Search This Blog

Tuesday, February 18, 2014

Amaranth Neer Kozhukattai

அமராந்தம் நீர் கொழுக்கட்டை : அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இதுவரை அமராந்த் விதைகளை கொண்டு வெவ்வேறு பாயசம் செய்து பார்த்தோம். இந்த முறை அமராந்தம் மாவை கொண்டு கொழுக்கட்டை செய்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1/4                                              அமராந்தம் மாவு
1/8                                              உடைத்த சோளம்
1/8                                              அரிசி மாவு
1 Tbsp                                        ஓட்ஸ்
2 Tbsp                                       தேங்காய் துருவல்
1/2 Tsp                                      உப்பு


1 Tsp                                         வெங்காயம்
1 Tsp                                         காரட் துருவியது [ இருந்தால் ]
2 Tsp                                         பச்சை பட்டாணி  [ இருந்தால் ]
1அ 2                                        காளான், பொடியாக அரியவும்  [ இருந்தால் ]
கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு.

தாளிக்க :
1/2 Tsp                                      கடுகு
1/2 Tsp                                     உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                     சீரகம்
1 அ 2                                      சிவப்பு மிளகாய்
1 சிட்டிகை                          பெருங்காய தூள்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அமராந்தம் மாவு, உடைத்த சோளம், அரிசி மாவு, தேங்காய் துருவல், ஓட்ஸ் மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


அடுப்பில் வேறொரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
பிசைந்த மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை மெதுவாக சேர்க்கவும்.


சேர்த்தவுடன் கரண்டியால் கிளற வேண்டாம்.
தீயை சிறியதாக்கி 3 நிமிடங்கள் உருண்டைகளை வேக விடவும்.
பிறகு ஒரு கரண்டியால் உருண்டைகளை உடைக்காமல் கிண்டி விடவும்.


உருண்டையின் உள்  வரை வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.


கொதித்த தண்ணீரும் தற்போது கஞ்சி பதத்தில் இருக்கும்.
இந்த கஞ்சியை கீழே கொட்டிவிட வேண்டாம்.
உப்பு அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி என்னை விட்டு கடுகு மற்றும் சீரகம் வெடிக்க விடவும்.
பிறகு மிளகாயை கிள்ளி  போட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க விட்டு கருவேப்பிலையை சேர்க்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.


மற்ற காய்களையும் உப்புடன் சேர்த்து வதக்கியபின் தண்ணீரில் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து நன்கு கிளறவும்.
விருப்பப்பட்டால் சிறிது மிளகுதூள் தூவி இறக்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி சுவைக்கவும்.
அருமையான கொழுக்கட்டை தயார்.









No comments:

Post a Comment