Search This Blog

Wednesday, February 19, 2014

Kanjeepuram Idly

#காஞ்சிபுரம்இட்லி : எனது மகள் பள்ளியில் படிக்கும் போது மதிய வேளை உணவிற்காக டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்வாள். அவளுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். இந்த இட்லியில் உளுத்தம் பருப்பின் அளவு பொதுவாக இட்லிக்கு போடும் அளவை விட அதிகமாகும். மற்றபடி செய்யும் முறை அதேதான். பொதுவாக உளுத்தம் பருப்பு அரிசியின் விகிதம் ஒன்றுக்கு நான்காகும். ஆனால் காஞ்சீபுரம் இட்லிக்கு ஒன்றுக்கு மூன்றாகும். மற்றும் மாவில் மிளகு சீரகப்பொடி சேர்க்கப் படுகிறது.
கடைகளில் இட்லி ரவா கிடைக்கும். அதனை இந்த இட்லிக்கு உபயோகப் படுத்தவும்.
மேலும் இட்லியை சிறிய தம்ளர்களில் செய்வது இதன் சிறப்பம்சமாகும்.
ஆனால் இங்கு எப்போதும் போல இட்லி தட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம்.

காஞ்சிபுரம் இட்லி

தேவையான பொருட்கள் :
1 கப்                                      இட்லி ரவா
1/3 கப்                                    உளுத்தம் பருப்பு
1 Tsp                                      உப்பு

மாவில் சேர்க்க :
1 Tsp                                    மிளகு
1 Tsp                                    சீரகம்
இரண்டையும் மிக்சியில் கரகரவென பொடித்துக்கொள்ளவும்.
2 Tsp                                   நல்லெண்ணெய்

செய்முறை :
உளுந்தை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு மிக்சியில் நுரை வரும் அளவிற்கு மைய அரைத்துக் கொள்ளவும்
>

இட்லி ரவாவை அளந்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் இட்லி ரவாவை எடுத்துக்கொள்ளவும்.
மாவை புளிக்க வைக்கும் போது மேலே எழும்பி வரத் தேவையான அளவு பாத்திரத்தில் இடம் இருக்க வேண்டும்.
அரைத்த உளுந்து மாவு மற்றும் உப்பு ஆகியவற்றை இட்லி ரவா உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்.
நன்கு கலக்கி 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் இரவே அரைத்து கலந்து வைக்கவும்.
மறுநாள் காலை இட்லி செய்ய ஏதுவாக இருக்கும்.

இட்லி ஊற்றுவதற்கு முன் மிளகுதூள் மற்றும் 2 Tsp நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

 இட்லி பானையை அடுப்பில் தண்ணீருடன் வைத்து சூடாக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.

இட்லி பானையை மூடி 5 முதல் 7 நிமிடங்கள் வேக விடவும்.
வெந்தவுடன் தட்டை வெளியில் எடுத்து தேக்கரண்டியால் இட்லியை பிரித்தெடுத்து பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து அடுக்கவும்.

இதனை சூடாக இருக்கும் போது சுவைத்தாலும் நன்றாக இருக்கும்.
ஆறினாலும் அருமையாக இருக்கும்.
விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சுவைக்கலாம்.

இங்கு காஞ்சீபுரம் இட்லி நெல்லிக்காய் சட்னி மற்றும் பீர்கங்காய் சட்னியுடன் பரிமாறப்பட்டுள்ளது.


மாவுடன் மிளகுபொடி கலந்துள்ளதால் இட்லியின் நிறம் வெண்மையாக வராது. சிறிது நிறம் கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் சுவை அபாரமாக இருக்கும்.





மற்ற சில சிற்றுண்டிகள் முயற்சி செய்து பார்க்க

இட்லி
இட்லி
கோதுமை ரவா இட்லி
கோதுமை ரவா இட்லி
ரவா இட்லி
ரவா இட்லி
மசால் தோசை
மசால் தோசை
கொடிபசலைகீரை  பூரி
கொடிபசலை கீரை பூரி


தொட்டுக்கொண்டு ருசிக்க







No comments:

Post a Comment