Search This Blog

Saturday, April 26, 2014

Vazhaipoo Paruppu Urundai

#வாழைப்பூபருப்புஉருண்டை : #வாழைப்பூவை உபயோகித்து பருப்பு வடை செய்து ருசித்தோம். எண்ணெயில் பொரிக்காமல் செய்யலாமே என்று ஆவியில் வேக வைத்து எடுத்தேன் மிக அருமையாக இருந்தது. செய்முறை வடையை போன்றே ஆகும். ஆனால் இட்லி பானையில் வேக வைக்க வேண்டும்.
இனி எப்படி என காண்போம்.



தேவையான பொருட்கள் :
ஊறவைக்க :
1/3 கப்                                    கடலை பருப்பு
1/3 கப்                                    துவரம் பருப்பு
1 Tsp                                        உளுத்தம் பருப்பு

அரைக்க :
1 அ 2                                      பச்சை மிளகாய்
1/2 Tsp                                     சீரகம்
1/2 Tsp                                     பெருஞ்சீரகம்
1/2 அங்குல                         இஞ்சி துண்டு
1/2 Tsp                                     உப்பு
2 சிட்டிகை                          பெருங்காய தூள்

மாவுடன் கலக்க அரிந்து வைக்கவும் 
1 சிறிய அளவு                   வெங்காயம்
12                                            கறுவேப்பிலை
25                                            வாழைப்பூ ஆர்க்குகள்
சிறிது                                    கொத்தமல்லி தழை

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள பருப்பை தண்ணீரில் இரு முறை கழுவி விட்டு முக்கால் மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறியதும் தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும்.
மிக்சியில் ஊறிய பருப்பு மற்றும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விடாமல் கொர கொரவென அரைத்தெடுக்கவும்.

அடுப்பில் இட்லி பானையை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும்.

இட்லி தட்டின் குழிகளில் எண்ணெய் தடவி வைக்கவும்.

அரிந்து வைத்துள்ள பூ, வெங்காயம், கறுவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்த மாவுடன் சேர்த்து பிசையவும்.

சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் அடுக்கவும்.

இட்லி பானையில் வைத்து ஆவியில் ஏழு நிமிடங்கள் வேக வைக்கவும்.

வெந்தததும் இட்லி பானையிலிருந்து பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.

இந்த உருண்டைகளை தொட்டுக்கொள்ள ஏதும் இன்றியும் சாப்பிடலாம்.
தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டும் சுவைக்கலாம்.

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவாகும்.







சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வாழைப்பூ குழம்பு வாழைப்பூ மிளகு குழம்பு வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்





No comments:

Post a Comment