Search This Blog

Sunday, November 17, 2013

Green Chutney 1

#கொத்தமல்லிசட்னி : இது பனிகாலமாதனால் நிறைய பச்சை கொத்தமல்லி கிடைக்கிறது. தற்போது வெங்காய விலையும் அதிகமாக இருப்பதால் இவ்வகை சட்னிகள் நமது பட்ஜெட்டில் துண்டு விழாமல் காப்பற்றும். முந்தைய பதிவில் மற்றொரு கொத்தமல்லி சட்னி செய்முறை கொடுத்துள்ளேன். அதற்கு மிளகாய் மற்றும் பருப்பை எண்ணெயில் வறுக்க  வேண்டும். ஆனால் இந்த சட்னிக்கு வறுக்கவே தேவையில்லை.

கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது : 1 Cup
பச்சை மிளகாய்                                       : 5 ( கூட்டி கொள்ளலாம் )
புளி                                                             : நெல்லிக்காய் அளவு
உப்பு                                                            : 1 Tsp ( தேவைக்கேற்ப )


செய்முறை :
கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸ்யில் எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பச்சை கொத்தமல்லியில் இருக்கும் ஈரமே போதும்.
தேவையானால் சிறுது நீர் விட்டு நன்கு அரைத்தெடுக்கவும்.
அரைத்ததை ஒரு சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இட்லி, தோசை, பொங்கல், மற்றும் உப்புமாவுடன் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
வெள்ளை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.




மற்ற கொத்தமல்லி சட்னி வகைகள்
கொத்தமல்லி புதினா துவையல் கொத்தமல்லி சட்னி 2 கொத்தமல்லி விதை சட்னி

No comments:

Post a Comment