Search This Blog

Showing posts with label பொடி. Show all posts
Showing posts with label பொடி. Show all posts

Saturday, October 31, 2020

Liquid_Or_Powder_Mix_for_Rice

 சாதத்துடன் கலந்து சாப்பிட :

சாதத்துடன் கலந்து சாப்பிடக் கூடிய  கலவைகள் மற்றும் பொடிகள் ஆகியவற்றின் செய்முறைகளின் இணைப்புகளை இங்கு தொகுத்துள்ளேன்.  

மதிய உணவு உட்கொள்ளும் போது முதலில் பருப்பு சாதத்துடன் தொடங்குவதுதான் முறை. சாம்பார் அல்லது குழம்பு சாதம் சாப்பிடுவதற்கு முன்னர் பருப்பு சாதம் சுவைக்கப்படுவது வழக்கம். சூடான சாதத்தின் மேல்  வேகவைத்து உப்பு சேர்த்த துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பை போட்டு, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து, சாம்பார் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட வேண்டும்.

அவ்வாறு பருப்பு இல்லையெனில் முதலில் சாதத்துடன் கீரை மசியல் அல்லது கழனி சாறு [ பால் சாறு ] அல்லது துவையல் அல்லது பொடி போட்டு சாப்பிட்ட பின்னரே சாம்பார்/குழம்பு மற்றும் ரசம் என்று சுவைப்பது வழக்கம்.

கீரை மசியல் என்ற கலவை முளைக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, சிகப்பு முளைக்கீரை ஆகிய ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து பருப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் கடைந்து செய்யப்படுகிறது. பச்சை நிறம் மாறாமல் வேகவைத்த கீரையை பூண்டு  மற்றும் உப்பு சேர்த்து மத்து கொண்டு கடைந்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ செய்யலாம். இந்த கீரை மசியலை சூடான சாதத்தில் இட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக்கொண்டு சுவைத்தால் அருமையாக இருக்கும்.

கழனி சாறு என்றும் பால் சாறு என்றும் அழைக்கப்படும் கலவை மணத்தக்காளி கீரை அல்லது முருங்கைக்கீரை அல்லது அகத்திக்கீரை போன்ற கீரைகள் கொண்டு செய்யப்படுகிறது. தற்போது குறிப்புட்டுள்ள ஏதேனும் ஒரு கீரையை வேகவைத்து எடுத்தபின்னர் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட வேண்டும். பின்னர் தேங்காய் பால் எடுத்து கீரையுடன் சேர்த்து சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கி போட்டு செய்யப்படுகிறது. சூடான சாதத்தில் பால் சாறு கீரையுடன் சேர்த்து விட்டு நன்கு அழுத்திப் பிசைந்து சாம்பார் அல்லது காரக்கறியுடன் சுவைக்கலாம்.

விதவிதமான துவையல் வகைகள் பருப்பு, கீரை, மூலிகைகள் உபயோகித்து அரைத்து செய்யப்படுகிறது. அவ்வாறு அரைத்தெடுத்த துவையலை சூடான சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

இதைப்போலவே சாதத்துடன் பொடி சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாம்பார் அல்லது குழம்புடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.

தொக்கு போல எண்ணெய்ச்சட்டியில் அடுப்பின் மீது வைத்து செய்யப்படும் புளிக்காச்சல் மற்றும் தக்காளி தொக்கு போன்றவற்றையும் சாப்பாட்டில் முதலில் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சுவைத்து மகிழலாம்.

இணைப்புகளை சொடுக்கி தேவையான செயற்குறிப்பு பதிவுகளை அடையலாம்.



கீரை மசியல் வகைகள்
பாலக் கீரை மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல் 1
சிகப்பு கீரை மசியல் 1


பால்சாறு - கழனி சாறு வகைகள்
மணத்தக்காளிகீரை பால்சாறு
மணத்தக்காளிகீரை பால்சாறு
முருங்கைகீரை பால் சாறு
முருங்கைகீரை பால் சாறு


தொக்கு வகைகள்
புளிக்காச்சல்
புளிக்காச்சல்
தக்காளி தொக்கு
தக்காளி தொக்கு



துவையல் வகைகள்
இஞ்சி துவையல்
இஞ்சி துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
கொத்தமல்லிபுதினா துவையல்
பருப்பு துவையல்
பருப்பு துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
கரிசலாங்கண்ணி துவையல்
வேப்பம்பூ துவையல்
வேப்பம்பூ துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
நெல்லிக்காய் பீர்க்கங்காய் துவையல்
பிரண்டை துவையல்
பிரண்டை துவையல்
பீர்க்கங்காய் துவையல்
பீர்க்கங்காய் துவையல்
வல்லாரை துவையல்
வல்லாரை துவையல்
பொடுதலை துவையல்
பொடுதலை துவையல்
துரை துவையல்
துரை துவையல்


