகரிசி சிறு தானிய வகைகளுள் ஒன்றாகும். அரிசியை போலவே சமைத்து சாப்பிடலாம். இது சாமை அரிசியை போலவே வடிவத்தில் இருந்தாலும் அளவில் சற்றே பெரியது. 
வரகரிசியை உபயோகித்து அரிசியில் சுண்டல் செய்ததை போலவே செய்யலாம். இனி எவ்வாறு என பார்ப்போம். 

வரகரிசி சுண்டல்

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                          வரகரிசி [ Kodo Millet ]
1/4 கப்                                          பச்சை பருப்பு [பாசி பருப்பு, சிறு பருப்பு ]
1 பெரிய அளவு                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
10                                                  கறுவேப்பிலை
1 சிறு துண்டு                          இஞ்சி [ விருப்பப்பட்டால் ]

தாளிக்க :
1 Tsp                                           கடுகு
3 Tsp                                           கடலை பருப்பு
3 அ 4  [ அட்ஜஸ்ட் ]            பச்சை  மிளகாய்
1/8 Tsp                                        பெருங்காயம்
2 Tsp                                           நல்லெண்ணெய்

செய்முறை :
வாணலியை  சிறிய தீயில் வைத்து முதலில் வரகரிசியை வெறுமனே வறுக்கவும். கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
வரகரிசி அதனுடைய இயற்கையான நிறம் மாறி நல்ல வெள்ளை நிறமாக மாறும்.

வரகரிசி

அந்த தருணத்தில் ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோ மாற்றி விடவும்.

இப்போது அதே வாணலியில் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.


பொன்னிறமாக வறு பட்டதும் அரிசியுடன் சேர்த்து விடவும்.
வறுத்த அரிசி பருப்பை தனியே வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின்  கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு பொன்னிறமானதும் பெருங்காயம், கறுவேப்பிலை, மிளகாயை இரண்டாக கீறி  போட்டு மற்றும்   இஞ்சியை சேர்த்து  சிறிது வதக்கிய உடனேயே வெங்காயத்தை சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும். வெங்காயம்  ரோஸ் நிறமாக மாறினால் போதும்.
2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கலக்கி விட்டு தீயை அதிகப் படுத்தி கொதிக்க விடவும்.

இந்த நேரத்தில் வரகரிசியையும் பருப்பையும் இரு முறை தண்ணீர் விட்டு கழுவி வைக்கவும்.
 கொதிக்க  ஆரம்பித்ததும் கழுவி வைத்துள்ள வரகரிசி பருப்பை சேர்த்து கலக்கி தீயை சிறியதாக்கி மூடி போட்டு வேக விடவும்.


நடுவில் ஓரிரு முறை மூடியை திறந்து கரண்டியால் கலக்கி விடவும். கிண்டும் போது கவனம் தேவை. அரிசியோ பருப்போ நசுக்கிவிடாமல் கவனமாக கிளற வேண்டும்.
வேக சுமார் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

வரகரிசி சுண்டல்

வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் மூடியால் மூடி வைத்திருக்கவும்.
பின்னர் எடுத்து பரிமாறலாம்.

ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் சுண்டலை வைத்து தேங்காய் துருவலை தூவி தேங்காய் சட்னியுடன் அல்லது பிடித்தமான ஊறுகாயுடன் சுவைக்கவும்.

வரகரிசி சுண்டல்

சுண்டலின் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் சர்க்கரை தூவி சாப்பிட்டால் சுவை மிகவும் அலாதியாக இருக்கும்.
செய்து சுவைக்கவும்!!!

குறிப்பு :
பச்சை மிளகாய்க்கு பதில்  சிகப்பு மிளகாய் கொண்டும் செய்யலாம்.





மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க
அரிசி உப்புமா
அரிசி உப்புமா
அரிசி சுண்டல்
அரிசி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
புளி சுண்டல்
புளி சுண்டல்
கொள்ளு சுண்டல்
கொள்ளுசுண்டல்