காரட் பீட்ரூட் பொரியல் : இரண்டுமே எளிதில் வேகக்கூடியதால் சேர்த்து பொரியல் செய்யலாம். கலந்து செய்யும் பொரியல் பீட்ரூட்டின் கலரில்தான் இருக்கும். இரண்டுமே இனிப்பு சுவையுடயதாகையால் பொரியலும் சிறிது இனிப்பு தூக்கலாக இருக்கும். அதற்கு ஏற்ப காரத்தை விருப்பப்படி கூட்டி கொள்ளவும்.
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் துருவியது : 1/2 Cup
காரட் துருவியது : 1/2 Cup
பெரிய வெங்காயம் : 1 சிறியது
சாம்பார் பொடி : 3/4 Tsp ( அட்ஜஸ்ட் )
கொத்தமல்லி தழை : சிறிது
உப்பு : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )
தேங்காய் துருவல் : 2 Tsp
தாளிக்க :
கடுகு : 1/4 Tsp
உளுத்தம் பருப்பு : 1 Tsp
எண்ணெய் : 1/2 Tsp
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை விட்டு சூடு பண்ணவும்.
சரியான சூடு ஏறியதும் கடுகை வெடிக்க விடவும்.
பின் உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை காத்திருந்து வெங்காய துண்டுகளை சேர்க்கவும்.
வெங்காய மணம் வர ஆரம்பித்ததும் சாம்பார் பொடியை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
இப்போது காரட் மற்றும் பீட்ரூட்டை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கலக்கும் படி கிளறவும்.
தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே வெந்து விடும்.
நீண்ட நேரம் வேக வைக்க வேண்டாம்.
வெந்தவுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.
அதற்குரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இந்த பொரியல் ரசம் சாதத்துடனும் சாம்பார் சாதத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment