அவரைக்காய் துவட்டல் / பொரியல் : பீன்ஸ் போலவே இந்த துவட்டல் செய்வதும் மிக மிக எளிது. அவரைக்காய் பல வகைகள் உண்டு. நான் இங்கு காண்பித்துள்ளது சற்று சதைப்பற்று அதிகமாக உள்ளது.
தேவையான பொருட்கள் :
1/4 கிலோ அவரைக்காய்
1 Tbsp தேங்காய் துருவல்
1/2 Tsp ( அட்ஜஸ்ட் ) சாம்பார் பொடி
1 சிட்டிகை மஞ்சத்தூள்
1/4 Tsp உப்பு
தாளிக்க :
1/2 Tsp கடுகு
1 Tsp உளுத்தம்பருப்பு
1 சிகப்பு மிளகாய் ( தேவையானால் )
1/2 Tsp எண்ணெய்
செய்முறை :
அடியும் நுனியும் வெட்டி எடுத்து ஓரத்தில் வரும் நாரை நீக்கி விடவும்.
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விடவும்.
அதில் சாம்பார் தூள், மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
வெட்டி வைத்த காயை சேர்க்கவும்.
மூடி வெயிட் வைத்து 1 விசில் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரிலிருந்து நீராவியை உடனடியாக வெளியேற்றவும்.
வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை சாம்பாருடன் சேர்க்கலாம்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும். தேவையானால் ஒரு சிகப்பு மிளகாயையும் கிள்ளி தாளிக்கலாம்.
இப்போது வேக வைத்த காயை சேர்க்கவும். கிளறி விடவும்.
தண்ணீர் சுண்டும் வரை கலந்து விடவும்.
ஏற்கனவே காய் வெந்து விட்டதால் மிகுந்த நேரம் கிளறிக் கொண்டே இருக்கக் கூடாது.
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற துவட்டல் ஆகும்.

காயை எடுத்து தனியாக வைக்கவும்.

தேங்காய் துருவலை சேர்க்கவும்.
ஏற்கனவே காய் வெந்து விட்டதால் மிகுந்த நேரம் கிளறிக் கொண்டே இருக்கக் கூடாது.
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற துவட்டல் ஆகும்.
No comments:
Post a Comment