Search This Blog

Monday, December 23, 2013

Varagu Arisi Thiruvaadhirai Kali

#வரகரிசிதிருவாதிரைகளி : #திருவாதிரைகளி ஆருத்ரா தரிசனம் அன்று சிவ பெருமானுக்கு படைப்பதற்காக செய்யப்படுகிறது. தமிழ் மாதமான மார்கழி மாதத்தின் பௌர்ணமி அன்று திருவாதிரை பண்டிகை கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தில் களியும் அரிசி வெல்ல அடையும் செய்யப்படுவது வழக்கம். பூஜை செய்யும் இடத்தில் சுவரில் கட்டம் போட்டு ஏழு வகையான நிறமுடைய பூக்கள் அல்லது பொருட்களால் அலங்கரிக்கப் படுவது வழக்கம். திருவாதிரை அன்று சில காரணங்களால் கொண்டாட முடியாமல் போகும் பட்சத்தில் பொங்கலுக்கு முன் போகி பண்டிகை அன்று கொண்டாடுவார்கள்.

வரகு அரிசி திருவாதிரை களி

இந்த களி அரிசி நொய், பருப்பு மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பாகும். வெல்லம் கொண்டு செய்யும் போது பதம் தப்பினால் கமர்கட் ஆகிவிடும் அபாயமும் உண்டு. ஆனால் குக்கரில் செய்யும் போது அந்த  பயம் இல்லை. இந்த முறை வரகரிசி கொண்டு முயற்சி செய்தேன். மிக அருமையான சுவையுடன் இருந்தது.
 வரகரிசியை ஆங்கிலத்தில் கோடோ மில்லெட் என அழைக்கப்படுகிறது. வரகு அரிசியின் அறிவியல் பெயர் Paspalum Scrobiculatum  அரிசியை போலவே இதனை சமையலில் உபயோக படுத்தலாம்.
மேலும் சிறு தானிய வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet

வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet

தமிழில் வரகு 

இங்கு குக்கரில் மிகவும் இலகுவாக களி  செய்வது எவ்வாறு என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி
தமிழ் : வரகரிசி ; English : Kodo Millet 

1/2 கப்                                    வரகு அரிசி
1 Tbsp                                     பயத்தம் பருப்பு
1/2 கப்                                    தேங்காய் துருவல்
1/2 கப்                                    வெல்லம்
3                                              ஏலக்காய்
1 சிட்டிகை                            உப்பு
2 Tsp                                        நெய்

செய்முறை :
வாணலியில் எண்ணெய் விடாமல் வரகரிசியை வறுக்கவும்.
வரகரிசி அதனுடைய நிறத்திலிருந்து நல்ல வெள்ளை நிறமாக மாறியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இப்போது பயத்தம் பருப்பை ( பச்சை பருப்பு ) சிவக்க வறுக்கவும்.
பருப்பை வருக்கும் நேரத்தில் வறுத்த வரகரிசியை தண்ணீர் விட்டு களைந்து கற்களை அகற்ற அரித்து எடுக்கவும்.
தண்ணீரை வடித்து விட்டு தனியே வைக்கவும்.
வறுத்த பருப்பை கொர கொர என மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.


வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இடித்து போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும்.
ஒரு கரண்டி கொண்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
வெல்லத் தண்ணீரை டீ வடிகட்டியால் மண்ணை அகற்ற வடிகட்டிக் கொள்ளவும்.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
குக்கரில் அரித்து வைத்துள்ள வரகரிசி, ஒன்றிரண்டாக உடைத்த பயத்தம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் உப்பை எடுத்துக்கொள்ளவும்.
களி  செய்ய 1 1/2 கப் திரவம் தேவை.
வெல்லத் தண்ணீருடன் மேலும் தண்ணீர் விட்டு 1 1/2 கப் அளவாக்கி குக்கரில் விடவும்.


குக்கரை மூடி வெயிட் வைத்து அதிக தீயில் மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின் தீயை குறைத்து 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

ஆவி முற்றிலும் அடங்கியபின் மூடியை திறக்கவும்.


நெய் விட்டு  நன்கு கலக்கி விடவும்.

வரகு அரிசி திருவாதிரை களி

சுவையான வரகரிசி களி தயார்.



மற்றும் சில சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
>
தினை மாவு உருண்டை
தினை  [ foxtail millet ]உருண்டை
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை [ foxtail millet ]குழி பணியாரம்
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு - ராகி புட்டு 
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்



No comments:

Post a Comment