#வேப்பம்பூதுவையல் : கோடை காலம் ஆரம்பிப்பதை வேப்பம்பூதான் உணர்த்துகிறது. வேப்பமரத்தின் இலை, பூ, காய், பட்டை போன்ற அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் கொண்டதாகும்.
வேப்பம்பூ ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் [ antioxidant ] ஆகும். மேலும் குடலில் உருவாகும் பூச்சிகளை தடுக்க வல்லதாகும். மற்ற வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாக செயல் படுகிறது.
வேப்பம்பூவிற்கு ஒரு தனி மணம் உண்டு. வேப்பமரம் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கசப்புதான். வேப்பம்பூவிலும் கசப்பு சுவை உண்டு.
அந்தந்த காலங்களில் விளைவதை உண்ணுவது உடலுக்கு நல்லதாகும்.
அதனால் இதனை கொண்டு துவையல் எவ்வாறு செய்வது என காணலாம். கசப்பை குறைப்பதற்காக சிறிது வெல்லம் சேர்ப்பது நலம். அதே போல வேப்பம்பூவை நெய்யில் வதக்குவதால் அதன் கசப்பு சிறிது மட்டுப்பட்டு வாசனையும் தூக்கலாக தெரியும்.
இனி எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
2 Tsp வேப்பம்பூ காயவைத்தது
4 Tsp தேங்காய் துருவல்
1 Tsp உளுத்தம் பருப்பு
2 சிகப்பு மிளகாய்
4 மிளகு
1 Tsp வெல்லம்
1/4 Tsp பெருங்கயத்தூள்
சின்ன கோலிகுண்டு அளவு புளி
1/2 Tsp உப்பு
1/2 Tsp எண்ணெய்
1/2 Tsp நெய்
செய்முறை :
புளியை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற வைக்கவும்.
அட்டுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்கயதூளை வறுத்தெடுக்கவும்.
தனியே வைக்கவும்.
அதே வாணலியில் நெய் விட்டு வேப்பம்பூவை வதக்கவும்.
ஏற்கனவே நன்றாக காய்ந்து இருப்பதால் உடனே வறுபட்டுவிடும்.
அடுப்பை அணைத்து விட்டு மற்ற பொருட்களுடன் எடுத்து வைக்கவும்.
ஆறிய பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
பொங்கல் மற்றும் உப்புமாவிற்கு ஏற்ற சட்னியாகும்.
சாதத்திலும் நல்லெண்ணெய் விட்டு இந்த துவையலை சேர்த்து பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment