Search This Blog

Wednesday, February 12, 2014

Milagu Kuzhambu

மிளகு குழம்பு : அஞ்சறைப்பெட்டி பொருட்களில் ஒன்றான மிளகு நமது மருத்துவத்தில் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றிற்கு உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. மிளகைப்பற்றி மேலும் அறிய
மிளகு 
http://en.wikipedia.org/wiki/Black_pepper

இங்கு மிளகு மற்றும் கருவேப்பிலை கொண்டு தயாரித்த மசாலாவை உபயோகப்படுத்தி எவ்வாறு சுவையான குழம்பு செய்யலாம் என பார்ப்போம்.
சுமார் 1 1/2 முதல் 1 3/4 கப் குழம்பு தயாரிக்க முடியும்.

மிளகு குழம்பு

தேவையான பொருட்கள் :
1 கோலி குண்டு அளவு                    புளி
1 Tsp                                                           சாம்பார் மிளகாய் தூள் 
1 Tsp                                                          அரைத்து விட்ட குழம்பு பொடி
1 1/2  Tsp                                                    உப்பு
1 சிட்டிகை                                             மஞ்சத்தூள்


1                                                                 வெங்காயம் [ பொடியாக நறுக்கவும்]
15-20 பற்கள்                                          பூண்டு [ பொடியாக நறுக்கவும்]
1/4 கப்                                                      மணத்தக்காளி [ கிடைத்தால்]
அரைக்க வேண்டிய பொருட்கள் :
3 Tsp                                                          தேங்காய் துருவல்
1 Tsp                                                          மிளகு
1 Tsp                                                          கசகசா
1 Tsp                                                         சீரகம்
1/4 கப்                                                      கருவேப்பிலை

தாளிக்க :
1 Tsp                                                          கடுகு
1/2 Tsp                                                       சீரகம்
8                                                                கருவேப்பிலை
4 Tsp                                                         நல்லெண்ணெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மிளகு இலேசாக பொரியும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் கருவேப்பிலையை வறுத்தெடுக்கவும்.


மற்ற பொருட்களை வறுக்கத் தேவையில்லை.


எல்லாவற்றையும் மிக்சியில் நன்கு மைய அரைத்தெடுக்கவும்.


இப்போது வாணலியில் 3 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
கடுகு மற்றும் சீரகம் பொரிந்தவுடன் கருவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு ஆகியவற்றை வரிசையாக போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.
இந்த நிலையில் கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து வதக்கவும்.


தீய விடக் கூடாது.
1/2 கப் தண்ணீர் விட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மணத்தக்காளி எடுத்திருந்தால் இந்த தருணத்தில் சேர்க்கவும்.


பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
அரைத்த மிக்சியையும் 1/2 கப் தண்ணீர் விட்டு கழுவி சேர்க்கவும்.
உப்பு சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

இப்போது புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும். புளி வாசனை போகும் வரை சுமார் 2 அ 3 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.


சுவையான மிளகுக்கே உரிய காரத்துடன் கூடிய குழம்பு தயார்.

மிளகு குழம்பு

 பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும்.
அதே போல பருப்புப்பொடி, கொத்தமல்லிபொடி, ஆளி விதை பொடி, ... போன்ற பொடி கலந்த சாதத்திற்கும் தொட்டு கொண்டு சாப்பிட உகந்த குழம்பாகும். 
சூடான சாதத்தில் குழம்பு ஊற்றி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து பிடித்தமான பொரியலுடன் சாப்பிடலாம்.








No comments:

Post a Comment