Search This Blog

Friday, December 6, 2013

Thinai Paal payasam

#தினைபாயசம் : #தினை மாவைக் கொண்டு இனிப்பு உருண்டை செய்வதெப்படி என முன்பு பார்த்தோம். இப்போது திணையை உபயோகித்து பாயாசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தினை பாயசம்



தேவையான பொருட்கள் :
1 Tbsp                                           திணை
1 சிட்டிகை                                உப்பு
1 Tbsp ( அட்ஜஸ்ட் )                சர்க்கரை
1 கப்                                              பால்
1/4 tsp                                            ஏலக்காய் பொடி
4                                                    வறுத்த முந்திரி
1 Tsp                                              பாதாம் சீவியது

செய்முறை :
திணையை கழுவி பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மிக்ஸ்யில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.


ஒரு  பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொள்ளவும்.
அதில் அரைத்ததை கலந்து ஒரு சிட்டிகை உப்புடன் அடுப்பில் ஏற்றவும்.
மெல்லிய தீயில் கலந்து விட்டுக்கொண்டே இருக்கவும்.

தினை பாயசம்

அரைத்த விழுது பாலுடன் நன்கு கலந்து கஞ்சி போன்ற பதத்திற்கு வந்ததும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
மீண்டும் அடுப்பில் உள்ள கலவை நன்கு பளபளப்பாகவும் நல்ல கஞ்சி போல் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் பொடியை தூவவும்.

தினை பாயசம்

சிறிய கிண்ணத்தில் எடுத்து முந்திரி மற்றும் பாதாமினால் அலங்கரிக்கவும்.

மிக மிக அருமையான சுவையுடன் கூடிய திணை பாயாசம் தயார்.

தினை பாயசம்





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை பொட்டுக்கடலை
உருண்டை
தினை மாவு உருண்டை
தினை மாவு
உருண்டை
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை இனிப்பு குழி
பணியாரம்







No comments:

Post a Comment