Sunday, July 9, 2017

Adai-Varieties

#அடை வகைகள் : தமிழ் மக்களுக்கு பிடித்தமான புரத சத்து நிறைந்த ஒரு பலகாரம்தான் அடை. புழுங்கரிசி [ இட்லி அரிசி ], பச்சரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஊறவைத்து அரைத்து எடுத்து வைக்க வேண்டும். அரைத்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அரைத்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை தாராளமாக போட்டு கலக்கி சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுத்தால் அடை தயார். அடை தோசையைப்போல் மெல்லியதாக இல்லாமல் சிறிது தடிமனாக சுட்டெடுக்க வேண்டும்.

அடை சிறிது தடிமனாக பரப்பி சுடப்படுவதால் தோசையை விட வேக சிறிது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

தோசையைப்போல் அல்லாமல் சிறிது அதிகமாக அடையின் மீதும் சுற்றியும் எண்ணெய் விட்டு சுட்டெக்க வேண்டும்.

இதைத் தவிர மெல்லியதாக வெட்டிய சுரைக்காய், பரங்கிக்காய், சௌசௌ முதலியவற்றையும், முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகளையும் சேர்த்தும் அடை செய்யலாம்.
துரித கதியில் அடை செய்ய அரிசிமாவு, கடலை மாவு, பயத்தம் மாவு போன்ற இன்ன பிற உலர்ந்த மாவு வகைகளை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து தண்ணீர் விட்டு கலக்கி மேற்சொன்ன காய்கறிகள் அல்லது கீரை கொண்டும் அடை செய்யலாம்.
அடையை கல்லிலிருந்து சூடாக எடுத்து தட்டில் இட்டு தாராளமாக நெய்யை அடையின் மீது பரப்பி அவியல் அல்லது தேங்காய் சட்னியுடன் சுவைத்தால் அற்புதமாக இருக்கும்.
அடையை சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
அடை வெல்லமும் சுவையான இணைகள்.
இது எதுவுமே இல்லாமல் அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

இங்கு அடை வகைகளின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இணைப்பை அழுத்தி பதிவை படித்து பின் செய்து சுவைத்து மகிழவும்.


அடை
அடை
சைவ ஆம்லெட்
சைவ ஆம்லெட்
அமராந்த் அடை
அமராந்த் அடை
கம்பு காலிப்ளவர் அடை
கம்பு காலிப்ளவர் அடை
கேழ்வரகு அடை
கேழ்வரகு அடை
பரங்கிக்காய் அடை
பரங்கிக்காய் அடை
பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ]
பெசரட்டு [ பயத்தம்பருப்பு அடை ]
சிறுபயறு பெசரட்டு
சிறுபயறு பெசரட்டு
வாழைப்பூ பசலை அடை
வாழைப்பூ பசலை அடை
வாழைப்பழ இனிப்பு அடை
வாழைப்பழ இனிப்பு அடை
சௌசௌ அடை
சௌசௌ அடை


அடைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி வகைகள் மற்றும் சாம்பார் / குழம்பு வகைகள் ஆகியவற்றிற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

தொட்டுக்க
Monday, May 15, 2017

Tomato-Jam

#தக்காளிஜாம் : #ஜாம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கடைகளில் கிடைக்கும் பாட்டிலில் அடைத்து விற்கப்படுபவையே! கடைகளில் பல பழங்கள் கொண்டு செய்யப்பட்ட #ஜாம், அன்னாசி ஜாம், மாம்பழ ஜாம் போன்ற  சில வகைகளே கிடைக்கும். #தக்காளி மட்டும் உபயோகித்து செய்த ஜாம் வகை கிடைக்காது. தக்காளி ஜாம் வகையை நாம் வீட்டிலேயே மிகவும் எளிதாக செய்யலாம். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
பெங்களூர் தக்காளியில் புளிப்பு சுவை குறைவாக இருக்கும். ஆனால் பழக்கூழ் அதிகமாக கிடைக்கும். நாட்டு தக்காளியில் புளிப்பு அதிகமாகவும், அரைத்தால் கிடைக்கும் பழக்கூழ் குறைவாகவும் இருக்கும். அதனால் உபயோகிக்கும் தக்காளியைப் பொறுத்து ஜாமின் சுவை மாறுபடும்.
இங்கு தக்காளியைக் கொண்டு சுவையான ஜாம் செய்யும் முறையை காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு தோராயமாக 300 ml ஜாம் தயாரிக்கலாம்.


