Search This Blog

Tuesday, March 29, 2016

Beetroot-Vazhaipoo-Poriyal

#பீட்ரூட்வாழைப்பூபொரியல் : #வாழைப்பூ #துவர்ப்பு சுவையுடையது என நாம் அனைவரும் அறிவோம். அறுசுவைகளில் ஒரு சுவையான துவர்ப்பு சுவை நமது உணவில் இடம் பெறுவது மிகவும் அத்தியாவசியமாகும். வாழைப்பூ துவட்டல் செய்தால் அதன் சுவை காரணமாகவே பலரும் சாப்பிட விருப்பபட மாட்டார்கள். அதன் சுவையை மட்டுபடுத்த பருப்பு உசிலி செய்தால் சுவைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் பருப்பு உசிலி செய்ய சிறிது அதிக நேரம் தேவை.  அதனால் பிற காய்கறிகளுடன் வழைப்பூவை சேர்த்து பொரியல் செய்தால் சுவை மிக மிக அபாரமாக இருக்கும். எல்லோரும் விரும்பி உண்ணும் படியாகவும் இருக்கும்.
இதை கருத்தில் கொண்டு வாழைப்பூ, பீட்ரூட் மற்றும் குடை மிளகாய் சேர்த்து  பொரியல் செய்து பார்த்தேன். சுவை மிக மிக அருமையாக இருந்தது.

பீட்ரூட் வாழைப்பூ பொரியல்


தேவையான பொருட்கள் :
1/2 கப்வாழைப்பூ பொடியாக நறுக்கியது
3/4 கப்பீட்ரூட் துருவியது
3 Tspகுடை மிளகாய் பொடியாக நறுக்கியது
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
2 சிட்டிகைமஞ்சத்தூள்
6 or 7கறுவேப்பிலை [ optional ]
1 Tspசாம்பார் பொடி
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
1 Tspஎண்ணெய்

அலங்கரிக்க தேவையான கொத்தமல்லி தழை

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகு போட்டு வெடித்த பின்னர்  உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து கறுவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கிய பிறகுகுடைமிளகாயை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
அடுத்து  சாம்பார் பொடி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது துருவிய பீட்ரூட் மற்றும் வாழைப்பூவை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி பீட்ரூட் மற்றும் வாழைப்பூ வேகும் வரை அடுப்பின் மேல் சிறிய தீயில் வேக விடவும்.
வெந்ததும் மூடியை எடுத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு தயாரித்த பொரியலை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

மதிய உணவின் போது சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




பீட்ரூட் வாழைப்பூ பொரியல் பீட்ரூட் வாழைப்பூ பொரியல்






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
குதிரைவாலி வாழைப்பூ புலாவ்
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ
குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு
வாழைப்பூ விரல்கள்
வாழைப்பூ
விரல்கள்





Monday, March 14, 2016

Mint Dip

#புதினாடிப்   #புதினாதொட்டுக்க : காரமும் சிறிது புளிப்பும் புதினாவின் மணமும் கொண்ட அருமையான சட்னி என சொல்லலாம் இந்த புதினா டிப்.
இது தந்தூரி உணவு வகைகள் மற்றும் இளைய சோள வறுவல் போன்றவற்றிற்கு தொட்டுக்க உணவகங்களில் கொடுக்கப்படும். தயாரிப்பது மிக மிக எளிது.
புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் புதியதாக இருந்தால் மிக மிக வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். இதற்கு எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் புளிப்பில்லாமல் இருந்தால் அருமையாக இருக்கும். கொத்தமல்லி தழை மட்டுமல்லாமல் தண்டு பகுதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அடுப்பே பயன் படுத்தாமல் செய்யக்கூடிய சமையல் இந்த சட்னி!!

 புதினா டிப் எவ்வாறு செய்யலாம் என இங்கு காண்போம். 

Mint Dip


தேவையான பொருட்கள்:
1/2 கப்புதினா இலைகள்
1/2 கப்கொத்தமல்லி தழை
6 - 8பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
2 - 3பூண்டு பற்கள்
2 Tspபொட்டுக்கடலை [ வறு கடலை ]
3/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 - 1 1/2 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
1/4 கப்கெட்டித்தயிர்

செய்முறை :
புதினா மற்றும் கொத்தமல்லியை இரண்டு மூன்று முறை சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்கவும்.
தயிர் நீங்கலாக மற்ற அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியால் அடித்து கலக்கவும்.
பிறகு கடைசியாக மிக்ஸியில் அரைத்த விழுதுடன் சேர்த்து ஒரு நிமிடம் மிக்ஸியை ஓட விடவும்.
உப்பு மற்றும் புளிப்பு சரிபார்க்கவும்.
தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாறின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
அரைத்ததை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

பஜ்ஜி, சோள வறுவல், காளிப்ளவர் வறுவல், வடை போன்ற வறுத்த உணவு வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.



