#கறுவேப்பிலைபூண்டுமிளகாய்சட்னி : முன்பொரு பதிவில் பூண்டுமிளகாய்சட்னி செய்யும் முறையை பார்த்திருக்கிறோம். அதே பூண்டு மிளகாய் சட்னியை வேறு ஒரு முறைப்படி செய்யும் போது அதன் சுவையும் மணமும் அருமையாக இருந்தது.
சிகப்பு மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து பின்னர் அரைக்கும் போது வெகு விரைவில் அரைபடுவதுடன் நன்கு ஒன்று சேர்ந்தாற்போல சாஸ் பதத்தில் கிடைக்கிறது.
முந்தைய பூண்டுமிளகாய்சட்னி யை விட கருவேப்பிலை இதில் அதிக அளவு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பதிவில் தங்களுடன் மற்றுமொரு பூண்டு மிளகாய் சட்னியின் செயல் முறையை பகிர்ந்துகொள்ள அவா.
சிகப்பு மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து பின்னர் அரைக்கும் போது வெகு விரைவில் அரைபடுவதுடன் நன்கு ஒன்று சேர்ந்தாற்போல சாஸ் பதத்தில் கிடைக்கிறது.
முந்தைய பூண்டுமிளகாய்சட்னி யை விட கருவேப்பிலை இதில் அதிக அளவு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பதிவில் தங்களுடன் மற்றுமொரு பூண்டு மிளகாய் சட்னியின் செயல் முறையை பகிர்ந்துகொள்ள அவா.
தேவையான பொருட்கள் : | |
---|---|
4 - 6 | சிகப்பு மிளகாய் |
1 Tsp | சிகப்பு மிளகாய் தூள் |
8 - 10 | பூண்டு பற்கள் |
ஒரு கைப்பிடி | கறுவேப்பிலை |
3/4 Tsp | உப்பு [ adjust ] |
ஒரு அகலமான பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் விட்டு சூடு படுத்தவும்.
அதில் சிகப்பு மிளகாயை 20 நிமிடங்கள் ஊற விடவும்.
20 நிமிடங்கள் கழிந்த பிறகு ஊறவைத்த சிகப்பு மிளகாய்,பூண்டு, உப்பு, கறுவேப்பிலை மற்றும் சிகப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை மிக்ஸி அரைக்கும் பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பின்னர் சிறிது தண்ணீர் விட்டு நன்கு மைய அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு சின்ன பீங்கான் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
இந்த கறுவேப்பிலை பூண்டு மிளகாய் சட்னி பூண்டின் மணத்துடன் கருவேப்பிலையின் மணமும் சேர்ந்து கலக்கலாக இருக்கும்.
ஆப்பம், தோசை, நீர் தோசை, கஞ்சி தோசை போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
காரம் அதிகமாக இருப்பதால் சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.
- அவரவர் சுவை மற்றும் மிளகாயின் காரதன்மைக்கு ஏற்ப சிகப்பு மிளகாயின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
- கறுவேப்பிலையின் அளவையும் விருப்பத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளவும்.
சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :
- கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.