Search This Blog

Saturday, April 19, 2014

Muskmelon - Orange Juice

#முலாம்பழம்ஆரஞ்சுபானம் : #முலாம்பழம் வெவ்வேறு நிறத்தில் கிடைக்கின்றன. பொதுவாக எல்லாவற்றையும் முலாம் பழம் என்று தமிழிலும் #Muskmelon என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றோம். மேல்தோல் சிறிது அழுத்தமாகவும் அதனுள்ளே மிருதுவான இன்னொரு தோல் போன்ற பகுதியும் காணப்படுகிறது. இவ்விரு தோல்களை அடுத்து இனிப்பான மஞ்சள் கலந்த ஆரஞ்சு சதைப்பற்றும் நடுவில் விதைகளும் கொண்டவையாக இருக்கின்றன.
சில முலாம்பழ வகைகளில் வேறு நிறத்திலும் அமையபெற்றுள்ளது.


முலாம்பழம்

பழத்தில் இனிப்பு சுவை நன்றாக இருப்பதால் சர்க்கரை சேர்க்காமலேயே ஜூஸ் தயாரிக்கலாம். இனிப்புடன் சிறிது புளிப்பு சேர்த்தால் சுவை அருமையாக இருக்குமே என்று ஆரஞ்சு பழத்துடன் ஜூஸ் செய்தேன். மிக அபாரமாக இருந்தது. இனி எப்படி என பார்ப்போம்.

முலாம்பழம் ஆரஞ்சு பானம்

தேவையான பொருட்கள் :
1/2 முலாம் பழம் தோல் நீக்கி நடுவில் உள்ள விதைகளை நீக்கி அரிந்து வைக்கவும்.
ஆரஞ்சு பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
1 சிட்டிகை உப்பு
செய்முறை :
ஜூஸ் தயாரிக்கும் பாத்திரத்தில் பழத்துண்டுகளை எடுத்துக்கொள்ளவும்.
ஆரஞ்சு ஜூசையும் உப்பையும் சேர்த்து அடிக்கவும்.


பரிமாறும் கண்ணாடி கோப்பையில் ஊற்றி மேலே புதினா இலைகளால் அலங்கரித்து பருகவும்.
முலாம்பழம் ஆரஞ்சு பானம்

சுவையான முலாம்பழ ஆரஞ்சு ஜூஸ் தயார்.




இதையும் முயற்சி செய்யலாமே!!
பானகம்
பானகம்
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
முலாம்பழம் மாங்காய் பானம்
முலாம்பழம் மாங்காய் பானம்
முலாம்பழம் துளசி பானம்
முலாம்பழம் துளசி பானம்
முலாம்பழம் புதினா பானம்
முலாம்பழம் புதினா
பானம்

No comments:

Post a Comment