வெந்தய குழம்பு : இந்த குழம்பு வெந்தயத்தை ஊறவைத்து புளியுடன் தேங்காய் பால் ஊற்றி செய்யப்படுகிறது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகையால் நான் அடிக்கடி இந்த குழம்பை செய்வது உண்டு. இந்த குழம்பிற்கு அரைத்துவிட்ட குழம்பு பொடி தேவை. மேலும் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும்.
தேவையான பொருட்கள் :
1 Tbsp வெந்தயம்
2 Tsp அரைத்துவிட்ட குழம்பு பொடி
1 சிட்டிகை மஞ்சத்தூள்
1/2 Tsp மல்லித்தூள்
1 Tsp சாம்பார் பொடி
1 சின்ன நெல்லிக்காய்
அளவு புளி
1 பெரிய வெங்காயம்
10 இலைகள் கருவேப்பிலை
3 Tsp நல்லெண்ணெய்
1 Tsp கடுகு
2 Tbsp தேங்காய் துருவல்
செய்முறை :
முதல் நாளே வெந்தயத்தை கழுவிவிட்டு, ஒரு கிண்ணத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
மறுநாள் காலை தண்ணீரை வேறு பாத்திரத்தில் வடித்து தனியாக வைக்கவும்.
வெந்தயம் இருக்கும் கிண்ணத்தை மூடியினால் மூடி வைக்கவும்.
இப்படி செய்வதால் மதியம் நாம் சமைக்கும் போது முளை கட்டியிருக்கும்.
புளியை மிதமான சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை உரித்து தோல் நீக்கி அறிந்து கொள்ளவும்.
கருவேப்பிலையை கழுவி வைக்கவும்.
தேங்காய் துருவலிலிருந்து இளம் சூடான நீர் சிறிது சேர்த்து கையினால் பிசைந்து பால் எடுக்கவும்.
முதல் பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து தனியே வைக்கவும்.
இரண்டாம் முறை மூன்றாம் முறை எடுக்கும் பாலை தனியே வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
புளியை கரைத்து சாறு எடுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான தீயின் மேல் வைத்து சூடேற்றவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் வெந்தயத்தை இலேசாக வதக்கவும்.
இப்போது குழம்பு பொடி, சாம்பார் பொடி, மல்லித்தூள் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தனியாக எடுத்து வைத்துள்ள வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை சேர்க்கவும்.
2 நிமிடம் கொதிக்க விடவும்.
புளிதண்ணீரை சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை எடுத்த பாலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பால் சேர்த்த பிறகு தீயை நன்கு குறைத்து விடவும்.
கடைசியாக முதல் முறை எடுத்த தேங்காய் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பை நிறுத்தி விட்டு பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பருப்பு சாதம், கீரை மசியல் போட்டு பிசைந்த சாதம் மற்றும் பொடிசேர்த்து பிசைந்த சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிட ஏற்ற குழம்பாகும்.
சூடான சாதத்தின் மேல் ஒரு கரண்டி குழம்பு ஊற்றி 1 Tsp நல்லெண்ணெய்
சேர்த்து பிசைந்து விருப்பமான துவட்டலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment