Search This Blog

Wednesday, December 11, 2013

Lemon Rasam

எலுமிச்சை ரசம் : தினமும் ரசம் மதிய உணவுக்கு செய்வது அவசியமாகும். எப்போதும் புளியினால் செய்வதை விட சில சமயம் எலுமிச்சை பழச்சாற்றைக் கொண்டும் செய்யலாம். ஆனால் புளி ரசத்தை போல சூடு பண்ணி உபயோகப்படுத்த முடியாது. எப்படி செய்வது என பார்ப்போம். கொடுக்கப்பட்டுள்ள அளவு தோராயமாக 2 கப் செய்ய போதுமானது. மூன்று பேருக்கு தாராளமாக போதும். நான்கு பேர் சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள் :
1                              தக்காளி - நாட்டு தக்காளி நல்லது 
1                              பச்சை மிளகாய் 
2                              பூண்டு பற்கள் நசுக்கி கொள்ளவும் 
1 1/2 tsp                 உப்பு  ( adjust )
1 சிறியது            எலுமிச்சை பழம் 
1 Tbsp                    வேக வைத்த துவரம் பருப்பு 
1 சிட்டிகை         மஞ்சத்தூள் 

அரைக்க :


1/2 Tsp                  மிளகு 
1/2  Tsp                சீரகம் 
1/2  Tsp                சோம்பு 
1/4  Tsp               மல்லி விதை ( தனியா )
1                          சிவப்பு மிளகாய் ( காரம் விரும்பினால் )
1                          ஏலக்காய் ( விரும்பினால் )
6                           கருவேப்பிலை
சிறு துண்டு       இஞ்சி 
2 பற்கள்             பூண்டு 

தாளிக்க :
 Tsp                 கடுகு 
1/2  Tsp              சீரகம்
6                         கருவேப்பிலை 
 Tsp                 நல்லெண்ணெய் 

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிது 

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பருப்பை 1 கப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக்கி போடவும்.
பச்சை மிளகாய் நீள  வாக்கில் அரிந்து சேர்க்கவும். 
உப்பு சேர்க்கவும்.


கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ்யில் கொரகொரவென அரைத்து பாத்திரத்தில் சேர்க்கவும்.
மேலும் தண்ணீர் விட்டு மிக்ஸியை கழுவி அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கொதித்து மேல நுரையாக வரும் பொது அடுப்பை அணைத்து விடவும்.


அடுப்பை அணைத்தபின் எலுமிச்சை சாறை பிழிந்து கலக்கவும்.


இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு வெடித்தபின் சீரகம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தின் மேல் சேர்க்கவும்.
பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
ரசம் தயார்.


சூடான சாதத்தில் முதலில் ரசத்தின் தக்காளியை சேர்த்து பிசைந்து பிறகு தாராளமாக ரசத்தை ஊற்றி பிசையவும். அவரவருக்கு பிடித்தமான துவட்டலுடன் சாப்பிடவும்.
சாதத்துடன் மட்டுமல்லாமல் பானமாகவும் சூப் போல பருகலாம்.



No comments:

Post a Comment