பொடி வகைகள்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
மிளகுப்பொடி ஆளிவிதையுடன்
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி
ஆளிவிதை பொடி
ஆளிவிதை பொடி
மிளகுப்பொடி
மிளகுப்பொடி


பல்வேறு சமையல் செயற்குறிப்புகள்




Friday, May 9, 2014

Podi Idly

#பொடிஇட்லி : மதிய உணவிற்காக கட்டி எடுத்துச் செல்ல இட்லி மிளகாய் பொடி தடவிய #இட்லி ஒரு அருமையான உணவாகும். சரியான முறையில் எண்ணெய் மற்றும் இட்லி மிளகாய் பொடி தடவி ஆற வைத்து டிபன் பத்திரத்தில் அல்லது பொட்டலம் கட்டி எடுத்து சென்றால் இரண்டு தினங்களுக்கு கூட கெடாமல் இருக்கும். இனி எப்படி என காணலாம்.


தேவையான பொருட்கள் ;
இட்லி தேவையான எண்ணிக்கை
இட்லி மிளகாய் பொடி தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
எடுத்து வைக்க மூடியுடன் கூடிய டிபன் பாத்திரம்.

செய்முறை :
சிறிது சூடாக இருக்கும் இட்லியின் இரண்டு புறமும் நன்கு எண்ணெய் தடவவும்.
பின்னர் மேல் பக்கத்தில் ஒரு தேக்கரண்டி [அவரவர் காரத்திற்கேற்ப ] வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தடவவும்.


பின் பக்கமும் அதே போல மிளகாய் பொடி தடவி வைக்கவும்.


நன்கு ஆறிய பின்னர் டிபன் பாத்திரத்தில் எடுத்து அடுக்கவும்.
மூடியால் மூடுவதற்கு முன் இட்லி நன்கு ஆறி விட்டதா என உறுதி செய்த பின்னரே மூட வேண்டும்.

வாழை இலைகொண்டும் கட்டி வைக்கலாம்.



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
இட்லி மாவு குதிரைவாலி இட்லி இட்லி சுடும் முறை
இட்லி உப்புமா சோள இட்லி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் செய்முறை விளக்கம்  மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Monday, February 10, 2014

Flax Seed Powder for Rice

#ஆளிவிதைபொடி : #ஆளிவிதை ஆங்கிலத்தில் Flax seed என அழைக்கப்படுகிறது.
இந்த ஆளி விதை உடலுக்கு எவ்விதத்தில் பயனளிக்கிறது என்பதை அறிய   click here.
 இந்த ஆளி விதையை கொண்டு பொடி எப்படி செய்வது என பார்ப்போம்.

ஆளி விதை

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                            ஆளி விதை
4                                                      சிகப்பு மிளகாய்
1 Tsp [ அட்ஜஸ்ட் ]                    உப்பு
6 பற்கள்                                       பூண்டு [ இஷ்டமானால் ]

செய்முறை :
அடுப்பில் வாணலியை மிதமான தீயில் சூடு பண்ணவும்.
ஆளி விதையை சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
விதைகள் நன்கு சூடேறியதும் ஒரு சேர பட படவென பொரிய ஆரம்பிக்கும்.
அப்படி ஒன்று சேர  பட படவென பொரியும் போது ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் எண்ணெய் விட்டு மிளகாயை சிவக்க வறுத்தெடுக்கவும்.
சூடு ஆறியதும் உப்புடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
நன்கு பொடியானதும் கடைசியாக பூண்டை சேர்த்து அரைக்கவும்.
மிக அருமையான  மிக்க வாசனையுடன் கூடிய  பொடி தயார்.

ஆளி விதை பொடி

ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.

சாதத்தில் தேவையான அளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாம்பார் தொட்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும்.









மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மிளகுப் பொடி
மிளகுப்
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி






Thursday, January 30, 2014

Idly Milagai Podi with Flax Seeds

#இட்லிமிளகாய்பொடிஆளிவிதையுடன்  : முன்பே #இட்லிமிளகாய்பொடி என்னென்ன பொருட்களை கொண்டு எப்படி அரைக்க வேண்டும் என பார்த்தோம். சென்ற முறை வறுத்த பருப்புடன் எள்ளையும் வறுத்து அரைத்தோம். இப்போது எள்ளுக்கு பதில் #ஆளிவிதை ( #FlaxSeeds ) உபயோகப் படுத்தி செய்வதெப்படி என பார்க்கலாம்.


