Search This Blog

Sunday, December 8, 2013

Inji Thuvaiyal

#இஞ்சிதுவையல் : பொதுவாக நான் #இஞ்சி யை எலுமிச்சை ரசம், மோர் குழம்பு, உப்புமா, ..... போன்ற மிகச் சிலவற்றிலேயே மிகச் சிறிய அளவில் இஞ்சியை சேர்ப்பது வழக்கம். இஞ்சியின் வாசனை என் மகளுக்கு பிடிக்காது. அதனால் பெரும்பாலும் சமையலில் உபயோகப் படுத்துவது இல்லை.
தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் என் மகள் அவளுடைய ஆந்திராவைச் சேர்ந்த தோழியின் வீட்டில் இஞ்சி துவையலை சுவைத்து பார்த்தவுடன் மிகவும் பிடித்து விட்டது. அதனால் அவள் தோழியின் தாயாரிடம் கற்றுக்கொள்ள என்னை அறிவுருத்தினாள். நானும் தொலைபேசியில் அவரிடம் செய்யும் முறையை அறிந்துக் கொண்டேன்.
அதிக நாட்களுக்கு வைத்துகொள்வதற்காக நன்கு எண்ணையில் சுருள வதக்கி வைக்க வேண்டும் என்றார்கள். நான் அவர்கள் சொன்னபடியே செய்தேன். ஆனால் அரைத்தவுடன் அப்படியே எடுத்து வைத்து விட்டேன். மறுபடியும் எண்ணெயில் வதக்க வில்லை.

இஞ்சி துவையல்


தேவையான பொருட்கள் :

இஞ்சி

2 அங்குல துண்டு                            இஞ்சி
2 Tsp                                                     உளுத்தம் பருப்பு 
3 ( Adjust )                                            சிகப்பு மிளகாய் 
சின்ன நெல்லி அளவு                      புளி 
2 Tsp                                                    வெல்லம் 
3/4 Tsp                                                  உப்பு 
1 Tsp                                                     எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1/2 Tsp எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் சிகப்பு மிளகாயையும் உளுத்தம் பருப்பையும் வறுத்தெடுக்கவும்.


மிக்ஸி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் 1/2 Tsp எண்ணெய் விட்டு இஞ்சி துண்டுகளை நன்கு வதக்கவும்.
கடைசியாக புளியை இஞ்சியுடன்  சிறிது நேரம் வதக்கி எடுக்கவும்.


ஆறியவுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து தண்ணியில்லாமல் முதலில் அரைக்கவும்.


பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.


உப்பையும் இனிப்பையும்  சரி பார்க்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

இஞ்சி துவையல் [ இஞ்சி சட்னி ]

இந்த இஞ்சி துவையல் இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் போன்ற அனைத்து விதமான பலகாரங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.
சாதத்தில் நல்லெண்ணையுடன் கலந்து சாப்பிட்டாலும் மிக அருமையாக இருக்கும். 





மேலும் சில சட்னி வகைகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
பொடுதலை துவையல் நெல்லிக்காய் புதினா துவையல் கொத்தமல்லி தேங்காய் சட்னி
பிரண்டை துவையல் கரிசலாங்கண்ணி துவையல்



மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

சட்னி வகைகள்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



No comments:

Post a Comment