தக்காளி ஜாம்


தேவையானவை :
2 கப்தக்காளி பழக்கூழ்
1 1/4 கப்சக்கரை
2 சிட்டிகைஉப்பு

செய்முறை :
ஜாமை எடுத்து வைக்க ஒரு கண்ணாடி பாட்டிலை கழுவி நீர் சிறிது கூட இல்லாமல் துடைத்து ஒரு மரப்பலகையில் மீது வைக்கவும்.

தக்காளி பழங்களை நன்கு கழுவிய பின்னர் நான்கு துண்டுகளாக்கவும்.
காம்பு பகுதியை நீக்கி விடவும்.
தேவையானால் விதைப் பகுதியை நீக்கிவிடவும்.
[ இங்கு விதையுடனே உபயோகப்படுத்தியுள்ளேன் ]
மிக்சியில் போட்டு அரைத்து பழக்கூழ் தயாரிக்கவும்.
அரைத்தெடுத்த பழக்கூழை அளந்து அடிகனமான பாத்திரத்தில் ஊற்றவும்.
சக்கரை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயின் மீது வைத்து கலக்கவும்.
சக்கரை முழுவதும் கரைந்த பின்னர் தீயை குறைத்து அடுப்பில் காய்ச்சவும்.
அவ்வப்போது கரண்டியால் கலந்து விடவும்.
அடுப்பில் கொதிக்கும் கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.
கரண்டியில் சிறிது எடுத்து பாத்திரத்தின் மேலே தூக்கிப் பிடிக்கும் பொது மளமளவென உடனே கரண்டியிலிருந்து கீழே வழிந்தால் இன்னும் அடுப்பில் இருக்க வேண்டும்.
சிறிது நேரம் கொதிக்க விட்டபின் மேலே சொன்னது போல மறுபடியும் கரண்டியில் எடுத்து பாத்திரத்தின் மேல் தூக்கி பிடிக்கவும்.
கரண்டியிலிருந்து ஜாம் கெட்டியாக சிறிது சிரமப்பட்டு ஒன்றாக கலவை கீழே விழுந்தால் ஜாம் தயார் என்று பொருள்.
அடுப்பை நிறுத்தி விட்டு மரப்பலகையின் மேல் வைத்துள்ள கண்ணாடி பாட்டிலில் நிரப்பவும்.
சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.
பின்பு மூடி பத்திரப்படுத்தவும்.
 சாதாரணமாக ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை அறை வெப்பத்தில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
குளிர் சாதனப்பெட்டியில் ஒரு மாதம் வரை கூட வைத்து உபயோகிக்கலாம்.
எப்போதும் ஜாமை பாட்டிலிலிருந்து எடுத்து உபயோகிக்க ஈரமில்லாத தேக்கரண்டியையே உபயோகிக்க வேண்டும்.
தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரட் ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.
தக்காளி ஜாம்

தக்காளி ஜாம்மேலும் சில சமையல் குறிப்புகள் :

dulce de lache - candy of milk சாக்லேட் வெங்காய வற்றல் நெல்லிக்காய் மிட்டாய் தேன் நெல்லிக்காய்Friday, April 7, 2017

Milagu-Podi-with-Flax-Seed

#மிளகுப்பொடிஆளிவிதையுடன் : நாம் நமது மூதாதையர் காலந்தொட்டு மிளகை சமையலில் உபயோகப்படுத்தி வருகிறோம். உணவிற்கு காரம் கொடுப்பதற்காக மட்டுமன்றி அதன் மருத்துவ குணங்களுக்காகவும் #மிளகு பயன்படுத்தப்படுகிறது. சளி, இருமல் மற்றும் செரிமானம் சம்பத்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக மிளகு செயல் படுகிறது.
#ஆளிவிதை உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தரக்கூடிய ஒரு அருமையான விதையாகும்.
இவ்விரண்டுடன் சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சத்தான ஒரு பொடி செய்வதெப்படி என காண்போம்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

