Search This Blog

Thursday, February 20, 2014

Tomato Kothamalli Chutney

#தக்காளிகொத்தமல்லிசட்னி : சில மாதங்களுக்கு முன்பு வரை வெங்காயத்தின் விலையும் தக்காளியின் விலையும் அதிகமாக இருந்ததால் இந்த #சட்னி செய்வதை மறந்தே போய் விட்டேன். இப்போது விலை சகஜ நிலைக்கு வந்து விட்டதால் இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இட்லிக்கு தொட்டுக் கொள்ள இந்த சட்னியை செய்தேன். இனி எவ்வாறு என்று பார்க்கலாம்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள் :
3  சிறிய அளவு                                            நாட்டு தக்காளி
12                                                                    சின்ன வெங்காயம்
3 பற்கள்                                                        பூண்டு
1/2 கப்                                                            கொத்தமல்லி
1 Tsp                                                               கடுகு
1 1/2 Tsp                                                          கருப்பு உளுத்தம் பருப்பு
1 சிறிய  துண்டு                                          பெருங்காயம்
3/4 Tsp                                                            உப்பு
1 Tsp                                                              எண்ணெய்

செய்முறை :
மைக்ரோவேவ் பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை எடுத்துகொள்ளவும்.
ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு குலுக்கவும்.


மைக்ரோவேவ் ஹையில் 1 1/2 நிமிடம் சூடாக்கி வெளியில் எடுக்கவும்.
அதிலேயே தக்காளி துண்டுகளை சேர்த்து மேலு இரு துளி எண்ணெய் விட்டு 3/4 நிமிடம் சூடாக்கவும்.
தக்காளி வெந்தால் போதுமானது.


இதனை ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்டு சிகப்பு மிளகாயை வறுத்தெடுக்கவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
இப்போது உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்தெடுக்கவும்.
கடைசியாக பெருங்காயத்தையும் வறுத்து எடுக்கவும்.


முதலில் வறுத்த பொருட்களை உப்புடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
அதில் ஆறவைத்துள்ள வெங்காயம் தக்காளியை போட்டு நன்கு அரைக்கவும்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அரைத்து உப்பு சரி பார்த்து


 பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

தக்காளி கொத்தமல்லி சட்னி

இட்லி, பணியாரம், தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சட்னி ஆகும்.

குறிப்பு :
மைக்ரோவேவ் இல்லையெனில் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.



No comments:

Post a Comment