Search This Blog

Sunday, December 22, 2013

Mushroom Soup

#காளான்சூப் : #காளான் கள் எளிதில் வேகக் கூடியது. அதனால் எந்த வகையான சமையல் செய்யும் போதும் கடைசியில் சேர்த்து ஒன்றிரண்டு நிமிடம் வேகவைத்தாலே போதும். மேலும் வதக்கும் போது தண்ணீர் விடும். அதையும் சமைக்கும் போது  மனதில் கொள்ள வேண்டும். இங்கு மிகவும் இலகுவாக காளானை உபயோகித்து

காளான் சூப்

 ஒரு #சூப் செய்யும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
2 அ 3                               பட்டன் காளான்
1 Tbsp                              உடைத்த மக்காச்சோளம்
1 Tbsp                              மெல்லியதாக அரிந்த முட்டைகோஸ்
1 Tsp                                காரட் துண்டுகள்
2 Tsp                                பச்சை பட்டாணி
2 Tsp                                மெல்லியதாக அரிந்த வெங்காயம்
1 Tsp                                மெல்லியதாக அரிந்த பூண்டு
1 Tsp                                மெல்லியதாக அரிந்த இஞ்சி
1                                      பச்சை மிளகாய் ( தேவையானால் )
அலங்கரிக்க :
1/2 Tsp                            மிளகு பொடி
கொத்தமல்லி, வெங்காயத் தாள் அலங்கரிக்க தேவையான அளவு.

செய்முறை :
காளானை தண்ணீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.

காளான்

ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை சூடு படுத்தவும்.
இலேசான சூடு வந்ததும் காளான் தவிர  கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
சின்னதீயில் வேக விடவும்.
உடைத்த மக்காசோளம் நன்கு மலர்ந்து வெந்ததும் காளானை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
காளான் ஒரு நிமிடத்திலேயே வெந்து விடும்.
அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது உப்பு சேர்த்து கலக்கவும்.

சூப் கிண்ணத்தில் ஊற்றி அலங்கரித்து மிளகுதூள் தூவி பரிமாறவும்.
குளிர் கால மாலை வேளையில் அருந்துவதற்கு ஏற்ற பானமாகும்.

காளான் சூப் காளான் சூப்

முயற்சி செய்து பார்க்க :
மஷ்ரூம் பாலக் சூப்
மஷ்ரூம் பாலக் சூப்
கொத்தமல்லி சூப்
கொத்தமல்லி சூப்
தக்காளி சூப்
தக்காளி சூப்
பப்பாளிக்காய் சூப்
பப்பாளிக்காய் சூப்

No comments:

Post a Comment