Search This Blog

Sunday, November 24, 2013

Varagarisi Puliyodharai

#வரகரிசிபுளியோதரை :  சிறு தானிய வகைகளில் #வரகரிசி யும் ஒன்று. சுருக்கமாக #வரகு என்றும் அழைக்கலாம். இதனை #கோடோமில்லெட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ஜவ்வரிசியைப் போல மிக மிக சிறிய வடிவத்தில் இருக்கும்.

வரகு அரிசியின் அறிவியல் பெயர் Paspalum Scrobiculatum  அரிசியை போலவே இதனை சமையலில் உபயோக படுத்தலாம்.
மேலும் #சிறுதானியம் வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet

வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet

தமிழில் வரகு 
 பெரும்பாலும் சிறு கற்களும் மண்ணும் கலந்து காணப்படும். அதனால் சமைப்பதற்கு முன் அவற்றை அகற்றி விட்டு சமைக்க வேண்டும்.

வரகரிசி புளியோதரை

தேவையான பொருட்கள் : 


வரகரிசி அல்லது வரகு
தமிழ் : வரகரிசி ; English : Kodo Millet 

வரகரிசி                                       : 1/2 கப்
தண்ணீர்                                       :1 கப்
புளிகாச்சல்                               : 2 Tsp [ adjust ]
உப்பு                                              : 1/2 Tsp
சிகப்பு மிளகாய் தூள்              : 1/4 Tsp ( தேவையானால் )
நல்லெண்ணெய்                      : 3 Tsp

அலங்கரிக்க :
கடலை பருப்பு         : 1/2 Tsp
நிலக்கடலை            : 2 Tsp
கருவேப்பிலை       : 10

செய்முறை :
வரகரிசியை குக்கரில் 3 விசில்கள் வந்தபின் 5 நிமிடம் தீயை குறைத்து  வேக வைக்கவும்.
நீராவி அடங்கியவுடன் ஒரு அகண்ட பாத்திரத்திற்கு மாற்றி 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பரத்தி மின்விசிறியின் கீழ் ஆற விடவும்.

வரகரிசி சாதம்

சிறிது ஆறியதும் உப்பு, புளிக்காச்சல். மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, கடலை மற்றும் கருவேப்பிலையை வறுத்து தயாரித்த புளியோதரையை அலங்கரிக்கவும்.

வரகரிசி புளியோதரை

வரகரிசி புளியோதரை தயார். உருளை கிழங்கு வருவலுடனோ அல்லது அப்பளமுடனோ சுவைக்கவும்.

மற்றும் சில சமையல் குறிப்புகள் :
குதிரைவாலி கொத்தமல்லி சாதம் வரகரிசி தக்காளி சாதம் வரகரிசி புதினா பிரியாணி




No comments:

Post a Comment