Mint Dip







மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்த்து சுவைக்க

  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.


வல்லாரை சட்னி பொடுதலை துவையல் கரிசலாங்கண்ணி துவையல்
இஞ்சி துவையல் பொங்கல் துவையல்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Thursday, March 10, 2016

Sigappu-keerai-masiyal 1

#சிகப்புக்கீரை மசியல் 1 : நான் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த போது #கீரை என்றாலே சிகப்பு தண்டு கீரைதான் கிடைக்கும். இந்த தண்டு கீரையின் இலைகள் சிறிது அழுத்தமாக இருக்கும். அதனால் பொரியல் செய்தால் மட்டும்தான் சுவைக்க முடியும். கூட்டோ அல்லது மசியலோ செய்தால் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது.
ஆனால் நான் ராய்ப்பூரில் வசித்த போது சிகப்பு முளை கீரை அதிகமாக கிடைக்கும். மிகவும் இளையதாகவும் நல்ல பீட்ரூட் நிறத்தை கொண்டதாகவும் இருக்கும். சுவையும் மிக மிக அருமையாக இருக்கும். #சிகப்புமுளைக்கீரை, சுருக்கமாக #சிகப்புக்கீரை கொண்டு செய்யப்படும் மசியல் எனக்கு மிகவும் பிடித்த சமையல் ஆகும். இப்போது இதனை கொண்டு மசியல் செய்யும் முறையை காணலாம்.


சிகப்புக்கீரை மசியல்



தேவையான பொருட்கள் :
ஒரு கைப்பிடிசிகப்பு முளை கீரை
2 or 3பூண்டு பற்கள்
1/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
சிகப்பு முளைக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு கீரையை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி அடுப்பின் மேல் வைத்து அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கி நீராவியை வெளியேற்றவும்.
அல்லது குழாயின் அடியில் வைத்து தண்ணீரை குக்கரின் மேல் ஓட விடவும்.
நீராவி உடனே அடங்கி விடும்.
குக்கரை திறந்து வெந்த கீரையை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆற விடவும்.

கீரை வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை ரசத்திலோ அல்லது சாம்பாரிலோ சேர்க்கலாம்.

மிக்ஸியில் உறித்த  பூண்டு பல்லை போட்டு ஒரு சுற்று சுற்ற விடவும்.
பிறகு திறந்து கீரையையும் உப்பையும் சேர்த்து சில மணித்துளிகள் அரைக்கவும்.

திப்பி திப்பியாக இருக்க வேண்டும். மைய அரைக்கக் கூடாது.

சூடான சாதத்தில் ஒன்றிரண்டு தேக்கரண்டி கீரை மசியலை போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ... சுவையே அலாதிதான்!!


Grind coarsely cooked Red Amaranth greens with salt and garlic.








சில சமையல் வகைகள் சமைக்க ருசிக்க


பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு முளை கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Wednesday, March 9, 2016

Samai-Arisi-Kanji-Dosai

#சாமைஅரிசிகஞ்சிதோசை : #சாமைஅரிசி சுருக்கமாக #சாமை #சிறுதானியங்கள் வகைகளுள் ஒன்றாகும். பொதுவாக சிறுதானியங்கள் பசைத்தன்மை அற்றவை. மேலும் சாப்பிட்டபின் அமிலத்தன்மை உருவாக்குவது இல்லை. கால்ஷியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் அரிசி மற்றும் கோதுமையை விட சாமையில் அதிக அளவு உள்ளது. புரதம் மற்றும் நார்சத்தும் அதிக அளவில் கொண்டுள்ளது. அதனால் கோதுமை மற்றும் அரிசிக்கு பதிலாக சிறு தானியங்களை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
சாமை அரிசியை கொண்டு கஞ்சி தோசை எவ்வாறு செய்வது என காணலாம்.