தேவையானவை :
1/4 கப்மிளகு
1/4 கப்சீரகம்
1/4 கப்ஆளிவிதை
1 Tspஉப்பு
1 கைப்பிடிகாய்ந்த கருவேப்பிலை இலைகள்

செய்முறை :
ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து குறைந்த தீயில் சூடாக்கவும்.
ஆளிவிதையை போட்டு கைவிடாமல் கிளறவும்.
நல்ல மணத்துடன் படபடவென பொரிந்து வரும் பொது அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் கொட்டவும்.
அதே வாணலியில் மிளகு சேர்த்து சிறிது சூடு வரும் வரை வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே போல சீரகத்தையும் சூடு ஏறும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
நிழலில் காயவைத்து எடுத்து வைத்துள்ள கருவேப்பிலையை சூடான வாணலியில் போட்டு சூடாக்கவும்.
அதே தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆற விடவும்.


மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

ஆறியதும் மிக்சியில் உதவியுடன் நன்கு பொடியாக அரைத்து எடுக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து வைத்து பத்திரப்படுத்தவும்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி தயாரித்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து உண்ணலாம். ஆளிவிதையின் மணமும் மிளகின் காரமும் நல்ல சுவையை கொடுக்கும்.
சூப் மேல் தூவி உண்ணலாம்.
காய்கறி கொண்டு தயாரிக்கப்படும் சாலட் மற்றும் பழங்களின் சாலட் ஆகியவற்றின் மேலும் தூவி உண்ணலாம்.
ஆம்லெட் மீது தூவி சாப்பிடலாம்.

மிளகுப்பொடி ஆளிவிதையுடன்

மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
கரம் மசாலா பொடி
கரம் மசாலா
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முரு ங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி


Tuesday, April 4, 2017

Vazhakkai-Poriyal

 #வாழைக்காய்பொரியல் : #வாழைக்காய் உபயோகித்து ஒரு மிக மிக எளிமையான பொரியல் செய்யலாம். மரத்திலிருந்து உடனடியாக பறித்து செய்யும் போது மிக மிக சுவையாக இருக்கும்.

Vazhakkai [ raw banana ] Poriyal

தேவையானவை :
1வாழைக்காய்
2 சிட்டிகைமஞ்சத்தூள்
1 Tbsp தேங்காய் துருவல்
1/2 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
தேவையானவை :
1/2 Tspகடுகு
1சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉளுத்தம் பருப்பு
10கருவேப்பிலை இலைகள்
1 Tspஎண்ணெய்

கொத்தமல்லி தழை அலங்கரிக்க [ விருப்பப்பட்டால் ]

செய்முறை :
வாழைக்காயை தோல் சீவி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்டு மிளகாயை கிள்ளி போடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பையும் சேர்த்து சிவக்கும் வரை காத்திருக்கவும்.
கருவேப்பிலையை கிள்ளி போட்டு வாழைக்காயை 1/2 அங்குல துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் உப்பு சரி பார்த்து தேங்காய் துருவலை சேர்க்கவும்.
நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மதிய உணவிற்கு சாம்பார் மற்றும் ரசம் சாதம் ஆகியவற்றுடன் ருசிக்க அருமையாக இருக்கும்.


Vazhakkai [ raw banana ] Poriyal

குறிப்பு :
வாழைக்காயை அரிந்தவுடன் உபயோகப்படுத்தவும்.
இல்லையென்றால் அரிந்த துண்டுகளை தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அப்போதுதான் நிறம் மாறாமல் இருக்கும்.வாழைப்பூ பருப்புசிலி
வாழைப்பூ பருப்புசிலி
காலிப்ளவர் பொரியல்
காலிப்ளவர் பொரியல்
காலிப்ளவர் மஞ்சூரியன்
காலிப்ளவர் மஞ்சூரியன்
கேரட் பொரியல்
கேரட் பொரியல்
பலாமுசு மசாலா கறி
பலாமுசு மசாலா கறிSaturday, April 1, 2017

