#கொத்தமல்லிசூப் : சென்ற வாரம் ஒரு இரவு விருந்திற்கு சென்றிருந்தேன். அப்போது உணவுக்கு முன் ஒரு சூப் பரிமாறினார்கள். மிகவும் நல்ல வாசனையுடன் இருந்தது. கொத்தமல்லி வாசனை என உடனே புரிந்தது.
கூடவே பூண்டின் மணமும் தூக்கலாக இருந்தது. மறு நாள் வீட்டில் முயற்சி செய்தேன். நன்றாக வந்தது. ஆனால் விருந்தில் அருந்தியது இன்னும் நன்றாக இருந்தது.
இங்கு எப்படி இந்த சூப்பை செய்தேன் என பார்க்கலாம். நான் அருந்திய சுவை கிடைக்கும் வரை மறுபடியும் முயற்சி செய்வேன். சரியாக வந்ததும் எப்படி செய்வது என்பதை பிறகு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது : 3 Tbsp
பூண்டு பற்கள் : 6 ( பொடியாக நறுக்கவும் )
வெங்காயம் அறிந்தது : 1 Tsp
தண்ணீர் : 1 கப்
ஓட்ஸ் : 1 Tsp குவித்து
எண்ணெய் ( அ ) வெண்ணெய் : 1/4 Tsp
அலங்கரிக்க :
மிளகுத்தூள் : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )
செய்முறை :
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்றி சிறிய தீயில் சுட வைக்கவும்.
இன்னொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ( அ ) வெண்ணெய் சூடாக்கி முதலில் பூண்டை நன்றாக வதக்கி, பிறகு வெங்காயத்தை லேசாக வதக்கி சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.
கொத்தமல்லி மற்றும் ஓட்ஸ் சேர்த்து கலக்கவும்.
கரண்டியால் கஞ்சி பதம் வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.
தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து சூப் கிண்ணத்தில் ஊற்றி மேலே மிளகுதூள் தூவி பரிமாறவும்.
இந்த நறுமணம் மிக்க கொத்தமல்லி சூப் மாலை வேலையில் அருந்த மிகவும் நன்றாக இருக்கும்.
மைக்ரோவேவ் செய்த மிளகு அப்பளத்துடன் சுவைத்தால் அருமையோ அருமை!! ம்ம்... இன்னொரு முறை கேட்பீர்கள்!!
மற்ற சூப் வகைகள் முயற்சி செய்து பார்க்க :

|
|
|
|
No comments:
Post a Comment