காரட் பாயசம் : காரட்டை பொரியல், உப்புமா, சாலட், அல்வா,... ஆகியவற்றில் உபயோகித்துள்ளோம். ஒரு மாறுதலுக்காக பாயசம் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. இப்போது எப்படி என உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.
தேவையான பொருட்கள் :
1/3 கப் காரட் துருவியது
1 சிட்டிகை உப்பு
1 கப் பால்
1 Tbsp சர்க்கரை [ அட்ஜஸ்ட் ]
1 Tbsp குவித்து கஸ்டர்ட் பவுடர்
செய்முறை :
கஸ்டர்ட் பவுடரை கரைக்க 1/8 கப் பாலை தனியே ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து காரட்டை சிறிய தீயில் கை விடாமல் வதக்கவும். நெய் அல்லது வெண்ணெய் எதுவும் தேவை இல்லை.
காரட்டின் மணம் வர ஆரம்பித்ததும் சர்க்கரையை சேர்த்து விடாமல் கிளறவும்.
சர்க்கரை caramalise ஆகி தண்ணீர் விட்டு ஜீரா போன்ற பதத்தை அடையும்.
இந்த நிலையில் பாலை சேர்க்கவும்.
பால் நன்கு சூடேறி கொதிக்கும் நிலை வந்ததும் கஸ்டர்ட் பவுடரை தனியே எடுத்து வைத்துள்ள பாலில் கலக்கி அடுப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் பாயசத்தில் விட்டு கலக்கவும்.
அடி பிடிக்காமல் இருக்கவும் கட்டி கட்டியாகாமல் இருக்கவும் விடாமல் கலக்கவும்.
சிறிது கெட்டியாகி பாயசம் பளபள என்று வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து குங்குமபூ இரண்டு மூன்று தூவி சுவைக்கவும்.
காரட்டின் மணம் மிக அருமையாக இருக்கும். அதனால் மணத்தை கூட்ட வேறு எந்த பொருளையும் சேர்க்க வில்லை.
விருப்பமானால் வெனிலா எஸ்சென்ஸ் ஒரு துளி சேர்க்கலாம்.
இந்த பாயசத்தின் நிறமே மிக அருமை! அதை விட சுவை மிக மிக அருமை!!

No comments:
Post a Comment