ஆளி விதை

 தேவையான பொருட்கள் :
1/2 கப்                                 கடலை பருப்பு
1/2 கப்                                 உளுத்தம் பருப்பு
10                                         சிவப்பு மிளகாய்
1/4 கப்                                 ஆளி விதை
1 1/2 Tsp                               உப்பு
1 சின்ன கட்டி                  பெருங்காயம்
2 Tsp                                      நல்லெண்ணெய்
1/4 கப்                                  காய வைத்த கருவேப்பிலை

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து 1/2 Tsp எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் மிளகாயை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் 1/2 TSp எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொறித்து எடுக்கவும். தட்டில் எடுத்து வைக்கவும்.
இருக்கும் எண்ணெயிலேயே கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
இப்போது 1/2 Tsp எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பையும் பொன்னிறமாக வறுத்தெடுத்து தட்டில் வைக்கவும்.
கடைசியாக ஆளி விதையை  எண்ணெய் இல்லாமல் படபடவென பொறியும் வரை வறுத்து எடுக்கவும்.
உப்பையும் இலேசாக வறுத்துக் கொள்ளவும்.

இட்லி மிளகாய்பொடி ஆளிவிதையுடன் செய்ய தேவையான பொருட்கள்

ஆறிய பின் மிக்சியில் மிளகாய் உப்பு பெருங்காயத்தை மைய அரைத்துக் கொள்ளவும். பருப்பை  கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
ஆளி விதையை  நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி விடவும்.

இட்லி மிளகாய்பொடி ஆளிவிதையுடன்

காற்றுப் புகா வண்ணம் பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

இட்லியுடன் அல்லது தோசையுடன் சாப்பிட தேவையான அளவு பொடியை தட்டில் விட்டு அதன் மேல் நல்லெண்ணெய் விட்டு குழைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு எண்ணெயுடன் குழைத்ததை இட்லியுடன் தொட்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும்.

குறிப்பு :
  • நான் வசிக்கும் ராய்ப்பூர் கடைகளில் கிடைக்கும் மிளகாய் நிறம் கம்மியாக இருந்தாலும் காரம் மிக மிக அதிகம். அதனால் மிளகாய் அளவை குறைத்து கொடுத்துள்ளேன். காரத்திற்கு தக்கபடி தேவையான மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
  • எள்ளை பொடிக்கும் போது மூன்று நான்கு சுற்று சுற்றி நிறுத்தி மறுபடியும் மூன்று நான்கு சுற்று சுற்றி அரைக்க வேண்டும். இல்லாவிடில் சூட்டினால் பொடியாகாமல் எண்ணெய் விட ஆரம்பித்துவிடும். மிக்ஸி அரைக்கும் பாத்திரம் சூடானால் சிறிது ஆற விட்டு பின் அரைப்பது நலம்.
  • காய வைத்த கருவேப்பிலை இல்லையெனில் பச்சை கருவேப்பிலையை எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். 








மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மிளகுப் பொடி
மிளகுப்
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி




Monday, December 2, 2013

Pepper Powder

 #மிளகுப்பொடி : இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் தினந்தோறும் சமையலுக்கு உபயோகமாக இருக்கும். அதிகமாக அரைத்து வைத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் நாளாக நாளாக பொடியின் காரமும் மணமும் குறைந்து கொண்டே வரும்.

மிளகுப்பொடி

தேவையான பொருட்கள் :
மிளகு                                      : 1 Tbsp
சீரகம்                                       : 1 Tbsp
கருவேப்பிலை பொடி      : 1 tsp


செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் இல்லாமல் மிளகை முதலில் சூடு வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு அதே வாணலியில் சீரகத்தையும் சூடு வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
சூடு தணிந்ததும் மிக்ஸ்யில் பொடித்துக் கொள்ளவும்.
அதனுடன் கருவேப்பிலை பொடியை நன்கு கலக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து மூடி வைக்கவும்.
தேவை படும் போது ஈரமில்லாத தேக்கரண் டியால் எடுத்து பயன் படுத்தவும்.
உப்பும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

மிளகுப்பொடி

மிளகுபொடியை சூடான சாதத்தில் கலந்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையும் மணமும் இதமான காரத்துடன் அருமையாக இருக்கும்.

சாதத்துக்கு போட்டுக்கொள்ள பருப்பு தயார் செய்யும் போது உப்பு மட்டுமல்லாமல் மிளகு பொடியையும் கலந்து விட்டால் மிக நன்றாக இருக்கும்.

ரசம் தயாரித்து முடித்தவுடன் 1/4 Tsp மிளகு பொடியை தூவினால், ரசத்தின் மணம் மிக மிக அருமையாக இருக்கும்.


கூட்டு செய்யும் போதும் தேங்காய் அரைத்து சேர்க்கும் போது மிளகு பொடியை 2 அல்லது 3 சிட்டிகை போட்டு கொதிக்க வைத்தால் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்.

ரவா தோசை மாவில் 1 Tsp மிளகுப்பொடியை கலக்கி தோசை ஊற்றினால் சுவை நன்றாக இருக்கும்.






மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி