#மாங்காய்பச்சடி : கோடை என்றதுமே நினைவிற்கு வருவது மாங்காய்தான். என்னதான் புளிப்பாக இருந்தாலும் சப்புக்கொட்டி கொண்டு சாப்பிடுவதே ஒரு அனுபவம்தான்.
தமிழ் புது வருடப்பிறப்பு அன்று #மாங்காய் பச்சடியை வேப்பம் பூவுடன் செய்து புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.
மாங்காயை கொண்டு இங்கே இனிப்பு பச்சடி எப்படி செய்வது என பார்க்கலாம்.
மிகவும் புளிப்பில்லாத நீட்ட கிளிமூக்கு மாங்காய் [ பெங்களூரா ] பச்சடிக்கு உகந்தது.
தேவையான பொருட்கள் :
1 மாங்காய்
1/3 கப் வெல்லம்
1/2 Tsp உப்பு
1 பச்சை மிளகாய்
செய்முறை :
மாங்காய் தோலை சீவி செதில் செதிலாக செதுக்கி வைக்கவும்.
குக்கரில் 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பையும் பச்சை மிளகாயை கீறியும் சேர்த்து மாங்காயை ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
உடனே ஆவியை வெளியேற்றி குக்கரை திறக்கவும்.
வெல்லத்தை பொடித்து சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கி கரைய விடவும்.
அடுப்பில் குறைந்த தீயில் மூன்று நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அடுப்பை அணைத்து விட்டு ஒரு கண்ணாடி பாத்திரத்திலோ அல்லது பீங்கான் கிண்ணத்திலோ எடுத்து வைக்கவும்.
சுவையான இனிப்பு மாங்காய் பச்சடி தயார்.
அவரவர் விருப்பப்படி எல்லாவகையான சாதத்துடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
குறிப்பு :
வெல்லத்தின் அளவும் உப்பின் அளவும் மாங்காயின் புளிப்பிற்கு ஏற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
வெல்லம் சேர்த்த பிறகு மிகுந்த நேரம் கொதிக்க விட கூடாது.
வெல்லம் கரைந்து மாங்காயுடன் ஒன்று சேர்ந்தாற்போல வந்தால் போதுமானது.
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க

|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment