Search This Blog

Wednesday, February 26, 2014

Tomato Thokku

#தக்காளிதொக்கு : #தக்காளி தொக்கு என்  மகளுக்கு மிக மிக பிடித்தமான ஒன்றாகும். இதனை கொண்டு #கலந்தசாதம் செய்யலாம். மேலும் பூரி, தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும்.
எப்படி செய்யலாம் என காணலாம்.

தக்காளி தொக்கு


தேவையான பொருட்கள் :

தக்காளி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

4                                                தக்காளி [ பெங்களூர் ரகம் ], சாறு எடுக்கவும்.
2                                               வெங்காயம், மிகவும் பொடியாக அரியவும்.
7 பற்கள்                                பூண்டு, மிகவும் பொடியாக அரியவும்
சிறிய துண்டு                     இஞ்சி [ விருப்பப்பட்டால் ], பொடியாக அரியவும்
3                                               பச்சை மிளகாய், மிகவும் பொடியாக அரியவும்
1/4 கப்                                     கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
15                                            கருவேப்பிலை
  சேர்க்க வேண்டிய பொடிகள் :
1/2 Tsp                                     பெருங்காய தூள்
3/4  Tsp                                    மிளகாய் தூள்
1/4 Tsp                                     மஞ்சத்தூள்
1/2 Tsp                                     சீரகத்தூள்

தாளிக்க :
1 Tsp                                       கடுகு
2 Tsp                                       உளுத்தம் பருப்பு
3 Tsp                                       கடலை பருப்பு
3 Tsp                                       நிலக்கடலை [ இருந்தால் ]                     
6 அ 7 Tsp                               நல்லெண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை மிதமான தணலில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
 எண்ணெய் சூடானதும்  கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலையை சேர்த்து வறுக்கவும்.
சிவந்த பின் பெருங்கயத தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்தவுடனேயே கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.


இதன் பிறகு பூண்டு, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது  பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.


இந்த சமயத்தில் மற்ற பொடிகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கியபின் தக்காளி சாரை சேர்த்து கலக்கவும்.


சிறிய தீயில் தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும்.


 தண்ணீர் ஏறக்குறைய சுண்டிய பின் உப்பு சேர்த்து கிளறவும்.


எண்ணெய் வெளியே வரும் வரையும் தொக்கு வாணலியில் ஒட்டாமல் சுருண்டு சிறிது பளபளப்பாகும் வரையிலும்  அடுப்பில் வைத்திருக்கவும்.

தக்காளி தொக்கு

இதனை செய்ய சற்றேறக்குறைய 45 நிமிடங்கள் ஆகும்.
சூடு நன்கு ஆறிய பின் ஒரு பீங்கான் கிண்ணத்திலோ அல்லது சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தலாம்.         

தக்காளி தொக்கு


சாதத்தில் கலந்து தக்காளி சாதம் செய்யலாம்.
வெளி ஊர்களுக்கு செல்லும் போது பயணத்தில் இட்லி, சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட பயன் படுத்தலாம்.
வெங்காயம் இருப்பதால் வெகு நாட்களுக்கு வெளியில் வைத்து உபயோகப் படுத்த முடியாது.
குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தி நான்கைந்து நாட்களுக்கு உபயோகப்படுத்தலாம்.









No comments:

Post a Comment