#சுண்டல்வகைகள் : #சுண்டல் என்றதும் உங்களுக்கு கடற்கரை ஞாபகம் வருகிறதா? இது அதுவல்ல!.... இது அரிசி மற்றும் பச்சை பருப்பு கொண்டு பாரம்பரியமாக செய்யப் படும் ஒரு உணவு வகையாகும்.அரிசியும் பருப்பும் உபயோகித்துதானே பொங்கல் செய்யப்படுகிறது. பிறகு இதிலென்ன விசேஷம் என தோன்றுகிறதா??!! பொருட்கள் என்னமோ ஒன்றுதான். ஆனால் செய்முறையில் சிறிது வித்தியாசம். இந்த சிறு வித்தியாசம் சுவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடுகிறது.
பொங்கல் போல ஒன்று சேர்ந்து கொழகொழவென இல்லாமல் உதிர் உதிராக இருக்கும். அதனால் இதனை பழங்கால Fried Rice என கூறலாம்.
அரிசி உப்புமாவை போலவும் இதன் ருசி இருக்காது. பருப்பின் வாசனையுடன் மிக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
மேலும் இதன் சுவை அரிசியின் வகையை ஒத்ததாகவே இருக்கும்.
உதாரணமாக பாசுமதி அரிசியில் செய்யும் போது கிடைக்கும் சுவையும் பொன்னி, சோனாமசூரி போன்ற வகை பச்சரிசியுடன் செய்யும் போது அமையும் சுவையும் சிறிது வித்தியாசமாகவே இருக்கும்.
இது தவிர சிறு தானியங்கள் கொண்டும் சுவையான சுண்டல் செய்யலாம்.
இங்கு சுண்டல் வகைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
படத்தின் மீது ஒருமுறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பதிவுக்கு செல்லலாம்.

|
|
|
||||||
|
சுண்டலுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
மற்ற சட்னி வகைகள் கூடவும் ருசிக்கலாம்.