சாமை அரிசி கஞ்சிதோசை

தேவையான பொருட்கள் :
2 கப்சாமை அரிசி
1/2 கப்தேங்காய் துருவல் 
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை [ விருப்பப்பட்டால் ]

தோசை சுட்டெடுக்க தேவையான அளவு நல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சாமை அரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல்  ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

3/4 கப் முதல் 1 கப் வரை தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி மற்றொரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து இந்த மாவு கழுவிய தண்ணீர் உள்ள பாத்திரத்தை சிறிய தீயில் சூடாக்கவும்.
தொடர்ந்து கை விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
மாவு கலந்த தண்ணீர் சற்று நேரத்தில் கஞ்சி பதத்தை அடைந்து பளபளப்பாக மாறும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
தயாரித்த கஞ்சியின் மேல் ஆடை படியாமல் இருக்க அவ்வப்போது கரண்டியால் கலக்கி விடவும்.

ஆறிய கஞ்சியை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை கஞ்சி தோசை தயாரிக்கலாம்.

அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் ஒரு சுத்தமான காய்ந்த மெல்லிய சிறு துண்டு துணியை எண்ணெயில் இலேசாக நனைத்து தோசை கல்லை தடவி விடவும்.
இப்போது மாவை கல்லின் ஓரத்தில் இருந்து ஒரு வட்டமாக ஊற்றி நடு வரை நிரப்பவும்.
மேலே சில துளிகள் நல்லெண்ணெய் விடவும்.

வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
திருப்பிப் போட தேவையில்லை.
தோசை திருப்பியினால் தோசையின் மேலே விட்ட எண்ணெயை மெதுவாக தடவி பரப்பி விடவும். இல்லையென்றால்  தோசை வர வரவென்று ஆகி விடும்.
பிறகு கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

இந்த தோசையை ஆப்ப சட்டியிலும் சுட்டெடுக்கலாம்.
ஓரத்தில் மொறு மொறுவெனவும் நடுவில் மிருதுவாகவும் இருக்கும்.


பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி  சட்னியுடனும் நன்றாக இருக்கும்.

குருமா அல்லது கடப்பா ஆகியவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
samai arisi kanji dosai samai arisi kanji dosai

samai arisi kanji dosai


குறிப்பு :
மாவை புளிக்க வைக்காமல் உடனேயும் தோசை தயாரிக்கலாம். சுவை சிறிது மாறுபடும்.





மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து சுவைக்க

மசால் தோசை
மசால் தோசை
ரவா இட்லி
ரவா இட்லி
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
கேவுரு அடை
கேவுரு அடை
ரவா தோசை
ரவா தோசை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழே உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Friday, March 4, 2016

Araikeerai-Masiyal

#அரைக்கீரைமசியல் : பச்சை #கீரை யை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவது மிகவும் அவசியமாகும். அதற்கு #கீரைமசியல் மிக மிக எளிதான ஒரு வழியாகும்.
கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சிறிதளவு தண்ணீரில் வேகவைத்து எடுக்க வேண்டும். வேக வைத்த கீரை நன்கு ஆறிய பிறகு பூண்டு பற்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க வேண்டும். இந்த கீரை மசியலை சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது வத்தக் குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
பொதுவாக முளை கீரை, பாலக் கீரை, சிகப்பு முளை கீரை மற்றும் அரைக்கீரை ஆகியவற்றை கொண்டு கீரை மசியல் செய்தால் சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.


அரைக்கீரை மசியல்


தேவையான பொருட்கள் :
ஒரு கைப்பிடிஅரைக்கீரை
2 or 3பூண்டு பற்கள்
1/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
அரைக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு கீரையை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி அடுப்பின் மேல் வைத்து அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கி நீராவியை வெளியேற்றவும்.
அல்லது குழாயின் அடியில் வைத்து தண்ணீரை குக்கரின் மேல் ஓட விடவும்.
நீராவி உடனே அடங்கி விடும்.
குக்கரை திறந்து வெந்த கீரையை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆற விடவும்.

கீரை வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை ரசத்திலோ அல்லது சாம்பாரிலோ சேர்க்கலாம்.

மிக்ஸியில் உறித்த  பூண்டு பல்லை போட்டு ஒரு சுற்று சுற்ற விடவும்.
பிறகு திறந்து கீரையையும் உப்பையும் சேர்த்து சில மணித்துளிகள் அரைக்கவும்.

திப்பி திப்பியாக இருக்க வேண்டும். மைய அரைக்கக் கூடாது.

சூடான சாதத்தில் ஒன்றிரண்டு தேக்கரண்டி கீரை மசியலை போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ... சுவையே அலாதிதான்!!

அரைக்கீரை மசியல்






சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க


பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு முளை கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழே உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.