Search This Blog

Saturday, November 16, 2013

Kothamally Pudina Thuvaiyal

#கொத்தமல்லிபுதினாதுவையல் : இது பனி காலமானதால் பச்சையான நல்ல #கொத்தமல்லி நிறைய கிடைத்தது. அதனால் இன்று பொங்கலுக்கு கொத்தமல்லி துவையல் அரைக்கலாம் என திட்டமிட்டேன். எப்படி என இனி பார்க்கலாம்.

கொத்தமல்லி புதினா துவையல்

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி பொடியாக நறுக்கியது     : 1 Cup
புதினா பொடி  [காய்ந்த புதினா ]                 : 2 Tsp
இஞ்சி பொடியாக நறுக்கியது                     : 1 Tsp
துறுவிய தேங்காய்                                         : 3 Tbsp
உளுத்தம் பருப்பு                                              : 3 Tsp
சிகப்பு மிளகாய்                                                 : 2 ( அட்ஜஸ்ட் )
பச்சை மிளகாய்                                                : 1
எலுமிச்சை பழச்சாறு                                     : 2 Tsp ( அட்ஜஸ்ட் )
உப்பு                                                                        : 1 Tsp ( அட்ஜஸ்ட் )

செய்முறை :

எண்ணைச்சட்டியை அடுப்பில் வைத்து 1 Tsp எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் சிகப்பு மிளகாயை வறுத்து எடுக்கவும்.
உளுத்தம்  பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்தவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


இஞ்சியை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.


வறுத்த பொருட்களை மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து எடுக்கவும்.


பொங்கலுடன் தொட்டு சாப்பிட நல்ல துவையல்.


சூடான சாதத்தில் 1 Tsp துவையலுடன் 1 Tsp நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.


குறிப்பு : புதினா பொடி காய்ந்த புதினா  இலையிலிருந்து பொடித்துக் கொள்ளலாம்.
புதினா பொடிக்கு பதிலாக பச்சை புதினா இலைகளை உபயோகிக்கலாம்.



மற்ற சட்னி வகைகள் கொத்தமல்லியுடன் 
கொத்தமல்லி விதை சட்னி கொத்தமல்லி தேங்காய் சட்னி கொத்தமல்லி சட்னி 2

No comments:

Post a Comment