Search This Blog

Saturday, April 19, 2014

Spicy Neer More - Spicy Buttermilk

மசாலா #நீர்மோர் : கோடைகாலத்தில் மோர் எடுத்துக் கொள்ளவது உடலுக்கு மிக மிக நல்லது. உடலை குளிர்விப்பதோடு மட்டுமல்லாமல் உணவு செரிமானத்திற்கும் நல்லது. மோருடன் சேர்க்கப்படும் பெருங்காயம், இஞ்சி, கறுவேப்பிலை ஆகியவை செரிமானத்திற்கு உதவுபையாகும். பச்சை மிளகாய் சிறிது காரசாரமாக இருப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளது. பானம்

நீர் மோர்


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                       தயிர் [ புளிப்பாக இருப்பது நலம் ]
1/2                                               பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
5                                                  கறுவேப்பிலை
1 சிட்டிகை                             பெருங்காயம்
2 அங்குல துண்டு               வெள்ளரிக்காய்
1/2 அங்குல துண்டு            இஞ்சி
1/4 Tsp                                        உப்பு
சிறிது                                       கொத்தமல்லி தழை

செய்முறை :
தயிர் நீங்கலாக எல்லாவற்றையும் மிக்ஸியில் கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.
தயிரை ஸ்பூனால் நன்கு அடித்து கலக்கி அரைத்த பொருட்களையும் சேர்த்து கலக்கவும்.
விருப்பப்பட்டால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
மிக்ஸியில் உள்ளதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
மிக்சியையும் சிறிது தண்ணீர் விட்டு கழுவி அதனையும் சேர்க்கவும்.

கண்ணாடி கோப்பையில் ஊற்றி சில வெள்ளரிக்காய் துண்டுகளை தூவி பருகவும்.

வெள்ளரிக்காய் நீர்மோர்

வெய்யிலுக்கு ஏற்ற அருமையான சுர்ரென்ற நீர்மோர் தயார்!!

No comments:

Post a Comment