Search This Blog

Saturday, December 28, 2013

Broken Maize Pidi Kozhukattai

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை : உடைத்த மக்காசோளம் கொண்டு நான் பொதுவாக கஞ்சி செய்வதுதான் வழக்கம். ஒரே மாதிரி கஞ்சி செய்வதற்கு பதிலாக வேறு ஏதாவது முயற்சி செய்யலாமே என்று யோசித்த போதுதான் இந்த கொழுக்கட்டை செய்யும் திடீர் யோசனை தோன்றியது. உடனே செயலில் இறங்கி விட்டேன். எப்படி என பார்க்கலாம்.

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :


1/4 கப்                                  உடைத்த மக்காசோளம்
1/4 கப்                                  அரைத்த அரிசி மாவு ( இட்லி மாவு அரைக்கும் போது எடுத்தது வைத்தது )
1/4 கப்                                   அரிசி மாவு
1/4 கப்                                   தேங்காய் துருவல்
1                                            சிவப்பு மிளகாய்
2 Tsp                                      உளுத்தம் பருப்பு
3 Tsp                                      கடலை பருப்பு
4 Tsp                                      நில கடலை
5                                             முந்திரி பருப்பு
10                                           கருவேப்பிலை 
1/4 Tsp                                   பெருங்காய பொடி
1/2 Tsp                                   உப்பு
1/2 Tsp                                  கடுகு
1/2 Tsp                                  சீரகம்
2 Tsp                                     எண்ணெய்

செய்முறை :
ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் மாவு, தேங்காய் துருவல், உப்பு மற்றும் உடைத்த மக்காசோளம் எடுத்துக்கொள்ளவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விட்டு பின் சீரகம் சேர்க்கவும்.
மிளகாயை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.
இதற்கு பிறகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, அடுத்து முந்திரி மற்றும் நில கடலை ஆகியவற்றை  ஒன்றிரெண்டாக உடைத்து சேர்க்கவும்.
எல்லா பருப்பும் சிவந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் மாவில் சேர்க்கவும்.

இலேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
கையில் சிறிது மாவு எடுத்து அழுத்தி மூடவும்.
ஒரு பிடி கொழுக்கட்டை செய்தாகி விட்டது.


அதே போல கொழுக்கட்டை பிடித்து எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கொழுக்கட்டை அடுக்கியுள்ள இட்லி தட்டை வைத்து மூடியினால் மூடவும்.


பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
பாத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு கொழுகட்டையை எடுத்து வெந்து விட்டதா என பார்க்கவும்.
வேக வில்லை என்றால் மறுபடியும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

எடுத்து தக்காளி  சாஸுடன் பரிமாறவும்.

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை





No comments:

Post a Comment