#தினைகுழிபணியாரம் : #தினை, #சிறுதானியம் வகைகளுள் ஒன்று.
ஆங்கிலத்தில் Foxtail Millet என்றும் அறிவியல் பெயர் Setaria Italica என்பதும் ஆகும்.
இதனை பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்புகளை காணவும்.
புன்செய் தானியங்கள்
தினை
தினையை கொண்டு குழி பணியாரம் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் :
1/2 கப் தோசை மாவு
1/2 கப் தினை
1 Tsp உளுந்து மாவு
1 Tbsp ரவா
1 சிட்டிகை சமையல் சோடா
காய்கறிகள் மாவில் சேர்க்க:
1 சிறிய அளவு வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1 Tbsp காரட், பொடியாக நறுக்கவும்
3 Tbsp குடை மிளகாய், பொடியாக நறுக்கவும்
1 அ 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும்
சிறிதளவு கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கவும்
10 கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
1 Tsp சீரகம்
தாளிக்க:
1 Tsp கடுகு
2 Tsp உளுத்தம் பருப்பு
2 Tsp கடலை பருப்பு
1 சிட்டிகை பெருங்கயபொடி
3 Tsp எண்ணெய்
செய்முறை:
தினையை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
அதனை ஒரு வாயகல பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் சமையல் சோடா நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
அதில் சீரகம், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும்.
ஒரு அடுப்பில் வாணலியையும் மற்றொன்றில் குழிபணியார கல்லையும் சூடாக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , பெருங்காயம் தாளித்த பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
பின்னர் காரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். கடைசியாக குடை மிளகாய் சேர்த்து சில மணி துளிகள் வதக்கி மாவில் சேர்த்து கலக்கவும்.
பணியார கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் இரண்டிரண்டு சொட்டு எண்ணெய் விடவும்.
இந்த தருணத்தில் சோடாவை 1 Tsp தண்ணீரில் கரைத்து மாவில் சேர்த்து கலக்கவும்.
ஒரு கரண்டியால் மாவை எடுத்து குழிகளை நிரப்பவும். மேலேயும் பணியாரத்தை சுற்றியும் ஒன்றிரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும்.
ஓரத்தில் சிவந்தவுடன் ஒரு தேக்கரண்டியால் திருப்பி விட்டு வேக விடவும்.
இரண்டு புறமும் பொன்னிறமானதும் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான தினை குழி பணியாரத்தை தேங்காய் சட்னியுடனோ அல்லது தக்காளி சட்னியுடனோ சுவைத்தால் அருமையாக இருக்கும்.

முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்
சிற்றுண்டி சமையல் வகைகள்
|
|
|
சிற்றுண்டி சமையல் வகைகள்
No comments:
Post a Comment