#பப்பாளிஅன்னாசிசாலட் : #பப்பாளிக்காய் மற்றும் #அன்னாசி உபயோகித்து செய்த இந்த #சாலட் மிகவும் ருசியும் சத்தும் நிறைந்தது.
பப்பாளிக்காய் பப்பாளி பழத்தை விட உடலுக்கு மிகவும் நல்லது. இதன் காயில் பப்பாயின் [ papain ] மற்றும் கைமோபப்பாயின் [ chymopapain ] ஆகிய என்ஸைம்கள் அதிக அளவில் உள்ளன. இவை செரிமானத்திற்கும் முக்கியமாக கொழுப்பை கரைப்பதற்கு நோய் எதிர்ப்பதற்கும் உதவுகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பப்பாளி காயை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
நார்சத்து அதிக அளவில் கொண்டது.
அன்னாசியில் அறிய தாதுக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் C அதிக அளவில் கொண்டுள்ளது. நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
இத்தகைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளவற்றை கொண்டு ஒரு சத்தான மற்றும் சுவையான சாலட் செய்வதெப்படி என காணலாம்.
செய்முறை :
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

தேவையானவை : | |
---|---|
பெரிய துண்டு | பப்பாளிக்காய் |
3 or 4 துண்டுகள் | அன்னாசி |
5 - 6 | வல்லாரை இலைகள் [ இருந்தால் ] |
1 tbsp | கொத்தமல்லி தழை நறுக்கியது |
7 - 8 | புதினா இலைகள், நறுக்கிக்கொள்ளவும் |
1 | பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும் |
1/4 Tsp | மிளகுப்பொடி |
1/2 Tsp | உப்பு [ அட்ஜஸ்ட் ] |
1/2 Tsp | எலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ] |
செய்முறை :
பப்பாளி காய் சிறிது செங்காயாக எடுத்துக்கொள்ளவும்.
அதே போல அண்ணாச்சியும் செங்காயாக இருந்தால் சாலட் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
இவை இரண்டையும் மெல்லிய நீள நீள துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு சுத்தமான பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து விடவும்.
அவரவர் சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சரி பார்க்கவும்.

சுவையும் சத்தும் நிரம்பிய அருமையான சாலட் தயார். இதனை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
உண்டு மகிழுங்கள்!!!
உண்டு மகிழுங்கள்!!!
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க
|
|
|
||||||
|
|