Pumpkin-Morekuzhambu

#பூசணிக்காய்மோர்க்குழம்பு : #மோர்க்குழம்பு என்றவுடன் நினைவிற்கு வருவது பூசணிக்காய் மோர்க்குழம்புதான். ஹோட்டலில் மதிய உணவுக்கு பரிமாறப்படும் மோர்க்குழம்பு கட்டாயமாக பூசணி மோர்க்குழம்பாகத்தான் இருக்கும். உப்பு காரம் புளிப்பு ஆகிய அனைத்தும் பூசணி துண்டுகளில் ஏறி இருக்கும். இந்த பூசணி துண்டுகளை சுவைக்கும் போது அதன் சாறு நாக்கில் பட்டு தொண்டையில் இறங்கும் போது ஆஹா.... அலாதிதான்!!
மோர்க்குழம்பு செய்முறை ஐந்து நிலைகளை கொண்டது.

  • தயிரை கரண்டியால் அடித்து சிறிது பெருங்காயம் மற்றும் நசுக்கிய இஞ்சி சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.
  • தேங்காய் மற்றும் அரைக்க வேண்டிய பொருட்களை நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
  • மோர்க்குழம்பில் சேர்க்க வேண்டிய காயை வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • வெந்த பின்னர் அரைத்த விழுது மற்றும் தயிர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • கடைசியாக தாளித்து கொட்ட வேண்டும். 

Pumpkin Morekuzhambu

 தேவையானவை :
1 கப்தயிர்
சிறிய துண்டுஇஞ்சி
2 சிட்டிகைபெருங்காய தூள்
150 கிராம்பூசணிக்காய்
1/4 Tspமஞ்சத்தூள்
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
அரைக்க :
3 Tspதேங்காய் துருவல்
1 Tspகடலை பருப்பு
1/2 Tspபச்சரிசி
1 Tspசீரகம்
1/2 Tspகொத்தமல்லி விதை
4 or 5மிளகு
2பூண்டு பற்கள்
4 or 5சின்ன வெங்காயம்
1 சிறியதுவெங்காயம்
1 or 2பச்சை மிளகாய்
1 or 2சிகப்பு மிளகாய்
சின்ன துண்டுஇஞ்சி
1/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/2 Tspசீரகம்
1 Tspஉளுத்தம் பருப்பு
1/4 Tspபெருங்காயத்தூள்
1சிகப்பு மிளகாய்
10கருவேப்பிலை
கொத்தமல்லி தழை வாசனையூட்டவும் அலங்கரிக்கவும்.

செய்முறை :
அரை மணி நேரம் முன்னதாக கடலை பருப்பு, பச்சரிசி, மல்லியை ஊறவைத்து கொள்ளவும்.
பூசணிக்காய் தோலை நீக்கிவிட்டு சிறு சதுர வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியினால் அடித்து கலக்கி பெருங்காயம் மற்றும்  இஞ்சியை இடித்து சேர்க்கவும். தனியே வைக்கவும்.
மிக்சியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தனியே எடுத்து வைக்கவும்.
குக்கரில் பூசணிக்காய் துண்டுகளை போட்டு 1/2 கப் தண்ணீர், 1 சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு உடனே வெயிட்டை தூக்கி நீராவியை வெளியேற்றவும்.

அதே குக்கரில் அல்லது வேறொரு பாத்திரத்தில் இட்டு அடுப்பின் மீது வைத்து  மிதமான தீயில் சூடாக்கவும்.
அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
கரண்டியால் கலக்கி விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து தீயை சிறியதாக்கி ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலை ஓரிரண்டு மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை கிள்ளி போடவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
பின் சீரகம், சிகப்பு மிளகாய் துண்டுகள்,உளுத்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை தாளித்து மோர் குழம்பின் மேல் ஊற்றவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.
Pumpkin Morekuzhambu
சூடான சாதத்தில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து பிடித்தமான கறியுடன் சாப்பிட்டால் ம்ம்ம்....... சுவையே தனிதான்!!...


மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு

morekuzhambu
வாழைப்பூ வடை மோர்க்குழம்பு
கடப்பா
கடப்பா - இட்லிக்கு தொட்டுக்க
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு