சுரைக்காய் கூட்டு : சுரைக்காய் தண்ணீர் சத்து அதிகமாக உள்ள காய்கறிகளில் ஒன்று. இந்த காயைக் கொண்டு கூட்டு, மோர் குழம்பு, அடை , சாம்பார் போன்ற பல பதார்த்தங்களை செய்யலாம். இவை எல்லாவற்றையும் விட சுரைக்காய் கூட்டு மிக சுவையாக இருக்கும். எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
150 கிராம் : சுரைக்காய்
1 சிறியது : பெரிய வெங்காயம்
1 சிட்டிகை : மஞ்சத்தூள்
3/4 Tsp : சாம்பார் பொடி
3/4 Tsp : உப்பு
2 Tbsp : வேக வைத்த பச்சை பருப்பு
அரைக்க :
3 Tsp : தேங்காய் துருவல்
1/4 Tsp : சீரகம்
1/4 Tsp : அரிசி மாவு
5 அ 6 : மிளகு
தாளிக்க :
1/2 Tsp : கடுகு
1 1/2 Tsp : உளுத்தம் பருப்பு
1/2 Tsp : எண்ணெய்
அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.
செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
சுரைக்காய் தேவையானதை அறிந்து எடுத்துக்கொள்ளவும்.
தேவையான பொருட்கள் :
150 கிராம் : சுரைக்காய்
1 சிறியது : பெரிய வெங்காயம்
1 சிட்டிகை : மஞ்சத்தூள்
3/4 Tsp : சாம்பார் பொடி
3/4 Tsp : உப்பு
2 Tbsp : வேக வைத்த பச்சை பருப்பு
அரைக்க :
3 Tsp : தேங்காய் துருவல்
1/4 Tsp : சீரகம்
1/4 Tsp : அரிசி மாவு
5 அ 6 : மிளகு
தாளிக்க :
1/2 Tsp : கடுகு
1 1/2 Tsp : உளுத்தம் பருப்பு
1/2 Tsp : எண்ணெய்
அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.
செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியிலோ அல்லது அடி கணமான பாத்திரத்திலோ 1/2 கப் தண்ணீர் விட்டு சாம்பார் பொடி , மஞ்சத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் வைக்கவும்.
வெட்டி வைத்துள்ள காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும்.
பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறி 5 லிருந்து 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
இந்த சுரைக்காய் கூட்டு ரசம் மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment