Search This Blog

Saturday, November 16, 2013

Broken Wheat Pongal

கோதுமை ரவா பொங்கல் : பொங்கல் பொதுவாக அரிசியும் பருப்பும் கலந்து செய்யும் ஒரு உணவாகும். சூடான பொங்கலும் துவையலும் எங்களைனவருக்கும் இஷ்டமான உணவு. அதனால் அரிசியை தவிர பிற தானியங்களையும் கொண்டு சமைத்து பார்த்தேன். உடைத்த கோதுமையை கொண்டு செய்த போது மிக அற்புதமாக இருந்தது. இந்த கோதுமை ரவா பொங்கல் எப்படி செய்வது என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :

கோதுமை ரவா                            : 3/4 Cup


பயத்தம் பருப்பு                             : 1/4 Cup


சீரகம்                                              : 1 1/2 Tsp
மிளகு                                              : 1 Tsp
மிளகுத்தூள்                                   : 1 Tsp
கருவேப்பிலை                               : 10 - 15
பூண்டு பல்                                       : 3
மஞ்சத்தூள்                                     : 3 சிட்டிகை
உப்பு                                                  : 1 Tsp ( அட்ஜஸ்ட் )

தாளிக்க :
சீரகம்                                                          : 1 Tsp
மிளகு                                                         : 1 Tsp
கருவேப்பிலை                                         : 8
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் : 1 Tsp
முந்திரி பருப்பு                                         : 5
நெய்                                                           : 2 Tsp

செய்முறை :
கோதுமை ரவாவையும் பருப்பையும் நன்றாக கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும்.
3 1/2 கப் தண்ணீர்ஊற்றவும்.


ஒரு கரண்டியினால் கலக்கி விடவும்.


குக்கரை மூடி விசிலை பொருத்தவும்.


அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.

எண்ணெய்  சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் துண்டுகள் மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.


வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான பொங்கல் தயார்.

பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு துவையலுடன் பரிமாறவும்.


No comments:

Post a Comment