Search This Blog

Tuesday, February 4, 2014

Amarnath Seeds Payasam 2

அமர்நாத் விதைகள் :  இது ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

அமராந்தம் கொண்டு முன்பு ஒரு பாயசம் எவ்வாறு செய்வது பார்த்தோம். இங்கு  அமராந்தம் உபயோகித்து வேறு ஒரு முறையில் பாயசம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
1 Tbsp                                         அமர்நாத் விதைகள் [ அமராந்தம் ]
1/2 கப்                                        பால்
1/4 கப் [ அட்ஜஸ்ட் ]            வெல்லம் பொடித்தது
ஜாதிக்காய் சிறு துண்டு அல்லது ஜாதி பத்திரி சிறு துண்டு.
3 அ 4                                         பாதாம் பருப்பு
1 சிட்டிகை                             உப்பு

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அமராந்தம் எடுத்துக் கொள்ளவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து  குக்கரில் சாதம் வேக வைப்பது போல் [ 3 விசில் மற்றும் 5 நிமிடம் SIM -ல்] வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வேகவைத்த அமராந்தம் விதைகள் 

ஜாதிக்காயை பொடித்து தனியே எடுத்து வைக்கவும்.

வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்.
கரைந்ததும் வடிகட்டி மீண்டும் ஒரு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு தனியே எடுத்து வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொள்ளவும்.
அதில் வேக வைத்த அமராந்தம் விதைகளை சேர்த்து 1 சிட்டிகை உப்புடன் அடுப்பில் சிறு தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
இல்லையெனில் அடி பிடித்துக் கொள்ளும்.


நன்கு கஞ்சி போல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு  ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து கலக்கி விடவும்.
ஜாதிக்காய் தூளை சேர்க்கவும்.
சுவையான ஒரு வித்தியாசமான பாயசம் தயார்.
ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து பாதாம் துருவலை தூவி பரிமாறவும்.

Amaranth seeds Payasam 

இவ்வகையில் செய்த பாயசத்தில் அமராந்த விதைகள் பல்லில் நறுக் நறுக் என்று கடி படுவது பாயசத்தின் சுவையை மேலும் கூட்டுகிறது.

 குறிப்பு :
பால் சேர்த்து செய்யும் போது வெல்லம் சேர்த்த பின் பாயசத்தை கொதிக்க விட்டால் திரிந்து விடும்.



No comments:

Post a Comment